என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொட்டு நீர் பாசனம்"

    • 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர், பாசன தெளிப்பு நீர் பாசனம் அமைக்கலாம்.
    • அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க 950 எக்டர் ,லக்கு பெறப்பட்டுள்ளது. ,த்திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், ,தர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும். ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 5 எக்டர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்து தரப்படும்.

    துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறு அமைப்பதற்கும், டீசல் பம்பு செட் மின்சார மோட்டார் பம்பு செட் அமைப்பதற்கும், அரசு மானியம் வழங்கப்படும்.

    மேற்குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற ,ணையதளத்தின் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி ,யக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    ,வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×