என் மலர்
உள்ளூர் செய்திகள்

விராலிமலையில் டிரைவர் தற்கொலை
- கடன் தவணை கட்டாததால் வீட்டை ஏலம் விட நோட்டீஸ் விடப்பட்டால் விரக்தியில் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்
- விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விராலிமலை,
விராலிமலை தாலுகா வடுகப்பட்டி அழகு நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு நிசா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.ரமேஷ் திருச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் பெற்று வீடு கட்டி இருந்தார். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ரமேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.இதற்கிடையே உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் ரமேஷ் தவணை தொகையை சரிவர கட்ட முடியாமல் இருந்துள்ளார்.இதையடுத்து வங்கி சார்பில் ரமேஷ் வீட்டில் ஏல நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ரமேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு எலிமருந்து(விஷம்) சாப்பிட்டு விட்டதாக தனது குடும்பத்தினரிடம் செல்போனில் கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரமேஷை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






