மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் ராமநாதபுரம் வனஅலுவலர்கள் நவநீதன், ராஜேஸ் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் வனத்துறை அலுவலகத்தில் சுற்றுச்சூழல் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் தலைமை தாங்கினார். உதவி வன அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து ஜூன் 1-ந்தேதி முதல் 4 வரை மாணவர்களுக்கான ஓவியம் வரைதல், கவிதை, வினாடி-வினா போட்டிகள் நடந்தது. இதில் மீனவ கிராமங்களை சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் ராமநாதபுரம் வனஅலுவலர்கள் நவநீதன், ராஜேஸ் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com