search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்கரை இஸ்லாமியா பள்ளி செல்லும் சாலை அமைக்கும் பணி தொடங்கியது
    X

    கீழக்கரை இஸ்லாமியா பள்ளி செல்லும் சாலை அமைக்கும் பணி தொடங்கியது

    • ‘மாலைமலர்’ செய்தி எதிரொலியாக கீழக்கரை இஸ்லாமியா பள்ளி செல்லும் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
    • மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை சேதம் அடைந்த தால் புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது. ஒப்பந்ததாரர் அலட்சியம் காரணமாக பணி தொடங்க வில்லை.

    குறுகலான சாலையின் ஒரு பக்கம் உடைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள். மறு பக்கம் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து கடந்த 6-ந்தேதி 'மாலைமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில் தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இருப்பினும் குறைந்த எண்ணிக்கையில் தொழிலா ளர்கள் வேலை செய்வதால் பணி தாமதமாக நடந்து வருகிறது. நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சாலை பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×