search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trade Association"

    • நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு ரெயில்கள் இயக்க வேண்டும்.
    • வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் சங்க தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் உள்ள ஆன்மிக தலங்களில் காசியும், அதற்கு அடுத்தபடியாக தென் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள ராமேசுவரமும் உள்ளது. ராமேசுவரத்தில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படாமல் உள்ளது.குறிப்பாக தலைநகர் புது டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து ரெயில்கள் இயக்கப்படாமல் உள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து ராமேசுவரம் வர நினைப்பவர்கள் நேரடி ரெயில் சேவை இல்லாமல் சென்னை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு வந்து வேறு ரெயில்களில் மாறி ராமேசுவரம் வரவேண்டிய நிலை உள்ளது. வட மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ராமேசுவரம் வருகின்றனர். தமிழக பயணிகளும் வட மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ராமேசுவரத்திற்கு நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து நேரடி ரெயில்களை இயக்க வேண்டும். இது குறித்து ரெயில்வே வாரியத்திற்கும், ரெயில்வே அமைச்சருக்கும் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்திற்கு கூடுதலாக வந்தே பாரத் ரெயில்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராமநாதபுரம் மாநகராட்சியாக விரைவில் தரம் உயர்த்திய அரசுகக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
    • அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கவும் இந்த அறிவிப்பு உதவும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று ராமநாதபுரம் வர்த்தக சங்கம் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ராமநாதபுரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். இதற்கு ராமநாதபுரம் வர்த்தக சங்கத்தினர் தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்ச ருக்கும் நன்றியை தெரிவித்து உள்ளனர்.

    இது குறித்து ராமநாதபுரம் வர்த்தக சங்கத்தினர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் வர்த்தக சங்கம் சார்பில் ராமநாதபுரம் நகராட்சியை மாநகராட்சி யாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுக ளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ராமநாதபுரம் மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்த தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச் சருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    மாவட்ட தலைநகராக உள்ள ராமநாதபுரம் விரை வாக வளர்ச்சி அடையவும், பல புதிய தொழில்கள் தொடங்கவும், அதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும், அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கவும் இந்த அறிவிப்பு உதவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×