என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா வைத்திருந்த  3 பேர் கைது
    X

    கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

    • கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடி போலீஸ் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் தலைமையிலான போலீசார் சாயல்குடி அருகே உள்ள ரோஸ் மாநகர் கிராமத்தை சேர்ந்த மெர்ஜோ ( வயது 26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரிடம் இருந்த 5 பொட்டலம் கஞ்சாவை கைப்பற்றி அவர் கொடுத்த தகவலின் பேரில் கொண்டுநலான் பட்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (24), சிவக்குமார் (20) ஆகியோரிடம் விசாரித்தனர். பாலமுருகன் வீட்டில் இருந்து ½ கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

    இதுகுறித்து மெர்ஜோ, பாலமுருகன், சிவக்குமார், ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர.

    Next Story
    ×