என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிருந்தாவனம் வீரஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேகம்
    X

    பிருந்தாவனம் வீரஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேகம்

    • புதுக்கோட்டை பிருந்தாவனம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது
    • திரளான  பக்த ர்கள்  வருகைதந்து வீர  ஆஞ்சநேயரை   வழிபட்டனர்.  

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த பிருந்தாவனம வடக்கு ராஜ வீதியில் அமை ந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் 10ஆம் ஆண்டு வருஷாபி ஷேகவிழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    கோவிலில் மூலவர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு, பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் வட மாலை அலங்காரத்திலும், மஹா தீபராதனை நடைபெற்றது.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்ப ட்டது மாலையில் ஸ்ரீ ஆஞ்சநேயர்சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்வில் திரளான பக்த ர்கள் வருகைதந்து ஸ்ரீ வீர ஆஞ்சநேய ர்சுவாமியை வழிபட்டனர். இரவு உற்சவர் ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்ட தேரில் பல்வேறு வீதி வழியாக பவனி வந்தது

    வருஷாபிஷேக விழா ஏற்பாடுகளை, நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்.

    Next Story
    ×