என் மலர்
நீங்கள் தேடியது "special box"
- ஹஜ் பயணிகளுக்கு ரெயில்களில் சிறப்பு பெட்டிகளை ஒதுக்க வேண்டும்.
- நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
பரமக்குடி
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக யாத்திரீகர்கள் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. எனவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரெயில்கள் மூலம் வரும் ஹஜ் பயணிகளுக்கு சிறப்பு ரெயில் பெட்டிகளை ஒதுக்க வேண்டும். மிக குறைவான நாட்களில் ஹஜ் விமான தேதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளதால் முன்கூட்டியே முன்பதிவு செய்ய முடியாத நிலைக்கு ஹஜ் பயணிகள் உள்ளனர். எனவே இதனை கருத்தில் கொண்டு ஹஜ் பயணிகள் சிரமமின்றி சென்னை வருவதற்கு ஏதுவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வரும் ரெயில்களில் சிறப்பு பெட்டிகளை ஒதுக்கி தர வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






