வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி

பரமக்குடி நகர் பகுதியில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. 30-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி.க்கள் மூலம் ஆற்றுப்பகுதியில் உள்ள நாணல்கள், குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி
Published on

பரமக்குடி

பரமக்குடி நகர் தெளிச்சாத்தநல்லூர் முதல் காக்காதோப்பு வரை வைகை ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் தொடங்கி வைத்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன், முருகேசன் எம்.எல்.ஏ., பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது.கருணாநிதி, துணைத்தலைவர் குணா, பொதுப்பணித் துறை வருவாய்த்துறை ஊராட்சித்துறை நகராட்சி நிர்வாகம், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், பரமக்குடி வியாபாரிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர். 30-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி.க்கள் மூலம் ஆற்றுப்பகுதியில் உள்ள நாணல்கள், குப்பைகளை அகற்றி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com