என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட கோப்புகளால் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடத்தல், கொள்ளை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. இவற்றை கட்டுப்படுத்து வதிலும், ரவுடிகளை கண்காணித்து கைது செய்து குற்றங்களை தடுப்பதிலும் போலீசார் தீவிரம் காட்டு கின்றனர்.

    கடந்த 3-ந்தேதி ராமநாதபுரம் நீதி மன்றத்திற்குள் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்ட ரவுடியை மற்றொரு ரவுடி நீதிபதியின் இருக்கை முன்பு வெட்டிய சம்பவம் நெஞ்சை பதற வைத்தது. இவற்றையெல்லாம் பார்க்கையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றவாளி கள் ஜாலியாக உலா வருகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.

    போலீசார் தரப்பில் கூறுகையில், மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு முதல் தற்போது வரை 35 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்ட கோப்புகள் தயார் செய்து கலெக்டரின் ஒப்பு தல் கிடைக்காமல் நிலுவை யில் உள்ளன.

    கடந்த ஆண்டு வரை மட்டும் 22 பேர் மீது குண்டாஸ் கோப்புகள் தயார் செய்யப்பட்டு அதில் 2 பேர் மட்டுமே குண்டாஸ் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சட்டம் ஒழுங்கு பிரச்சினை வழக்கில் 11 பேர் மீதும், போக்சோ வழக்கில் ஒருவர், கஞ்சா வழக்கில் 5 பேர், திருட்டு வழக்கில் 3 பேர் என்ன 22 பேர் மீது குண்டாஸ் கோப்புகள் தயார் செய்யப்பட்டது.

    ஆனால் இதில் இருவருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு மட்டும் சட்டம் ஒழுங்கில் 13 பேர், திருட்டு வழக்கில் 2 பேர் மீதும் போக்சோ வழக்கில் ஒருவர் என 16 பேர் மீது குண்டாஸ் கோப்பு கள் தயார் செய்யப்பட்டுள் ளது. ஆனால் இதில் ஒருவருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதையடுத்து 2022 ஜூன் முதல் இதுவரை 38 கோப்புகளில் 35 பேர் மீது குண்டாஸ் வழக்கு கோப்புகள் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்காததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகள் குற்றங்களை செய்துவிட்டு நிபந்தனை ஜாமீனில் உலா வருவதாகவும், குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்ப தாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறுகையில், தற்போது தான் பொறுப்பு ஏற்றுள்ளேன். அனைத்து குண்டாஸ் கோப்புகளும் கோட்டாட்சியர் விசாரணை யில் உள்ளன. மாவட்ட நிர்வாகத்திடம் 3 கோப்புகள் மட்டுமே நிலுவையில் உள்ளது என்று கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர், ரவுடிகள் மீது பதியப்படும் வழக்கு கோப்புகளை மாவட்ட நிர்வாகம் கிடப்பில் போட்டதால் குற்றவாளிகள் ஜாலியாக உலா வருகின்ற னர் என்றும், ஆகவே குண்டாஸ் வழக்கு கோப்புகள் மீது கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீஸ் ஏட்டு விட்டு சென்ற பணத்தை வாலிபர்கள் திரும்ப ஒப்படைத்தனர்.
    • அந்த பணத்தை கமுகி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்ப்பவர் வீரமுத்துமணி. இவர் நேற்று முன்தினம் இரவு கமுதி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அங்கு வங்கி கணக்கிற்கு ரூ.9500 அனுப்பினார். எந்திரத்தில் பணம் அனுப்பப்பட்டு விட்டது என்று நினைத்து அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    ஆனால் பணம் அனுப்பப்படாமல் ஏ.டி.எம். எந்திரத்திலேயே இருந்து உள்ளது. அதன் பிறகு அந்த மையத்திற்கு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவா (19), சரவணகுமார் (21) ஆகிய 2 வாலிபர்கள் வந்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அந்த பணத்தை கமுகி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த னர். இதைத்தொடர்ந்து கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், பிரகாஷ், குத்தாலிங்கம், மற்றும் தலைமை எழுத்தர் சித்ரா ஆகியோர் பணத்தை ஒப்படைத்த 2 வாலிபர்களை யும் பரிசு வழங்கி பாராட்டினர். மேலும் ஏட்டு வீரமுத்துமணியிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

    • வரத்து குறைவால் சங்கு தொழில் நலிந்து போனது.
    • ஆன்மிக வழிபாடுகளிலும் முக்கிய பங்காற்றும் சங்கு தொழில் நலிந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் களை கட்டி வந்த சங்கு விற்பனை தற்போது வரத்து குறைந்த தால் மந்த நிலையில் நடந்து வருகிறது.

    கடலுக்கு செல்லும் மீன வர்கள் வலைகளில் மீன்கள் மட்டுமில்லாமல் அரிய வகை சங்கு வகைகளும் அகப்படும். வலம்புரி சங்கு, பால் சங்குகளை பூஜை அறையில் வைத்து வழிபடு வதற்காக மக்கள் விரும்பி வாங்கு கின்றனர். இதன் காரணமாக இந்த சங்குகளுக்கு வியாபாரிகள் மத்தியில் எப்போதும் கிராக்கி இருந்து வருகிறது.சிலந்தி சங்கு, கூம்பு சங்கு, குதிரை முள்ளி சங்கு போன்ற அபூர்வ வகை சங்குகளை பிடிக்க தடை உள்ளதால் வலையில் அகப்பட்டாலும் கடலோ ரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர்.

    இது நாளடைவில் மக்கி உடைந்து விடுகிறது. சங்கு குளிக்கும் தொழிலில் உழைப்பு அதிகமாகவும், ஊதியம் குறைவாகவும் உள்ளது. சங்குகள் வரத்து குறைவால் சங்கு தொழில் நலிவடைந்து வருகிறது.

    இந்த தொழிலில் ஈடுபட்ட பலர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். அலங்கார கைவினைப் பொருட்களி லும், ஆன்மிக வழிபாடு களிலும் முக்கிய பங்காற்றும் சங்கு தொழில் நலிந்து வருகிறது.

    • மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • விழாவில் ராமநாதபுரம் வனஅலுவலர்கள் நவநீதன், ராஜேஸ் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் வனத்துறை அலுவலகத்தில் சுற்றுச்சூழல் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் தலைமை தாங்கினார். உதவி வன அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து ஜூன் 1-ந்தேதி முதல் 4 வரை மாணவர்களுக்கான ஓவியம் வரைதல், கவிதை, வினாடி-வினா போட்டிகள் நடந்தது. இதில் மீனவ கிராமங்களை சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் ராமநாதபுரம் வனஅலுவலர்கள் நவநீதன், ராஜேஸ் பங்கேற்றனர்.

    • அபிராமத்தில் செயல்படும் ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.
    • பொது மக்களுக்கு வயிற்றுவலி, உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் பேரூராட்சி பகுதியில் உணவகங்கள், குளிர்பானக் கடை, பழக்கடைகளில் கடந்த சில மாதங்களாக சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகள், குளிர்பானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

    ஓட்டல்களில் அதிக விலை கொடுத்து உணவுகளை வாங்கும் பொதுமக்கள் அவைகளை உட்கொண்டு உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். தற்போது மாம்பழ சீசன் என்பதால் அபிராமம் பகுதியில் உள்ள சில பழக்கடைகளில் கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர்.

    இதனால் பொது மக்களுக்கு வயிற்றுவலி, உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அபிராமம் பகுதியில் உள்ள உணவகம் டீக்கடை, குளிர்பா னக்கடை தண்ணீர் கேன், பழக்க டைகளில் கால வதியான தரம் குறைவான பொருட்கள் விற்கப்படு கிறது. எனவே சமந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான சமையல் பயிற்சி வகுப்பை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • சிறப்பு வாய்ந்த திட்டமாக செயல்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் முதலமைச்ச ரின் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு பணி மேற்கொள்ளும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்க ளுக்கான சமையல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பங்கேற்று பயிற்சி பெற வந்துள்ள மகளிர்குழுவை சேர்ந்த உறுப்பினர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு வழங்கும் திட்டம் பிற மாநிலங்களே போற்றுகின்ற வகையிலும் தமிழகத்தில் அனைத்து மக்களின் வரவேற்பை பெற்ற சிறப்பு வாய்ந்த திட்டமாக இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

    இத்தகைய திட்டம் முதற்கட்டமாக நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வந்த நிலையில் மேலும் நகராட்சி, பேரூராட்சி களிலும் இத்திட்டம் செயல் பட உள்ளன. இப்பணியில் ஈடுபட உள்ள மகளிருக்கு சிறந்த சமையல் கலைஞர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படு கிறது. அதன்படி நீங்கள் சிறந்த முறையில் உணவு களை தயாரித்து குழந்தை களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், கடலாடி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முத்துலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எடை மோசடியை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    • வாரச் சந்தைக்கு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இதில் வெளி மாவட் டங்களில் இருந்து சந்தைக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப் படுகிறது. வீட்டுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் வாங்க முடிவதால் வாரச் சந்தைக்கு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.

    வாரச் சந்தையில் பொதுமக்கள் அதிகளவில் வந்து பொருள்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பழங்கள், காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் விலையை குறைத்து விற்பதாக கூறி, எடை குறைந்த பொருட்களை விற்பனை செய்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    விலை குறைவாக உள்ளதே என்று கிராம பொதுமக்களும் இந்த சந்தையில் பொருள்களை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். இவ்வாறு வாங்கிச் செல்லும் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வாரச் சந்தையில் ஆய்வு செய்து உடனடியாக மோசடியைத் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நுகர்வோர் அமைப்புகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு புகார் மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் வாரச் சந்நுதையில் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனை தவிர்க்கும் வகையில் அனைத்து வியாபாரிகளும் டிஜிட்டல் தராசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்றும், வாரச் சந்தையின் போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மோசடி எடையளவுகளை பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆடு வளர்ப்பு தொழிலில் கிராம மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
    • பக்ரீத் பண்டிகை வருவதால் விற்பனைக்கு கிராமங்களில் ஆடுகள் வளர்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி, கொம்பூதி, சடைமுனியன் வலசை, பிரப்பன் வலசை, தேர்போகி உள்பட பல்வேறு பகுதியில் உள்ள கடலோர கிராமப்புற மக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை பிரதான தொழிலாக செய்து வந்தனர். இந்நிலையில் கூடுதலாக ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் வருவாய் அதிகமாக கிடைப்பதால் தற்போது பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக கிராமங்களில் ஆடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எடையை வைத்து ஆடுகளுக்கு பணம் வழங்கப்படுவதால் எடை அதிகரிக்க தீவனமாக சோளம், அகத்தி கீரை போன்ற உணவுகள் கொடுக்கப்படுகிறது.

    பண்டிகை நாட்களில் மட்டும் இறைச்சி தேவை அதிகரித்து வந்த நிலையில், தற்போது வாரத்தில் ஒரு நாள் இறைச்சியை உணவாக சேர்த்துக்கொள்ளும் முறையை ஏராளமானோர் கடைபிடிப்பதால் தேவை அதிகரித்து, ஆடுகள் விலை உயர்ந்து இறைச்சி விலையும் எகிறியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ இறைச்சி ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.800 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை குறிப்பிட்ட சமூக மக்கள் ஆடு வளர்ப்பு தொழிலை செய்து வந்தனர். இதில் வருவாய் அதிகமாக கிடைப்பதை அறிந்த மக்கள் வீடுகள் தோறும் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். அதிகமான ஆடுகள் இருந்தாலும் தேவை அதிகரிப்பால் விலை குறைவதற்கான வாய்ப்பு கிடையாது.ஆடுகளை நோய்கள் தாக்காத நிலையில், சுகாதாரத்துடன் வளர்த்து வந்தால் நல்ல விலைக்கு ஆடுகளை விற்பனை செயது வருகின்றனர். தற்போது பக்ரீத் பண்டிகை வருவதால் விற்பனைக்கு கிராமங்களில் ஆடுகள் வளர்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

    • ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • முதன்மை மாவட்ட நீதிபதி ஜி. விஜயா மாவட்ட நீதிமன்ற வாளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி ஜி. விஜயா மாவட்ட நீதிமன்ற வாளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிரந்திர மக்கள் நீதிமன்றம் நீதிபதி பரணிதரன், மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சார்பு நீதிபதி.கதிரவன், நீதித்துறை நடுவர் பிரபாகரன் மற்றும் கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஷ்டா மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர். சேக் இப்ராஹிம் மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் அலுவலக நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் துணைத்தலைவர் ஜெயமுருகன் தலைமையில் நடந்தது. மாநிலசெயற்குழு உறுப்பினர் பிரகாஷ்பாபு தீர்மானத்தை முன் மொழிந்தார். ஒடிசா ரெயில் விபத்தில் பலியான பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கடந்தகால நடவடிக்கைகள் குறித்து மாவட்டச்செயலாளர் சோமசுந்தர், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினார். வரவு-செலவு அறிக்கை குறித்து மாவட்டப் பொருளாளர் விஜயகுமார் அறிக்கை சமர்பித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஹஜ் பயணிகளுக்கு ரெயில்களில் சிறப்பு பெட்டிகளை ஒதுக்க வேண்டும்.
    • நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக யாத்திரீகர்கள் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. எனவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரெயில்கள் மூலம் வரும் ஹஜ் பயணிகளுக்கு சிறப்பு ரெயில் பெட்டிகளை ஒதுக்க வேண்டும். மிக குறைவான நாட்களில் ஹஜ் விமான தேதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளதால் முன்கூட்டியே முன்பதிவு செய்ய முடியாத நிலைக்கு ஹஜ் பயணிகள் உள்ளனர். எனவே இதனை கருத்தில் கொண்டு ஹஜ் பயணிகள் சிரமமின்றி சென்னை வருவதற்கு ஏதுவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வரும் ரெயில்களில் சிறப்பு பெட்டிகளை ஒதுக்கி தர வேண்டும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏர்வாடியில் யாத்ரீகர்கள் போர்வையில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் புகழ் பெற்ற பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அனைத்து சமூக மக்களும் வேண்டுதலுக்காக தர்காவிற்கு குடும்பத்துடன் வந்து தங்கி செல்கின்றனர்.

    இதை சாதகமாக்கும் வெளிமாநில சமூக விரோதிகளும் பக்தர்கள், மன நோயாளிகள் போர்வையில் தங்கி உள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் தர்கா வளாகத்தில் தனி நபர்களாக ஏராளமான ஆண்கள் வலம் வருகின்ற னர். இவர்களை தர்கா நிர்வாகத்தினர் அடையா ளம் கண்டு விசாரித்து வெளி யேற்றினாலும் பக்தர்கள் போர்வையில் மீண்டும் தர்கா வளாகத்தில் புகுந்து தங்கி வருகின்றனர். பல்வேறு அசம்பாவித சம்பவங்கள், திருட்டுக்கள் நடந்தும் வழக்கு விசார ணைக்கு பயந்து போலீசா ரிடம் பக்தர்கள் புகார் தெரிவிப்பது கிடையாது.

    பிற மாநில போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்து ஏர்வாடி யில் தங்கி வந்த பல சமூக விரோதிகளை வெளிமாநில போலீசார் தர்கா வளா கத்தில் ஏற்கனவே பிடித்து சென்றனர். தர்கா நிர்வாகத்தினரின் தீவிர கண்காணிப்பு காரண மாக தற்போது காட்டு பள்ளிவாசல் பகுதிக்கு சென்று விடுகின்றனர். ஏர்வாடியில் கூடுதல் போலீ சார் நியமித்து சந்தேகத்திற் குரிய விடுதிகளில் ஆய்வு மேற்கொள்வ துடன், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×