என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சிக்குட்பட்டஇராகல்பாவி கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- சமுதாய வள பயிற்றுனர் கல்பனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை:
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்டம் உடுமலை மகளிர் திட்ட வட்டார வள அலுவலகம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி ஒவ்வொரு ஊராட்சிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சிக்குட்பட்டஇராகல்பாவி கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பள்ளி மாணவர்களிடம் ஆண் பெண் பாகுபாடின்றி, பாலின சமத்துவத்தை வளர்க்க வேண்டும் ,பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று உடுமலை மகளிர் திட்ட வட்டார வள பயிற்றுநர் ஸ்ரீ நிஜா எடுத்துக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் இணைந்து பெண்களுக்கு எதிரான பாலின சமத்துவத்தை வளர்ப்போம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம் ஆகிய வாசகங்களை அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியர் சாவித்திரி துவக்கி வைத்தார். ஆசிரியர் கண்ணபிரான் நன்றி கூறினார். சமுதாய வள பயிற்றுனர் கல்பனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






