என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • பழுதாகி நின்ற லாரியின் மீது மோதி 4 பெண்களின் தந்தை பரிதாப பலியானார்
    • கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கந்தர்வகோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் குருமூர்த்தி(வயது 55). பெட்ரோல் பங்கில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு செல்லும்போது தஞ்சை சாலையில் புதுநகர் சுங்கச்சாவடி அருகே பழுதாகி நின்ற லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் பலியான குருமூர்த்திக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. விபத்து தொடர்பாக குருமூர்த்தி மகள் பிரவீனா கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.

    • பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் வாழ்ந்தது அவரது நண்பர் அதானி ஒருவர்தான்.
    • சிஏஜி அறிக்கை மூலம் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால மோசடிகள் வெளிவர தொடங்கியுள்ளது.

    புதுக்கோட்டையில் இன்று திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் குற்றம்சாட்டுவது போல, திமுக ஆட்சிக்கு வந்தால் வாழ்வது கருணாநிதி குடும்பம்தான். ஏனென்றால், இங்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் கருணாநிதியின் குடும்பம்தான்.

    பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் வாழ்ந்தது அவரது நண்பர் அதானி ஒருவர்தான். சிஏஜி அறிக்கை மூலம் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால மோசடிகள் வெளிவர தொடங்கியுள்ளது.

    கடந்த 20ம் தேதி ஒரு கட்சியின் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு ஏன் நடந்தது என்றே தெரியவில்லை. மாநாடு எப்படியெல்லாம் நடத்தக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். அதிமுக மாநாட்டிற்கு சென்ற ஒருவர் தன் மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாநாட்டு பொறுப்பாளரான ஜெயக்குமாரிடம் விசாரிக்க வேண்டும்.

    இனி வரக்கூடிய காலங்களில், யாருக்கும் சால்வை போன்றவைகளை அணிவிக்காமல் புத்தகங்களை வழங்குங்கள். விளம்பர பதாகைகள் வைக்காதீர்கள். பட்டாசு வெடிக்காதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடன் தவணை கட்டாததால் வீட்டை ஏலம் விட நோட்டீஸ் விடப்பட்டால் விரக்தியில் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்
    • விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    விராலிமலை,

    விராலிமலை தாலுகா வடுகப்பட்டி அழகு நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு நிசா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.ரமேஷ் திருச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் பெற்று வீடு கட்டி இருந்தார். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ரமேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.இதற்கிடையே உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் ரமேஷ் தவணை தொகையை சரிவர கட்ட முடியாமல் இருந்துள்ளார்.இதையடுத்து வங்கி சார்பில் ரமேஷ் வீட்டில் ஏல நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ரமேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு எலிமருந்து(விஷம்) சாப்பிட்டு விட்டதாக தனது குடும்பத்தினரிடம் செல்போனில் கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரமேஷை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணை குத்தி கொன்ற சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • தாய் மது அருந்த காரணமாக இருந்ததால் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரம்மன். இவரது மனைவி சுப்பம்மாள் (வயது 45). இவர்களுக்கு அருண் பாண்டியன் (20), ஹரிணி (18) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர்.சுப்பம்மாள் அறந்தாங்கி எல்.என்.புரம் நவரத்தின நகரில் மகன் அருண்பாண்டியனுடன் வசித்து வந்தார். பிரம்மன், மகள் ஹரிணியுடன் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு சுப்பம்மாள் வீட்டில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அப்போது வீட்டிற்கு வந்த அருண்பாண்டியன் தனது தாய் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து கதறி அழுதார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.பின்னர் இதுகுறித்து அவர்கள் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் ேபரில், அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.பின்னர் இதுகுறித்து அவர்கள் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் ேபரில், அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.தொடர்ந்து புதுக்கோட்டையில் இருந்து மோப்ப நாய் தீரன் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடையங்கள் எடுத்து சென்றனர்.போலீசாரின் தீவிர விசாரணையில் அதே பகுதியியை 16 வயது சிறுவன் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அச்சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர்.சுப்பம்மாளுடன் சேர்ந்து எனது தாய் மல்லிகா மது அருந்தினார். இதனை பார்த்த நான் எனது தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு சுப்பம்மாள் தான் காரணம் என நினைத்து ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன் என தெரிவித்ததாக தெரியவருகிறது.

    • விஷ இலையை தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்
    • கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரியதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை கீரனூர் அருகே உள்ள நார்த்தாமலையை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் லத்திகா (வயது 19). இவர் புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் வயிற்று வலி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு லத்திகா விஷ இலையை தின்று உள்ளார். இதையடுத்து, அவரை குடும்பத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லத்திகா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரியதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரளை கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது
    • அன்னவாசல் போலீசார் லாரி உரிமையாளர், டிரைவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    புதுக்கோட்டை,

    அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் பகுதியில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற அன்னவாசல் வருவாய் ஆய்வாளர் லோகு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தார். அப்போது அதில் அனுமதியின்றி அரளை கற்கள் ஏற்றி ெசன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த அவர் மேல் நடவடிக்கைக்காக அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக அன்னவாசல் போலீசார் லாரி உரிமையாளர் ராஜலெட்சுமி, டிரைவர் செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஐகோர்ட்டு உத்தரவுப்படி புதுக்கோட்டையில் அனைத்து கல் குவாரிகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டது
    • இது தொடர்பாக அந்தந்த கல் குவாரி உரிமையாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஒரு கல் குவாரி தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் கல் குவாரிகள் செயல்பாடுகள், கனிம வளங்கள் அதிகமாக எடுக்கப்பட்டது தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து குவாரிகளுக்கும் தடை விதித்து, குவாரிகளை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கனிம வள இயக்குனர் ஆய்வு செய்து 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தனர். இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து குவாரிகளும் செயல்பட தடை விதித்து அமல்படுத்தப்பட்டன. இது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி மாவட்டத்தில் அனைத்து குவாரிகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அந்தந்த கல் குவாரி உரிமையாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டன. மாவட்டத்தில் இன்று (அதாவது நேற்று) கல் குவாரிகள் இயங்கவில்லை. ஐகோர்ட்டு உத்தரவுப்படி மாவட்டத்தில் கல் குவாரிகளை ஆய்வு செய்து 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்றனர்.

    • புதுக்கோட்டை வரைவு வாக்குசாவடி பட்டியல் வெளியீடப்பட்டு உள்ளது
    • அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில்கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறையின்போது, வாக்குசாவடி மையங்கள் மறுசீரமைத்தல் குறித்து, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான விளக்கக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், வரைவு வாக்குசாவடி பட்டியலை, அவர் வெளியிட்டார்.

    வாக்காளர் பட்டியலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,62,655 ஆண் வாக்காளர்கள், 6,79,306 பெண் வாக்காளர்கள், 66 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 13,42,027 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 1559 வாக்குச்சாவடி மையங்கள், 941 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. இதில் நகர எல்லைக்குள்85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்லைக்குள் 856 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு தொடர்பாக 77 இடம் மாற்றம், வாக்குச்சாவடி பிரிவு மாற்றம், வாக்குச்சாவடி பெயர் மாற்றம் என மொத்தம் 123 மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வாக்காளர் பதிவு அலுவலர்கள்வருவாய் கோட்டாட்சியர்கள் குழந்தைசாமி (இலுப்பூர்), ப.ஜஸ்டின் ஜெபராஜ் (அறந்தாங்கி), தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.சோனை கருப்பையா மற்றும் ரெத்தினம் (தி.மு.க.), முகமது சேட் (அ.இ.அ.தி.மு.க.), அப்துல் ஜாபர் (ஆம் ஆத்மி கட்சி), எஸ்.வெங்கட்ராமன் (பாரதிய ஜனதா கட்சி), எஸ்.சங்கர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), சேதுராமன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டை பிருந்தாவனம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது
    • திரளான  பக்த ர்கள்  வருகைதந்து வீர  ஆஞ்சநேயரை   வழிபட்டனர்.  

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை  இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த பிருந்தாவனம வடக்கு ராஜ  வீதியில்  அமை ந்துள்ள  ஸ்ரீ வீர  ஆஞ்சநேயர் கோவிலில் 10ஆம் ஆண்டு  வருஷாபி ஷேகவிழா   சிறப்பு  வழிபாடு நடைபெற்றது.

    கோவிலில் மூலவர்  ஸ்ரீ வீர  ஆஞ்சநேயர் சுவாமிக்கு,   பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் வட மாலை  அலங்காரத்திலும், மஹா தீபராதனை நடைபெற்றது.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்ப ட்டது  மாலையில் ஸ்ரீ ஆஞ்சநேயர்சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு   அருள்பாலித்தார். நிகழ்வில் திரளான  பக்த ர்கள்  வருகைதந்து ஸ்ரீ வீர  ஆஞ்சநேய ர்சுவாமியை   வழிபட்டனர்.     இரவு  உற்சவர் ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்ட தேரில்   பல்வேறு வீதி வழியாக பவனி வந்தது

    வருஷாபிஷேக விழா ஏற்பாடுகளை,  நிர்வாகிகள்  சிறப்புடன் செய்திருந்தனர்.

    • புதுக்கோட்டை அருகே பணித்தள பொறுப்பாளர் தற்கொலை முயற்சி ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    • தேசிய ஊரக பணியாளர்கள் காரையூர் போலீசில் புகார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் காரையூர் அருகே உள்ள முள்ளிப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட (100 நாள் வேலை) பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி கலைச்செல்வி என்பவர் வேலை திட்டத்திற்கான அடையாள அட்டையை வாங்க வந்தார்.

    இதைப்பார்த்த பெண் ஒருவர் ஊராட்சி தலைவரை செல்போனில் தொடர்பு கொண்டு கலைச்செல்வி பணித்தள பொறுப்பாளராக இருக்கக்கூடாது. இது தொடர்பாக ஏற்கனவே பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

    இதனை கேட்டு மனமுடைந்த கலைச்செல்வி மண்எண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர்.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர், செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), மேற்பார்வையாளர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் யாரும் சம்பவ இடத்திற்கு வராததால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்ட பணியாளர்கள் காரையூர் போலீசில் புகார் அளித்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    • புதுக்கோட்டை திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது
    • அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன உணவருந்தினார்

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவ, மாணவிகளுடன் ஒன்றாக தரையில் அமர்ந்து உணவருந்தினார்.

    உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் சிறப்பாக பணியாற்றிய நூலகர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது
    • நூலகர் தின விழாவை முன்னிட்டு கலெக்டர் மெர்சி ரம்யா நினைவு பரிசுகளை வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில், மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய, நூலகர் தின விழாவில், சிறப்பாக பணிபுரிந்த நூலகர்களுக்கும் மற்றும் அதிகளவில் புரவலர்களை சேர்த்த நூலகர்களுக்கும், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது பொதுமக்கள் அனைவரும் புத்தகம் படிப்பின் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறைவான செலவில் நிறைவான தகவல்களை பெறுவதற்காக பொதுமக்கள் நூலகத்தினை அதிக அளவில் பயன்படுத்திட வேண்டும்.

    கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களிலும் அடிப்படை வசதிகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதன் மூலம் பொதுமக்களின் நூலக பயன்பாட்டினை அதிகரிக்க முடியும். இணையதள பயன்பாட்டில் மூழ்கி இருக்கும் இன்றையகால சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் விதமாக அவர்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்.

    எனவே பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நூலகத்திற்கு சென்று நல்ல நூல்களை படிப்பதன் மூலம் நம்மை நாமே நல்வழிப்ப டுத்திக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் (கூ.பொ.) சிவக்குமார், வாசகர் வட்டத் தலைவர் தங்கம்மூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×