என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் தகுதியான மீனவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் உறுதியளித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு மீனவர்களிடம் இருந்து 132 கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன்பின் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேசியதாவது:-
மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் சென்று வருவதுடன், உரிய எல்லை பகுதிக்குள் சென்று வர வேண்டும். அதேபோல் மீன்கள் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களை அழைத்துப்பேசி மீனவர்களுக்கு தங்கள் பொருளுக்குரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் மீனவர்கள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா தகுதியுடைய நபர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீனவர்கள் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான இழப்பீடு தொகை உரிய காலத்தில் வழங்கிட மீன்வளத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட் டுள்ளதை மீனவர்கள் கொண்டு வருவதற்கு ஏதுவாக தேவையான உதவிகளை மீன்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்படும்.
கடற்கரை ஓரமுள்ள மீன் இறங்குதளம் அருகில் பயன்பாடற்ற தூண்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் இறால் பண்ணைகளிலிருந்து வெளியேறும் கழிவு பொருட்களை கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் அனுமதியின்றி இறால் பண்ணை நடத்துபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீலப்புரட்சி திட்டத்தில் வீடு கட்ட ஆணை பெற்று வீடு கட்டாதவர்கள் உடனடியாக கட்டுமான பணியினை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர்கள் கோபிநாத், ஜெயக்குமார், அப்துல்காதர், ஜெய்லானி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு ஆங்கில வழி கல்விக்கு அனுமதி வழங்கப்பட்டது.
- பனைக்குளத்தில் பகுர்தீன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
பனைக்குளம்
பனைக்குளத்தில் பகுர்தீன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளி நூற்றாண்டை கடந்து செயல்பட்டு வருகிறது. பனைக்குளம், அழகன்குளம், ஆற்றங்கரை, புதுவலசை, அத்தியூத்து, சித்தார்கோட்டை, தாமரை வூரணி, பொன்குளம், சோகையன்தோப்பு, கிருஷ்ணாபுரம், புதுக்குடி யிருப்பு, ஏந்தல், அய்யன் கோவில், குயவன்குடி, வாலந்தரவை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கில மொழியில் படித்த மாணவர்கள் 11-ம் வகுப்பில் சேர முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். இப்பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், மக்களும், ஜமாத் நிர்வாகிகளும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான ஆங்கில வழிக்கல்வியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் கே.நவாஸ் கனி எம்.பி.யிடம் பேசினர். இதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசுவதாக கூறினார்.
இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:-
பனைக்குளம் அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி 11-ம் வகுப்புக் குரிய அட்மிஷனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள் ளது என்றார். பனைக்குளம் ஜமாத்தார்கள் கூறும்போது, எங்களது கோரிக்கைகளை உடனடியாக ஏற்று மாண வர்களின் நலன் கருதி நடவடிக்கை மேற்கொண்ட நவாஸ்கனி எம்.பி.க்கும், ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
- கமுதி நெடுஞ்சாலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
- சாலை ஆய்வாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-சாயல்குடி நெடுஞ்சாலையில் கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாவை தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து, கமுதி நெடுஞ்சாலை பகுதிகளில், நெடுஞ்சாலைதுறை சார்பில் உதவி கோட்ட பொறியாளர் சக்திவேல் ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பார்த்திபன், சாலை ஆய்வாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காலை உணவு திட்ட மைய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- இப்பயிற்சிக்கு திட்ட இயக்குநா் அபிதா ஹனிப் மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவா் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் தலைமை வகித்தனா்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கமுதியில், தமிழ்நாடு மாநில ஊராக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்திற்க்கான மையப் பொறுப்பாளா்களுக்கு முதல்நாள் பயிற்சி நடைபெற்றது. இதில் 40 மைய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இப்பயிற்சிக்கு திட்ட இயக்குநா் அபிதா ஹனிப் மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவா் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் தலைமை வகித்தனா். உதவி திட்ட அலுவலா் அழகப்பன், மற்றும் கமுதி வட்டார வளர்ச்சி அலுவலா் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளா் மயில்ராஜ் செய்திருந்தார். மேலும், இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் திரவியம், சேதுபதி, பில்லத்தியான், மாரிமுத்து, சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனா்.
- விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கீழக்கரை
மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட கற்பூர வலசை கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
தொடர்ந்து புனித நீர் குடங்களை கோவில் விழா கமிட்டியினர், கிராம முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். அப்போது கருடன் வானில் வட்டமிட, மேளதாளத்துடன், வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. இதையொட்டி பட்டணம் காத்தான் ஊராட்சி தலைவர் எம். சித்ரா மருது, மண்டபம் ஒன்றிய கவுன்சிலர், அ.தி.மு.க. மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- முதுகுளத்தூரில் ஜமாபந்தி நடந்தது.
- சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையில் நடந்தது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையில் நடந்தது.
முதுகுளத்தூர் வடக்கு உள்வட்டம் மற்றும் தெற்கு உள்வட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டது. வருவாய் தீர்வாய தணிக்கையின் போது வட்டாட்சியர் சிவக்குமார், சமுக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியர்கள் மீனாட்சி சுந்தரம், சங்கர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், வட்டத் தலைவர் சுரேஷ், வட்ட செயலாளர் பூ முருகன், வட்ட பொருளாளர் அய்யப்பன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் நில அளவைத் துறையினர் கலந்து கொண்டனர்.
- திருப்புல்லாணி யூனியன் கூட்டம் பெயரளவில் நடந்தது.
- பிரச்சினை செய்தது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் துணைத் தலைவர் சிவலிங்கம் பங்கேற்ற மறுப்பு தெரி வித்து பார்வையாளர் அமரும் இடத்தில் உட்கார்ந்தார்.
கூட்டம் தொடங்கிய வுடன் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் பேசுகையில், 8-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் தற்போ தைய திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையாவின் மனைவி கமலா தொடர்ந்து 3 கூட்டங்களில் பங்கேற்கவில்லை.
இதற்கு முழு ஆதாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பதிவேட்டில் உள்ளது. அவர் கடந்த கூட்டத்தில் பங்கேற்றதாக போலியாக கையொப்பம் பெற்றுள்ளீர்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
அவருக்கு ஆதரவாக துணை சேர்மன் சிவலிங்கம், காங்கிரஸ் கவுன்சிலர் திருமுருகன் ஆகியோர் போலி கையொப்பம் தவறா னது என்று தெரிவித்தனர்.அப்போது வெளியே நின்றிருந்த சிலர் கோஷ மிட்டனர். இதை கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர் திருமுருகன் ஆவேசமாக சேரை எடுத்து வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.
அவரை தொடர்ந்து கவுன்சிலர்கள் மற்றும் துணைத்தலைவர் வெளி நடப்பு செய்தனர். பின்னர் 5 கவுன்சிலர்கள் மற்றும் தலைவர் மட்டுமே பங்ேகற்ற கூட்டரங்கில் சிறிது நேரம் விவாதம் நடந்தது. இதையடுத்து பெயரளவில் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் முடிந்தது.
மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்வு காண வேண்டிய யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்களின் நடவடிக்கை முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. பொது மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்காமல் தேவையில்லாத விவாதங்களை கூட்டத்தில் எழுப்பி பிரச்சினை செய்தது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- ராமநாதபுரத்தில் இன்று மாலை மீனவர்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
- தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவ பிரதிநிதிகளின் சார்பில் குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரிக்கை விடப்பட்டி ருந்தது. அதன் அடிப்ப டையில் இன்று (9-ந் தேதி) பிற்பகல் 3.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் ராமநாத புரம் மாவட்ட அரசுத்துறை சார்ந்த அனைத்து அலுவ லர்களும் கலந்துகொள்ள இருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம். மேலும், தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏர்வாடி தர்கா கொடி ரத ஊர்வலம் நடந்தது.
- இரு தரப்பினரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கீழக்கரை
ஏர்வாடி சுல்தான் இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் ெதாடங்கியுள்ளது.
கொடி ரத ஊர்வலத்தில் பாரம்பரிய உரிமை கோரி இரு தரப்பினரிடையே பிரச்சினை எழுந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் ஒரு தரப்பினர் இது தொடர்பாக முறையிட்டனர்.
அதனைத்தொடர்ந்து சமாதான கூட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. ராமநாயதபுரம் கோட்டாட்சியர் கோபு தலைமை வகித்தார். தாசில்தார் பழனிக்குமார் முன்னிலை வகித்தார்.
டி.எஸ்.பி., சுதிர்வேல், துணை தாசில்தார் பரமசிவம், வருவாய் அலுவலர் வேல்முருகன், வி.ஏ.ஓ., மாரியப்பன், தர்கா நிர்வாக சபை தலைவர் பாக்கீர் சுல்தான் லெவ்வை, துணைத்தலைவர் சாதிக் பாட்ஷா, உறுப்பினர்கள் துல்கருணை பாட்ஷா, அப்துல் கனி, அஜ்முல் ரகுமான் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஏர்வாடி முஜாபிர் நல்ல இப்ராகிம் மஹாலில் இருந்து தண்ணீர் பந்தல் வரை ஒரு தரப்பினரும், அங்கிருந்து தர்கா வரை மற்றொரு தரப்பினரும் கொடி ரதம் ஊர்வலத்தை நிறைவு செய்வது எனவும், சந்தனக்கூடு ஊர்வலத்தில் இதே நடைமுறையை பின்பற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
- வளர்ச்சி திட்டப்பணிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்று கலெக்டர் விஷ்ணுசந்திரன் உறுதி அளித்துள்ளார்.
- உடனுக்குடன் செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம், மஞ்சக்கொல்லை ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் கிராம மக்களை நேரில் சந்தித்து அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர், பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், மஞ்சக்கொல்லை ஊராட்சி யில் பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் பெற்று பயன்பெறு கிறீர்களா? என கேட்டறிந்த துடன், மேலும் பல்வேறு துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென கூறினார்.
ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குடும்ப உறுப்பினர்க ளிடம் தங்களுக்கு தேவை யான வருவாய்த்துறை சான்றுகள் உரிய காலத்தில் கிடைக்கப்பெறுகிறதா? எனவும், அதேபோல் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியாக பொருட்கள் வழங்கப்படுகிறதா? மற்றும் குடிநீர் வழங்குவதன் விவரம் போன்றவற்றை பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். தொடர்ந்து ஊராட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் உடனுக்குடன் செயல்ப டுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.
- கிடப்பில் போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட கோப்புகள் தயார் செய்து நிலுவையில் உள்ளன.
- கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடத்தல், கொள்ளை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. இவற்றை கட்டுப்படுத்து வதிலும், ரவுடிகளை கண்காணித்து கைது செய்து குற்றங்களை தடுப்பதிலும் போலீசார் தீவிரம் காட்டுகின்றனர்.
கடந்த 3-ந்தேதி ராமநாதபுரம் நீதிமன்றத்திற்குள் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்ட ரவுடியை மற்றொரு ரவுடி நீதிபதியின் இருக்கை முன்பு வெட்டிய சம்பவம் நெஞ்சை பதற வைத்தது. இவற்றையெல்லாம் பார்க்கையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றவாளிகள் ஜாலியாக உலா வருகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.
போலீசார் தரப்பில் கூறுகையில், மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3பேர் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு முதல் தற்போது வரை 35 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்ட கோப்புகள் தயார் செய்து கலெக்டரின் ஒப்பு தல் கிடைக்காமல் நிலுவையில் உள்ளன.
கடந்த ஆண்டு வரை மட்டும் 22பேர் மீது குண்டாஸ் கோப்புகள் தயார் செய்யப்பட்டு அதில் 2பேர் மட்டுமே குண்டாஸ் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை வழக்கில் 11பேர் மீதும், போக்சோ வழக்கில் ஒருவர், கஞ்சா வழக்கில் 5பேர், திருட்டு வழக்கில் 3பேர் என்ன 22பேர் மீது குண்டாஸ் கோப்புகள் தயார் செய்யப்பட்டது.
ஆனால் இதில் இருவருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு மட்டும் சட்டம் ஒழுங்கில் 13 பேர், திருட்டு வழக்கில் 2பேர் மீதும் போக்சோ வழக்கில் ஒருவர் என 16பேர் மீது குண்டாஸ் கோப்பு கள் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒருவருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து 2022 ஜூன் முதல் இதுவரை 38 கோப்புகளில் 35 பேர் மீது குண்டாஸ் வழக்கு கோப்புகள் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்காததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகள் குற்றங்களை செய்துவிட்டு நிபந்தனை ஜாமீனில் உலா வருவதாகவும், குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்ப தாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறுகையில், தற்போது தான் பொறுப்பு ஏற்றுள்ளேன். அனைத்து குண்டாஸ் கோப்புகளும் கோட்டாட்சியர் விசாரணை யில் உள்ளன. மாவட்ட நிர்வாகத்திடம் 3 கோப்புகள் மட்டுமே நிலுவையில் உள்ளது என்று கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர், ரவுடிகள் மீது பதியப்படும் வழக்கு கோப்புகளை மாவட்ட நிர்வாகம் கிடப்பில் போட்டதால் குற்றவாளிகள் ஜாலியாக உலா வருகின்றனர் என்றும், ஆகவே குண்டாஸ் வழக்கு கோப்புகள் மீது கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட கோப்புகளால் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடத்தல், கொள்ளை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. இவற்றை கட்டுப்படுத்து வதிலும், ரவுடிகளை கண்காணித்து கைது செய்து குற்றங்களை தடுப்பதிலும் போலீசார் தீவிரம் காட்டு கின்றனர்.
கடந்த 3-ந்தேதி ராமநாதபுரம் நீதி மன்றத்திற்குள் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்ட ரவுடியை மற்றொரு ரவுடி நீதிபதியின் இருக்கை முன்பு வெட்டிய சம்பவம் நெஞ்சை பதற வைத்தது. இவற்றையெல்லாம் பார்க்கையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றவாளி கள் ஜாலியாக உலா வருகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.
போலீசார் தரப்பில் கூறுகையில், மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு முதல் தற்போது வரை 35 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்ட கோப்புகள் தயார் செய்து கலெக்டரின் ஒப்பு தல் கிடைக்காமல் நிலுவை யில் உள்ளன.
கடந்த ஆண்டு வரை மட்டும் 22 பேர் மீது குண்டாஸ் கோப்புகள் தயார் செய்யப்பட்டு அதில் 2 பேர் மட்டுமே குண்டாஸ் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சட்டம் ஒழுங்கு பிரச்சினை வழக்கில் 11 பேர் மீதும், போக்சோ வழக்கில் ஒருவர், கஞ்சா வழக்கில் 5 பேர், திருட்டு வழக்கில் 3 பேர் என்ன 22 பேர் மீது குண்டாஸ் கோப்புகள் தயார் செய்யப்பட்டது.
ஆனால் இதில் இருவருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு மட்டும் சட்டம் ஒழுங்கில் 13 பேர், திருட்டு வழக்கில் 2 பேர் மீதும் போக்சோ வழக்கில் ஒருவர் என 16 பேர் மீது குண்டாஸ் கோப்பு கள் தயார் செய்யப்பட்டுள் ளது. ஆனால் இதில் ஒருவருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து 2022 ஜூன் முதல் இதுவரை 38 கோப்புகளில் 35 பேர் மீது குண்டாஸ் வழக்கு கோப்புகள் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்காததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகள் குற்றங்களை செய்துவிட்டு நிபந்தனை ஜாமீனில் உலா வருவதாகவும், குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்ப தாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறுகையில், தற்போது தான் பொறுப்பு ஏற்றுள்ளேன். அனைத்து குண்டாஸ் கோப்புகளும் கோட்டாட்சியர் விசாரணை யில் உள்ளன. மாவட்ட நிர்வாகத்திடம் 3 கோப்புகள் மட்டுமே நிலுவையில் உள்ளது என்று கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர், ரவுடிகள் மீது பதியப்படும் வழக்கு கோப்புகளை மாவட்ட நிர்வாகம் கிடப்பில் போட்டதால் குற்றவாளிகள் ஜாலியாக உலா வருகின்ற னர் என்றும், ஆகவே குண்டாஸ் வழக்கு கோப்புகள் மீது கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






