என் மலர்
ராமநாதபுரம்
- அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- 50-க்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக தங்களை பதிவு செய்து பயனடைந்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் ஒன்றியம் சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட வன்னிவயல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசித்ரா நவநீதகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் குண சேகரன்,கிராம நிர்வாக அலுவலர் காமேஸ்வரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு இந்த சிறப்பு முகாமினை துவக்கி வைத்தனர்.
இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட பதிவு செய்யாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக தங்களை பதிவு செய்து பயனடைந்தனர்.
- ஆர்.எஸ்.மங்கலத்தில் நீர், மோர் பந்தல் நடத்தி வரும் காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு குவிந்தன.
- ஆர்.எஸ். மங்கலத் தில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுகிறது வழக்கம்.
ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆர்.எஸ். மங்கலத் தில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுகிறது வழக்கம். இங்கு நடைபெறும் வார சந்தைக்கு ஆர்.எஸ்.மங் கலத்தை சுற்றியுள்ள கிராமத்திலிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் சந்தையில் தங்களது வீட்டில் உள்ள நெல், மிளகாய், நவதானிய பொருட்களை விற்று விட்டு அதில் வரும் பணத்தைக் கொண்டு வீட்டுக்கு தேவை யான சாமான்களை வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு தற்போது கோடை காலத்தில் வழக்கத்துக்கு மாறாக கடுமை யான வெயில் சுட்டெரிப்ப தால் சந்தைக்கு வரும் பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகை யில் நீண்ட விடுமுறையில் சென்று வந்த ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையம் இன்ஸ் பெக்டர் பாஸ்கரன் முயற்சியால் அவர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தன் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் இணைந்து சந்தை அருகே சனிக்கிழமை தோறும் நீர், மோர்பந்தல் நடத்தி வருவது குறிப் பிடத்தக்கது.
காவல் துறையினரின் இச்செயலை கண்டு சமூக ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டர்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
- ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
- ஏற்பாடுகளை சவுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தொடங்கி வைத்தார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணியை பா.ஜ.க.வினர் தொடங்கி தீவிரமாக மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து தற்போதே தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக இந்த புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக், நிர்வாகிகள் முருகன், சங்கீதா, குமரன், பாலமுருகன், நகர் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சவுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம் நடந்தது.
- மாவட்டச்செயலாளர், தினாஜ்கான் உள்பட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைமை யகத்தில் மாநில மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமயில் நடந்தது.
மாவட்ட தலைவர் இப்ராகிம் சாபிர், மாவட்ட செயலாளர் தினாஜ்கான், மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரஜபுதீன், உஸ்மான், மீரான், கீழை சித்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் புகழ்பெற்ற சென்னை ஸ்டான்லி, திருச்சி கி.ஆ.பெ. விஸ்வ நாதன், தர்மபுரி உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரி களின் அங்கீகாரத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டிக்கிறோம். மத்திய அரசின் இந்த ேபாக்கால் மாணவர்கள் பாதிக்கப்படு வார்கள்.
மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 70-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு அமைதி நிலவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.மாவட்டச்செயலாளர், (ஊடகத்தொடர்பு) தினாஜ்கான் உள்பட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
- பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
- சப்- இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் ஆஸ்பத்திரி 1-வது தெருவைச் சேர்ந்தவர் சிவபாலன் (வயது 43) பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தந்தை நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சப்- இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.
- இந்திய வானிலை மைய அறிவிப்பு ராமேசுவரம் மீனவர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர்.
ராமேசுவரம்:
தமிழக கடற்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி கடற்கரை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை வங்க கடலில் மீனவர்கள் மேற்கண்ட காலங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவதில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடற்கரையில் இருந்து சில மைல் தூரத்தில் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் வருகிற 14-ந்தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் வேலை இழந்தனர். இந்த காலகட்டங்களில் தங்களது படகு, வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாளை மறுநாள் (14-ந்தேதி) இரவு டன் மீன்பிடி தடை காலம் முடிவடைகிறது. 2 மாதம் தடை முடியும் நிலையில் ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். படகுகளில் டீசல் நிரப்புவது, ஐஸ் கட்டிகளை இருப்பு வைப்பது போன்றவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அரபி கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்கள் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயல் சின்னம் காரண மாக வருகிற 14-ந்தேதி வரை ராமேசுவரம் மீன வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த அறிவிப்பு ராமேசுவரம் மீனவர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
புயல் சின்னத்தால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் மீன்பிடி தடைக் காலம் முடிந்து ராமேசுவரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மீன்பிடி தடை காலத்தில் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. அரசு கொடுத்த நிவாரண உதவியும் போதவில்லை. எனவே வேறு வேலைக்கு சென்றோம். வருகிற 14-ந்தேதி முதல் கடலுக்கு செல்ல தயாராகி வந்த நிலையில் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர்.
- கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது
- ஒவ்வொரு மூட்டையிலும் 30 கிலோ என மொத்தம் 270 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமேசுவரம்:
அண்மை காலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக தங்கம், போதை பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்துவது அதிகளவில் நடந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 35 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது
இலங்கையில் பீடி தயாரிக்கப்படும் இலைகளுக்கு கடும் கிராக்கி உள்ளது. அதிக விலை போகும் இந்த இலைகள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை ராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் 9 மூட்டைகள் கேட்பாரற்று கிடப்பதாக கடலோர காவல்படையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் மூட்டைகளை பிரித்து சோதனையிட்ட போது அதில் பீடி இலைகள் இருந்தன. ஒவ்வொரு மூட்டையிலும் 30 கிலோ என மொத்தம் 270 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக சமூக விரோதிகள் கொண்டு வந்திருக்கலாம் எனவும், ஆனால் எந்த காரணத்திற்காகவும் விட்டு சென்றார்கள் என தெரியவில்லை.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ‘மாலைமலர்’ செய்தி எதிரொலியாக கீழக்கரை இஸ்லாமியா பள்ளி செல்லும் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
- மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை சேதம் அடைந்த தால் புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது. ஒப்பந்ததாரர் அலட்சியம் காரணமாக பணி தொடங்க வில்லை.
குறுகலான சாலையின் ஒரு பக்கம் உடைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள். மறு பக்கம் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து கடந்த 6-ந்தேதி 'மாலைமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில் தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இருப்பினும் குறைந்த எண்ணிக்கையில் தொழிலா ளர்கள் வேலை செய்வதால் பணி தாமதமாக நடந்து வருகிறது. நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சாலை பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாம்பன்ரெயில் நிலையத்தில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
- பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமேசுவரம்
ராமேசுவரம் பாம்பன் ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அதை பார்த்த பொதுமக்கள், அதுபற்றி பாம்பன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் அங்கு வந்த போலீசார், அடை யாளம் தெரியாமல் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை யாரோ மர்மநபர்கள் அடித்துக்கெலை செ்யதிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் பார்ப்பதற்கு தொழிலாளி போன்று இருக்கிறார். அவரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் நாளை சந்தனக்கூடு திருவிழா நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
- பக்தர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் அடங்கப் பட்டிருக்கும் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் 849-ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நாளை (12-ந்தேதி) நடை பெறுவதையொட்டி, வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஏர்வாடிக்கு வரத் துவங்கினர். இதனால் தர்கா பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் சந்தனக்கூடு திருவிழா கடந்த 21-ந் தேதி மவ்லுது (புகழ்மாலை) ஓதப்பட்டு துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி தர்காவில் மின் அலங்காரம் செய்யும் பணி மதுரை மதினா லைட் நிறுவனத்தினர் செய்து வரு கின்றனர்.
நாளை மாலை 4.30 மணிக்கு யானை. குதிரையு டன் ஊர்வலமாக சென்று தர்்காவில் இருந்து போர்வை எடுக்கும் விழா நடைபெறுகிறது. அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, அலங்கார ரதத்து டன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு. காலை 5 மணிக்கு தர்கா வந்தடையும், தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த் தனையும், தொடர்ந்து தர்கா வில் சந்தனம் பூசும் நிகழ்சசி நடைபெறும்.
மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்திலிருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தர்கா வளாகத்தில் மருத்துவக்குழுவினர் முகா மிட்டு தயார் நிலையில் உள்ளனர். தட்டுப்பாடு இல்லாமல் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க சிறப்பு ஏற் பாடுகள் செய்யப் பட்டு ள்ளது. தர்கா வளாகத்தில் கூடுதலாக சிறப்பு கண்காணிப்பு கேராக்கள் பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. குப்பைகள் உடனுக்குடன் அகற்ற 50-க்கும் அதிகமான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளுர் விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகை யில் 24-ந்தேதி (சனிக் கிழமை) வேலை நாளாக அறிவிக்கப் படுவதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித் துள்ளார்.
எஸ்.பி., தங்கதுரை உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். தர்கா நிர்வாக சபை தலைவர் பாக்கீர் சுல்தான் லெவ்வை, செயலாளர் சிராஜ்தீன், துணைத் தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஏற் பாடுகளை செய்து வருகிறார்கள்.
- கமுதி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழ ராமநதி கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக யாகசாலை கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை தீபாதாரணை நடைபெற்றது. முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து முத்தாலம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம், மூலிகை, திரவிய அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் அனை வருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.
- பணம் தராததால் தாயை அடித்து கொன்றேன் என்று கைதான மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- கட்டிலில் பிணமாக கிடந்தார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தளிர்மருங்கூர் கிராமத்தை அடுத்துள்ள பாகனவயல் கிராமத்தில் தனியாக வீட்டில் இருந்த மூதாட்டி ஜெயசீலி (வயது75) கட்டி லில் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி னர்.
கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் மூத்த மகன் கொத்தனார் வேலை செய்து வரும் அருள் செல்வத்திடமும் (48) விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீ சார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது தாைய அடித்து கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது தாயார் ஆடு விற்ற பணம், பயிர் இன்சூ ரன்ஸ் பணம் ஆகிவற்றை இளைய மகனுக்கும், மகளுக்கும் கொடுத்து வந்தார். எனக்கு எதுவும் கொடுக்கவில்லை. அப்பா வின் பெயரில் வங்கியில் இருந்த பணத்தை தாயிடம் தொடர்ந்து கேட்டு வந் ஆனால் அவர் கொடுக்காமல் மறுத்து வந்தார்.
இதனால் அவர் மீது கோபத்தில் இருந்தேன். சம்பவத்தன்று மீண்டும் தாயிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் கொடுக்க முடியாது என கூறினார். இதனால் ஆத்திரத்தில் அவரை விறகு கட்டையால் தலையில் அடித்தேன். அதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






