என் மலர்
ராமநாதபுரம்
- இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்தனர்.
- ராமேசுவரம் பகுதியில் மட்டும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களின் படகுகளையும், மீனவர்களையும் சிறைப்பிடித்து செல்லும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
அவ்வாறு சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் பேச்சுவார்த்தை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதிலும், மீனவர்களின் படகுகளை இலங்கை நாட்டுடமையாக்கி வருகிறது.
இதனால் விடுதலையானபோதும், வெறும் கையுடன் தாயகம் திரும்பும் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து மாற்று தொழிலை தேடி வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கை பன்னெடுங்காலமாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 420 விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி பாலா, கிரீம்ஸ் ஆகியோருக்கு சொந்தமான படகுகளில் சென்ற 15 மீனவர்களை சிறைப்பிடித்தனர்.
அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டதோடு, மீனவர்களை காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே மீன்பிடி தடை காலம் முடிந்து ஒரு மாதம் ஆவதற்குள் இரண்டு முறை மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலம் காலமாய் நடக்கும் இதுபோன்ற இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்தனர்.
அதன்படி இன்று ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 820 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழந்து உள்ளனர்.
அதேபோல் மீன்பிடி தொழிலை சார்ந்த ஐஸ் பேக்டரிகள், மீன்கூடை தூக்கும் தொழிலாளர்கள், டீசல் விநியோக நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியின்றி வீடுகளுக்குள் முடங்கினர்.
இன்று ஒருநாள் மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமேசுவரம் பகுதியில் மட்டும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- ஆழ்கடல் மீன்கள் குகை பொருட்காட்சி தொடங்கப்பட்டது.
- தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் திறந்து வைத்தார்
கீழக்கரை
ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் ராஜா மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் மதுரையைச் சேர்ந்த எம்.டி.சி. நிறுவனத்தின் சார்பில் முதன்முறையாக ஆழ்கடல் மீன்கள் குகை கண்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்காட்சி தொடங்கப் பட்டது. இதன் திறப்பு விழா நிறுவன உரிமையாளர் சிட்டிபாபு தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிநகரம் முத்துக்கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொருட்காட்சியை திறந்து வைத்தார். தி.மு.க மதுரை மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணகுமார், கவுன்சிலர் இந்திரா மேரி, அ.திமு.க நிர்வாகி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்பொருட்காட்சியில் ஆழ்கடல் போன்ற செட்டில் கண்ணாடி குகை அமைத்து அதில் பலவகையான வண்ண ஆழ்கடல் மீன்கள் நிரம்பிய கண்காட்சி அமைக் கப்பட்டது. மேலும் பொழுது போக்கு பூங்கா, ஷாப்பிங் மேலா, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் உணவகங் கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பனிக்குகை, 3-டி ஷோ, பேய் வீடு, பல வகையான ராட்டினங்கள், ஜெயிண்ட்வீல் போன்ற குழந்தைகளுக்கான விளை யாட்டு அரங்குகள் அமைக் கப்பட்டுள்ளது.
இந்த பொருட்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை நிறுவன மேலாளர் உமாபதி செய்திருந்தார்.
- 24 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
- தீர்வுத் தொகையாக ரூ.76 லட்சத்து 28 ஆயிரத்து 645 அறிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, இரு தரப்பினரின் ஒப்புதலுடன் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் மூலமாக தீா்வு காணப்பட்டு வருகிறது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) கோபிநாத் தலைமையில் நடந்தது.
முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பரணிதரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஷ்வரன், நீதித்துறை நடுவர் நீதிபதி வெர்ஜின் வெஸ்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் கதிரவன் வரவேற்று பேசினார். ராமநாதபுரம், ராமேசுவரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூா், கமுதி பகுதிகளில் 8 அமா்வுகளில் 251 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 24 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது.
தீர்வுத் தொகையாக ரூ.76 லட்சத்து 28 ஆயிரத்து 645 அறிவிக்கப்பட்டது.
- அறிவியல் அற்புதம் கலந்துரையாடல் நடந்தது.
- வட்டார கல்வி அலுவலர்கள் வாசுகி, பாஸ்கரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தொடக்க கல்வித்துறையின் சார்பில் அறிவியல் அற்புதம் என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.
தேர்த்தங்கல் பள்ளி தலைமை ஆசிரியர் நாகலட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் "தொலை நோக்கி பார்வை" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது. முதன்மை கருத்தாளராக தமிழ்நாடு ஆஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் மண்டல ஒருங்கிணைப்பாளார் சொக்கநாதன், திருச்சி அண்ணா கோளரங்க உயர் தொழில்நுட்ப அலுவலர் ஜெயபால் கலந்து கொண்டனர்.
தொலைநோக்கியின் வரலாறு, அதன் வகைகள், பயன்பாடு, பள்ளிகளில் வானவியல் மன்றம் தொடங்குதல், தொலை நோக்கி, பைனாகுலர், வானியல் கருவிகள், வானியல் அறிஞர்களின் பிறந்த நாட்களை கொண்டாடுதல், சூரிய- சந்திர கிரகண நாட்கள், நிழல் இல்லா நாள், நீண்ட பகல், இரவு நாட்கள், சம இரவு-பகல் நாட்கள், வானியல் மேற்படிப்பு அதில் உள்ள வேலை வாய்ப்புகள், இஸ்ரோவின் வரலாறு, செயல்பாடு மற்றும் அதன் வளர்ச்சி, அதில் உள்ள படிப்புகள், வேலை வாய்ப்புகள், டெலஸ்கோப் செய்முறை பயிற்சி, ஆசிரியர்கள்- மாணவர்களுக்கான ஆஸ்ட்ரானமி பயிலரங்கு, ஆஸ்ட்ரோ போட்டோ கிராபி, போஸ்டர் தயாரிப்பு போட்டிகள், ஆஸ்ட்ரானமி இளைஞர் மாநாடு நடத்துதல், கோடை கால பயிற்சிகள், அறிவியல் பாடல்கள், ஆஸ்ட்ரோ ஒலிம்பியார்ட், ஆஸ்ட்ரானமி மென்பொருட்கள் ஆகிய தலைப்புகளில் கலந்துரை யாடப்பட்டது.
நிகழ்ச்சியை நயினார் கோவில் வட்டார கல்வி அலுவலர்கள் வாசுகி, பாஸ்கரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்ட நடுநிலைப் பள்ளி தலைமை ஆரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், மாணவர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இல்லம் தேடிக்கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முனியசாமி நன்றி கூறினார்.
- மீன் மார்க்கெட் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- எவ்வித நட வடிக்கையும் மேற்கொள்ளா மல் இருப்பது புரியாத புதி ராக உள்ளது.
ராமநாதபுரம்
திருப்புல்லாணி ஊராட்சி யில் மீன் மார்க்கெட் இல்லாததால் மீனவர்கள் சாலையோரங்களில் மீன் விற்பனை செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து பல் வேறு சமூக நல அமைப்புகள் பொதுமக்கள் புதிய மீன் மார்க்கெட் கட்டக்கோரி கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மீன் மார்க்கெட் கட்டப்பட்டது. கடைகள் கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதத்தை ஏற் படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக திருப் புல்லாணி பகுதியில் சாலை யோரங்களில் மீன் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் சாமி ஆலயத்திற்கு செல்லும் வழியில் மீன்களை விற் பனை செய்து வருவ தால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முகம் சுளித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் கூறியதாவது:-
பல லட்ச ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட மீன் மார்க்கெட் திறக்கப்படாத தால் திருப்புல்லாணி ஊரா ட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சாலை யோரங்களில் விற்பனை செய்யப்படும் மீன் வியா பாரிகளை தடுத்து நிறுத்தி னால் மீனவர்கள் மீன் மார்க்கெட் உள்ளே விற் பனை செய்யும் நிலை ஏற் படும். இது குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை மனு அனுப்பியும் எவ்வித நட வடிக்கையும் மேற்கொள்ளா மல் இருப்பது புரியாத புதி ராக உள்ளது.
- நேரு யுவகேந்திரா சார்பில் முத்தமிழ் அறக்கட்டளைக்கு விருது வழங்கப்பட்டது.
- மகளிர்க்கு இலவச தையல் பயிற்சி போன்ற சேவைகளை செய்து வருகிறது.
முதுகுளத்தூர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு அமைச்ச கத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா சார்பில் பொது சேவைக்கான விருது வழங்கும் விழா நடந்தது.இதற்கான அறிவிப்பு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதன் படி பல்வேறு மன்றங்கள் அறக்கட்ட ளைகள் நற்பணிமன்றங்கள் தாங்கள் செய்த சேவைகளை சமர்ப்பித்தனர். இதில் இருந்து 5 மன்றங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த 5 மன்றங்களுக்கும் ராமநாத புரம் மாவட்ட துணை கலெக்டர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது.
இறுதியாக முதுகுளத்தூர் தாலுகாவில் செயல்படும் முத்தமிழ் அறக்கட்டளை விருதுக்கு தேர்வு செய்யப் பட்டது. இதற்கான விழா வில் தர்மர் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முத்தமிழ் அறக் கட்டளை நிறுவனர் சபரி மலைநாதனிடம்விருதை வழங்கினார்.
முத்தமிழ் அறக்கட்டளை யானது வேலைவாய்ப்பு முகாம், விதவைகளுக்கு மளிகை சாமான் வழங்கல், ஊனமுற்றோருக்கு நிதி உதவி, முக கவசம் வழங்கல், மரக்கன்று வழங்கல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல், ஆதரவற்றோ ருக்கு உணவு வழங்கல், மகளிர்க்கு இலவச தையல் பயிற்சி போன்ற சேவைகளை செய்து வருகிறது.
- பள்ளிவாசல் திறப்பு விழா; நவாஸ்கனி எம்.பி. பங்கேற்றார்.
- ஏற்பாடுகளை எம்.ஆர்.எப், வாலிபர்கள் மற்றும் 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டியினர் செய்திருந்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெருவில் 18 வாலிபர்கள் தர்கா உள்ளது. இங்கு புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது. ஓடக்கரை பள்ளி ஜமாத் மற்றும் புதுப்பள்ளி ஜமாத் தலைவர் யூசுப் சாகிப், முஸ்லீம் சங்க செயலாளர் சதக் அன்சாரி, துணைத் தலைவர் முஜீபுர் ரஹ்மான், அனைத்து ஜமா அத் கூட்டமைப்பு தலைவர் ஹாமீது, ஜகாத் கமிட்டி மூத்த நிர்வாகி ஜப்பார், சிகந்தர் பாட்ஷா ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஓடக்கரை பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டி நிர்வாகி சதக் இல்யாஸ் முன்னிலை வகித்தனர். ஜகாத் கமிட்டி கவுரவ ஆலோசகர் காதர் ஷாஹீப் வரவேற்றார். எழுத்தாளர் முகம்மது நஜீம் மரிக்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக நவாஸ்கனி எம்.பி., வக்பு வாரிய சேர்மன் அப்துல் ரஹ்மான், முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான் பங்கேற்றனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் அலி, ஏஜே கமால், உமர், மாவட்ட தலைமை காஜி சலாஹுத்தின் ஆலிம், 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டி தலைவர் ஜாகிர் உசைன், கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க தலைவர் யூசுப் சாஹிப், சங்க மேலாளர் அப்துல் ரசாக், குதுபுதீன் ராஜா, பசீர்தீன் கலந்து கொண்டனர். ஜக்காத் கமிட்டியின் பொருளாளர் சீனி முகம்மது நன்றி கூறினார்.முடிவில் 1000 கிலோ அரிசியில் நெய் சோறு தயார் செய்து கந்தூரி உணவாக வழங்கினர். விழா ஏற்பாடுகளை எம்.ஆர்.எப், வாலிபர்கள் மற்றும் 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டியினர் செய்திருந்தனர்.
- கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
சாயல்குடி
சாயல்குடி போலீஸ் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் தலைமையிலான போலீசார் சாயல்குடி அருகே உள்ள ரோஸ் மாநகர் கிராமத்தை சேர்ந்த மெர்ஜோ ( வயது 26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவரிடம் இருந்த 5 பொட்டலம் கஞ்சாவை கைப்பற்றி அவர் கொடுத்த தகவலின் பேரில் கொண்டுநலான் பட்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (24), சிவக்குமார் (20) ஆகியோரிடம் விசாரித்தனர். பாலமுருகன் வீட்டில் இருந்து ½ கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து மெர்ஜோ, பாலமுருகன், சிவக்குமார், ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர.
- தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடந்த சில நாட்களாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.
- எல்லைதாண்டி மீன்பிடித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இலங்கை நீதிமன்றம் கூறியுள்ளது.
மீன்பிடி தடைகாலம் முடிந்து கடந்த மாதம் 22-ந்தேதி மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள் அதிகப்படியான மீன்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு மிஞ்சியதோ அடுத்தடுத்த சிறைப்பிடிப்பு சம்பவங்களும், தாக்குதலும் தான்.
முதன்முறையாக கடந்த மாதம் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேசுவரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 22 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் 15 பேரை இன்று இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர்.
ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த கிரீம்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கிறிஸ்து (வயது 40), ஆரோக்கியராஜ் (45), ஜெர்மஸ் (33), ஆரோக்கியம் (38), ரமேஷ் (25), ஜெகன் (40), பிரபு (36), மெல்டன் (45) ஆகிய 8 பேரும் மற்றும் ராமேசுவரத்தை சேர்ந்த பாலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரியன் ரோஸ் (44), கார்ச் (30), அந்தோணி (45), பிரதீபன் (35), ஈசாக் (25), ஜான் (30), ஜனகர் (32) ஆகிய 7 பேர் என மொத்தம் 15 பேர் மீன்துறை அலுவலக அனுமதியுடன் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் அதிகவேகமாக வந்தது.
அவர்களை பார்த்ததும் ராமேசுவரம் மீனவர்கள் அச்சத்தில் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அதற்குள் அந்த 2 படகுகளையும் சிங்கள கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
பின்னர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை அபகரித்துக்கொண்ட தோடு, எல்லை தாண்டி வந்ததாக கூறி படகில் இருந்த 15 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களையும், மீனவர்களின் விசைப்படகுகளையும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாளை இலங்கை சிறையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் விடுதலையாவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்ற விபரம் தெரியவரும்.
இதற்கிடையே ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த வாரம் தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவித்த இலங்கை நீதிமன்றம், இனிமேலும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் 2 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் இன்று 15 பேர் சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர், பாசன தெளிப்பு நீர் பாசனம் அமைக்கலாம்.
- அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க 950 எக்டர் ,லக்கு பெறப்பட்டுள்ளது. ,த்திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், ,தர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும். ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 5 எக்டர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்து தரப்படும்.
துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறு அமைப்பதற்கும், டீசல் பம்பு செட் மின்சார மோட்டார் பம்பு செட் அமைப்பதற்கும், அரசு மானியம் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற ,ணையதளத்தின் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி ,யக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
,வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 3 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.
- ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 28 சீர்வரி சைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
பரமக்குடி
பரமக்குடியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திரவுபதி அம்மன் கோவி லில் 3 ஜோடிகளுக்கு கட்டில், பீரோ, குத்து விளக்கு என ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 28 சீர்வரி சைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், ஆய்வாளர் சுந்தேஷ்வரி உள்படல பலர் கலந்து கொண்டனர்.
- பா.ம.க செயற்குழு கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் தொண்டி பேரூராட்சியில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சந்தனதாஸ், தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப் பாளராக மாவட்ட செயலா ளர் தேனி.சை.அக்கிம் கலந்து கொண்டார்.மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் வர வேற்றார்.
சென்னையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு கைகளை இழந்த ராமநாத புரம் மாவட்ட குழந்தைக்கு சிறந்த மருத்துவ சேவை அளிக்க வேண்டும் அவர் களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும் மேலும் இது விஷயமாக மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீதி வேண் டும் என்றால் நீதிமன்றம் செல்லுங்கள் என்று கூறி யதை வன்மையாக கண்டிக் கிறோம்.
அலட்சியமாக இருந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் போராட்டம் நடைபெறும். தேவிபட்டினம் ஊராட்சி நவபாசானம் செல்லும் வழியில் மாநிலங் களவை உறுப்பினர் அன்பு மணி ராமதாஸின் நிதியி லிருந்து உயர் கோபுர விளக்கு அமைப்பது என்றும், வருகிற 25-ந் தேதி பசுமைத் தாயகம் நாளான பா.ம.க நிறுவனர் ராம தாஸின் பிறந்தநாளில் திரு வாடானை ஒன்றியம் பகுதி யில் 100 மரக்கன்றுகள் நட்டு, 10 இடங்களில் கட்சி கொடி ஏற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
முடிவில் ஒன்றிய தலைவர் மணி என்ற ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.
திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம், ராம நாதபுரம் மாவட்ட செயலா ளர் பாலா, ராமநாதபுரம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்தி மற்றும் திருவாடானை ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






