என் மலர்
நீங்கள் தேடியது "வன்முறை ஒழிப்பு"
- உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சிக்குட்பட்டஇராகல்பாவி கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- சமுதாய வள பயிற்றுனர் கல்பனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை:
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்டம் உடுமலை மகளிர் திட்ட வட்டார வள அலுவலகம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி ஒவ்வொரு ஊராட்சிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சிக்குட்பட்டஇராகல்பாவி கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பள்ளி மாணவர்களிடம் ஆண் பெண் பாகுபாடின்றி, பாலின சமத்துவத்தை வளர்க்க வேண்டும் ,பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று உடுமலை மகளிர் திட்ட வட்டார வள பயிற்றுநர் ஸ்ரீ நிஜா எடுத்துக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் இணைந்து பெண்களுக்கு எதிரான பாலின சமத்துவத்தை வளர்ப்போம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம் ஆகிய வாசகங்களை அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியர் சாவித்திரி துவக்கி வைத்தார். ஆசிரியர் கண்ணபிரான் நன்றி கூறினார். சமுதாய வள பயிற்றுனர் கல்பனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் சர்வதேச வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகர் அரண்மனை பகுதியில் இருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறையின் மூலம் பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்திய நாராயணன், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் பாரி, மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி, சமூக நலத்துறை அலுவலர் தமயந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மீனாட்சி சுந்தரேஸ்வரி, சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.






