என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் தலைமையில் கண்டன கோஷமிட்டனர்.

    விலைவாசி உயர்வை கண்டித்து பாரதிநகரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ராமநாதபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தேவிபட்டினத்தில் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     ராமநாதபுரம்

    தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் ராமநாதபுரம் பாரதிநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலை மையில், மண்டபம் (மேற்கு) ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அ.தி.மு.க., அவைத்தலைவர் சாமிநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபா லசிங்கம், மாவட்ட சிறு பான்மை பிரிவு செயலாளர் தர்வேஸ், முதுகுளத்தூர் நகர் கழக செயலாளர் சங்கர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் தலைமையில் கண்டன கோஷமிட்டனர்.

    ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் பால்பாண்டி யன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் சரவணகுமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் வாலாந்தரவை ஜெயபால், மருதுபாண்டியர் நகர் ராஜேந்திரன், பாரதிநகர் தினகரன், மாரியப்பன், வசந்தநகர் வீரபாண்டியன், மாவட்ட ஜெ. பேரவை துணைச் செயலாளர் சங்கர் (எ) ஜெயச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கருணாகரன், மண்டபம் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்தி ரன், ஒன்றிய பொருளாளர் ரகுபதி ராஜா, ஒன்றிய துணை செயலாளர் தெய்வேந்தி ரன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், கங்காதேவி, மாவட்ட மீனவரணி துணை செயலாளர் வேலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க. மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் மணிகண்டன் தலைமையில், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையா முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக் கவுன்சிலர்கள் சுமதிஜெயக்குமார், செவத்தான் முனியாயி, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் பாக்கியநாதன், நாகநாதன், காஞ்சிரங்குடி பாலு, முன்னாள் கவுன்சிலர் சரண்யா நாகநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தேவிபட்டினத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அசோக்குமார் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் வழங்கினர்.

    ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டி யன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணகுமார், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் தேவிகா, ஒன்றிய கவுன்சிலர்களான ராஜ்குமார், குப்புராமு சாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

     

    • மாநில ஜூடோ போட்டிக்கு பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவி தேர்வாகினார்.
    • இதில் மாவட்டத்தை சேர்ந்த 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அளவிலான ஜூடோ போட்டிகள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தை சேர்ந்த 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி யுவஸ்ரீ பிரபா 17 வயதுக்குட்பட்ட 63 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழும் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.

    யுவஸ்ரீ பிரபா அடுத்த மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான ஜூடோ போட்டியில் பங்கு பெறுகிறார்.

    வெற்றி பெற்ற மாணவியையும், சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர்ராஜா, நிரோஷாபானு ஆகியோரை கீழமுஸ்லிம் ஜமாஅத் சபை தலைவர் சாகுல்கமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாக்கத்தலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் பள்ளியின் தாளாளர் ஷாஜஹான், தலைமை ஆசிரியர் அஜ்மல்கான், உதவி தலைமை ஆசிரியர் புரோஸ்கான் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • கருவூலம் மூலம் ஊதியம் வழங்க கோரி கிராம ஊராட்சி செயலர்களுக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடந்தது.
    • மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சார்லஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4 கட்ட போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முதற்கட்டமாக அரசுக்கு 1 லட்சம் கடிதங்கள் அனுப்பும் இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 1 லட்சம் கடிதம் அனுப்பும் இயக்கம் தபால் அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள் சங்க ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் சேகுஜலாலுதீன் முன்னிலை யில் நடந்தது.

    அனைத்துப் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், ஒன்றிய தலைவர் கஜேந்திரன், செயலாளர் மங்களசாமி, ஊராட்சி செயலர்கள் வாணி, நாகராஜ், பாலகிருஷ்ணன், லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து மாவட்ட துணைத்தலைவர் சேகு ஜலாலுதீன் கூறியதாவது:-

    கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி செயலர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், பணிக்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுநிலை. சிறப்புநிலை ஊதியம் வழங்க வேண்டும்.

    ஒய்வு பெற்ற ஊராட்சி செயலருக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வு பெறும் போது ஒட்டு மொத்த பணிக்கொடை ரூ.2 லட்சம் மற்றும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும்.

    கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்குவதுடன், மாத ஊதியத்தை ஊராட்சி மூலம் நேரடியாக வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கி அவர்களின் ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்கவும், ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலகம் நேரம் தாண்டி பணிகளை செய்ய நிர்ப்பந்தித்தல், இரவு நேரங்கள், விடுமுறை நாட்கள் அவசரப் பணி என்று சொல்லி காலநேரம் வழங்காமல் சாத்தியமற்ற பணிகளை உடனே செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் அளிப்பதையும், பணியில் நெருக்கடி நிலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த கடிதம் அனுப்பும் இயக்கம் நடந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கீழக்கரையில் கழிவுநீர் கலப்பதால் கடல் வளம் பாதிக்கும் அபாயம் ஏற்படும்.
    • உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் இருந்து தினந்தோறும் 15 லட்சம் லிட்டருக்கு மேற்பட்ட கழிவுநீர் நேரடியாக கடலில் கலந்து வருகிறது.

    பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்வதால் கீழக்கரை பகுதி கடலின் நிறம் இயற்கை தன்மையிலிருந்து மாறி விட்டது. அதோடு தற்போது கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளும், கட்டிட கழிவுகளும் கொட்டப்படுகிறது.

    ஏற்கனவே பவள பாறைகளை வெட்டி எடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இதுபோல் சாக்கடைநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலக்கிறது. இதனால் கடலின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு கடல்நீர் மாசடைந்து மீன்வளம் குறைந்து வருகிறது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் கூறியதாவது:-

    கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பது தொடர்பாக நிரந்தர தீர்வு காண தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ஆலோசனை சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை.

    கீழக்கரை நகரில் ஆண்டு கணக்கில் கழிவுநீர் கடலில் கலந்து வருகிறது. சில சமயம் குப்பைகள் கொட்டும் தளமாகவும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகள், கட்டிடக் கழிவுகள் கொட்டும் பகுதியாக கடற்கரை மாறி வருகிறது.

    இதற்கு நிரந்த தீர்வு காண கடலில் கலக்கும் சாக்கடையை சுத்திகரித்து விவசாயத்திற்கோ அல்லது மின்சாரம் தயாரிப்பதற்கோ பயன்படுத்த வேண்டும்.இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாயல்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பலியானார்.
    • இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஓரிவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆத்மநாதன் மகன் வில்வபிரதாப் (22). இவர் நேற்று இரவு சாயல்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவரது பைக்கும், சாயல்குடியில் இருந்து மலட்டாறு நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த காணிக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாயழகு மகன் முனீஸ்வரன் (28)ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சாயல்குடி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் இருவரையும் கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே வில்வ பிரதீப் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முனீஸ்வரன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • தேவிபட்டினத்தில் ரூ.1.47 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை ராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் சிகிச்சை பிரிவிற்கான கட்டிடம் கட்டும் பணியை ஆய்வு செய்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு சிகிச்சை வழங்கும் பகுதிக்குச் சென்று சிகிச்சை வழங்குவது குறித்து கேட்டறிந்தவுடன் சிகிச்சை பெற வந்த மக்களிடம் காலதாமதமின்றி சிகிச்சை வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.

    மரைக்காயர் ஊரணியில் ரூ 15.72 லட்சம் மதிப்பீட்டில கரை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளும் பொழுது இந்த ஊரணிக்கு வரக்கூடிய மழைநீருக்கான வரத்து கால்வாய்களையும் சீரமைத்து ஊரணியில் தண்ணீர் முழுமையாக தேங்கி நிற்கும் வகையில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனை தொடர்ந்து தேவிபட்டினம், காந்தி நகர் பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ2.77 லட்சம் மதிப்பீட்டில் பயனாளி வீடு கட்டி வருவதை பார்வையிட்டு பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்திட பயனாளிக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து தேவிபட்டினம் ஊராட்சியில் ரூ11.27 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ரூ8.83 லட்சம் மதிப்பீட்டில் கிணறு, காமராஜர் தெருவில் ரூ9.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையினையும் பார்வையிட்டு பணியின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    படையாச்சி காலனியில் ரூ5.23 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு வருவதையும், மேலப்பள்ளிவாசல் பகுதியில் ரூ13.09 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படு வதையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.

    சோலைநகர் பகுதியில் ரூ6.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலை, பூவாடை பகுதியில் ரூ24.40 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மனித சக்தியின் மூலம் பண்ணை குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் ராமநாத புரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப்பெருமாள், ஒன்றிய பொறியாளர்கள் அர்ஜுனன், ரவி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜன்னத்து யாஸ்மின், தேவிபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் நகரில் 10 மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
    • ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர்கள் பழுது காரணமாக இந்த மின்தடை ஏற்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் உள்ள மின்வாரிய டிரான்ஸ் பார்மர்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் லேசான காற்று, மழை பெய்தாலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

    இதுகுறித்து புகார் அளித்தால் மின்வாரிய ஊழியர்கள் அந்த நேரத்தில் சரிசெய்கின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது இல்லை என்று மக்கள் புகார் தெரி விக்கின்றனர்.

    நேற்று முன்தினம் ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளுக்கு மின்வினியோகம் வழங்கும் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் 3 டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகியது. இதனால் காலை 6 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. தற்காலிக தீர்வாக பட்டணம்காத்தான், ராமநாதபுரம் உப மின் நிலையங்களில் இருந்து ஒவ்வொரு பகுதியாக சிறிது நேரம் முறை வைத்து மின்வினியோகம் வழங்கினர்.

    ராமநாதபுரத்தில் அடிக்கடி 10 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்படுவதால் தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக நிறுவனத்தினர், பொதுமக்கள் அன்றாட பணிகள் மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    • அபிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை, கழிவறை வசதி இல்லாததால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும் என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தை சுற்றிலும் அதிக கிராமங்கள் உள்ள பகுதியாகும். இங்கு விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வரும் குழந்தைகளின் நலன்கருதி 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. அபிராமம் பகுதியில் தனியார் பள்ளிகள் இருந்தாலும், அரசுப்பள்ளியை நம்பியே மாணவர்கள் உள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அபிராமம் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி என்பதால் ஏழை, எளிய விவசாயிகளின் பிள்ளைகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளில் படித்து வருகின்றனர். இங்கு போதிய வகுப்பறை கட்டிட வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர்.

    அதேபோல் கழிவறை வசதியும் இல்லாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இடைவேளை நேரத்தில் அனைத்து மாணவ- மாணவிகளும் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது.

    மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும் என்றனர்.

    • ராமநாதபுரத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் நகராட்சி அலுவலகம் அருகே இன்று காலை நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் அ.தி.மு.க.சார்பில் நகர் செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் தி.மு.க. ஆட்சியை கண்டித்து மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நகராட்சி அலுவலகம் அருகே இன்று காலை நடந்தது.

    மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் புதுமடம் தர்வேஸ், ஸ்டாலின் ஜெயசந்திரன், சரவணக்குமார், செந்தில் குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையா, ராமநாதபுரம் நகர துணைச் செயலாளர் ஆரிப் ராஜா, கீழக்கரை நகர அவைத்தலைவர் சரவணபாலாஜி, மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் சுரேஷ், நகர முன்னாள் செயலாளர் இம்பாலா உசேன், முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி, மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மின் கட்டணம், சொத்துவரி உயர்வு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர்.

    • ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில செயலாளர் அடையாறு பாஸ்கர் வெளியிட்டார்.
    • 4 சட்டமன்ற தொகுதியிலும் தலா 100 கொடிக்கம்பங்கள் கல்வெட்டுடன் நிறுவ வேண்டும் என்று கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ஜக்காரியா தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் ஏராளமானோர் போட்டியிட்டனர்.

    தற்போது முதற்கட்டமாக மாவட்டத்தில் நகரம் மற்றும் வட்டார அளவிலான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு ள்ளனர்.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளரும், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளருமான அடையாறு பாஸ்கர் ராமநாதபுரத்தில் நகர் மற்றும் வட்டார தலை வர்களின் புதிய பட்டியலை வெளியிட்டார்.

    அதன்படி ராமநாதபுரம் நகர் தலைவராக கோபி, ராமேசுவரம் நகர் தலைவராக ராஜீவ் காந்தி, பரமக்குடி நகர் தலைவராக அஹமத் கபீர், கீழக்கரை நகர் தலைவராக அஜ்மல் கான் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    வட்டார அளவிலான தலைவர்களாக திருவா டானை வடக்கு தட்சணா மூர்த்தி, திருவாடானை தெற்கு கணேசன், ஆர்.எஸ்.மங்கலம் வடக்கு மனோகரன், ஆர்.எஸ்.மங்க லம் தெற்கு சுப்பிரமணியன், ராமநாதபுரம் சேகர், மண்ட பம் மேற்கு அன்வர்அலி.

    மண்டபம் கிழக்கு செல்லசாமி, திருப்புல்லாணி கிழக்கு சேதுபாண்டியன், திருப்புல்லாணி மேற்கு கந்தசாமி, முதுகுளத்தூர் கிழக்கு ராமர், முதுகுளத்தூர் மேற்கு புவனேஸ்வரன், கடலாடி கிழக்கு தனசேகரன், கடலாடி மேற்கு அப்துல் சத்தார், கடலாடி வடக்கு சுரேஷ் காந்தி, கமுதி தெற்கு கோவிந்தன், கமுதி வடக்கு ஆதி, பரமக்குடி மேற்கு சுப்பிரமணியன், பரமக்குடி கிழக்கு வேலுசாமி, நயினார் கோவில் கார்மேகம், போக லூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அடையாறு பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியிலும் தலா 100 கொடிக்கம்பங்கள் கல்வெட்டுடன் நிறுவ வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதன்படி ராமநாதபுரம் தொகுதிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் செல்லதுரை அப்துல்லா, திருவாடானை தொகுதிக்கு கருமாணிக்கம் எம்.எல்.ஏ, முதுகுளத்தூர் தொகுதிக்கு மாவீரன் வேலுச்சாமி, பரமக்குடி தொகுதிக்கு செந்தாமரை கண்ணன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பணி ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தொடங்கப்பட உள்ளது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் ஜனவரி 15-ந்தேதிக்குள் குறிப்பிட்ட அளவில் கொடி கம்பங்கள் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கமுதி அருகே சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
    • இதில் பாரம்பரிய நடனம் ஆடி இளைஞர்கள் அசத்தினர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மகான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் சந்தனக்கூடு விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு பள்ளி வாசல் தர்ஹா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இருந்தது.நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தொடங்கிய சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சந்தனக்கூடு நகரின் முக்கிய வீதிகள் வழி யாக வந்தது. அப்போது இளைஞர்கள், பெரிய வர்கள், சிறுவர்கள் சந்தன கூடு விழாவிற்கு ஒன்றுகூடி மேள சத்தம் மற்றும் இறைபாடலுக்கு ஏற்றவாறு தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனம் ஆடி ஊர்வலமாக சென்றனர்.

    களிகம்பு நடனத்தில் முத்தாய்ப்பாக வட்டமாக நின்று கயிறு பிடித்து ஆடி ஒருவருக்கொருவர் சிக்காத வகையில் கயிறு போல திரித்து பின்னர் கயிறை விரித்தும், களிகம்பு நடனமாடி சந்தனக்கூட்டை வரவேற்று சென்றனர்.

    • ராமநாதபுரத்தில் சர்வதேச வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் அரண்மனை பகுதியில் இருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறையின் மூலம் பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்திய நாராயணன், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் பாரி, மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி, சமூக நலத்துறை அலுவலர் தமயந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மீனாட்சி சுந்தரேஸ்வரி, சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×