search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யாத்ரீகர்கள் போர்வையில் சமூக விரோதிகள் நடமாட்டம்
    X

    யாத்ரீகர்கள் போர்வையில் சமூக விரோதிகள் நடமாட்டம்

    • ஏர்வாடியில் யாத்ரீகர்கள் போர்வையில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் புகழ் பெற்ற பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அனைத்து சமூக மக்களும் வேண்டுதலுக்காக தர்காவிற்கு குடும்பத்துடன் வந்து தங்கி செல்கின்றனர்.

    இதை சாதகமாக்கும் வெளிமாநில சமூக விரோதிகளும் பக்தர்கள், மன நோயாளிகள் போர்வையில் தங்கி உள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் தர்கா வளாகத்தில் தனி நபர்களாக ஏராளமான ஆண்கள் வலம் வருகின்ற னர். இவர்களை தர்கா நிர்வாகத்தினர் அடையா ளம் கண்டு விசாரித்து வெளி யேற்றினாலும் பக்தர்கள் போர்வையில் மீண்டும் தர்கா வளாகத்தில் புகுந்து தங்கி வருகின்றனர். பல்வேறு அசம்பாவித சம்பவங்கள், திருட்டுக்கள் நடந்தும் வழக்கு விசார ணைக்கு பயந்து போலீசா ரிடம் பக்தர்கள் புகார் தெரிவிப்பது கிடையாது.

    பிற மாநில போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்து ஏர்வாடி யில் தங்கி வந்த பல சமூக விரோதிகளை வெளிமாநில போலீசார் தர்கா வளா கத்தில் ஏற்கனவே பிடித்து சென்றனர். தர்கா நிர்வாகத்தினரின் தீவிர கண்காணிப்பு காரண மாக தற்போது காட்டு பள்ளிவாசல் பகுதிக்கு சென்று விடுகின்றனர். ஏர்வாடியில் கூடுதல் போலீ சார் நியமித்து சந்தேகத்திற் குரிய விடுதிகளில் ஆய்வு மேற்கொள்வ துடன், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×