என் மலர்
புதுக்கோட்டை
- பாதிரக்குடி முதல் சேமங்கோட்டை வரை 4 கி.மீ. பழுதடைந்துள்ள சாலை
- பள்ளி மாணவர்கள் செல்லும் இந்த சாலையை உடனடியாக செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா தீயத்தூரிலிருந்து சேமங்கோட்டை வரை 7 கிலோ மீட்டர் தார்ச்சாைலை போடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையை இணைக்கும் இச்சாலையில் நாள்தோறும் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயணிக்கின்றனர். மேலும் பாதிரக்குடியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலுகின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இதே சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையில் பாதிரக்குடி முதல் சேமங்கோட்டை வரை சுமார் 4 கிலோ மீட்டர் அளவிற்கு தார்ச்சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் இச்சாலையால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு இதுவரை 10 ற்கும் மேற்பட்டோருக்கு எழும்பு முறிவு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பள்ளி மாணவ மாணவியர்கள் பயணிக்கின்ற இச்சாலையில் அசம்பாவிதங்கள் நிகழாவண்ணம், உடனடியாக போர்க்கால அடிப்படையில்
- ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.
- ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது.
கோவை:
கோவை பீளமேட்டில் நடந்த ஓணம் விழாவில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
அப்போது அவர் அங்குள்ள மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மலையாள சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். தமிழக முதலமைச்சர் கூட மலையாளத்தில் வாழ்த்து சொல்லி இருக்கிறார். அதுபோல, தீபாவளிக்கும் முதலமைச்சர் வாழ்த்து கூறினால் அவர் அனைவருக்குமான முதலமைச்சராக செயல்படுவார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும்.
ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.
கோவை மாநகராட்சி மேயர் மற்றும் குடும்பத்தினர் மீது இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசின் முதன்மையான பதவியில் இருப்பவரின் குடும்பத்தின் மீது இது போன்ற புகார்கள் வருகிறபோது, மாநில அரசு இதனை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சிக்கு வருகிற போது எல்லாம் மக்களை மிரட்டுவது, சட்டத்தை தங்களுக்கு சாதமாக மாற்றுவது சர்வசாதாரணமாகி விட்டது. கோவை மேயர் குடும்பத்தினர் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது. ஆதாரங்கள், சாட்சியங்கள் இருப்பதை வைத்து மத்திய அரசின் துறைகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு கட்சி பாகுபாடு பார்ப்பது கிடையாது. ஆதாரத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க இளைஞரணி செயல் வீரர் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த அ.தி.மு.க.-வை விரட்ட வேண்டும்
புதுக்கோட்டை,
சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே திருச்சி-தஞ்சை சாலையில் இடையப்பட்டி அருகே புதுக்கோட்டை மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இளைஞர் அணியில் உள்ள நிர்வாகிகளை மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். மேலும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்ல பாண்டியன் ஆகியோரும் பங்கேற்றனர். இதில் உதயநிதி ஸ்டாலின் பேசும் ே பாது கூறியதாவது,திமுகவில் உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு உதாரணம் இளைஞரணி தான், இளைஞரணியில் இருந்து படிப்படியாக முன்னேறிதான் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக உள்ளார், சிலரை போல் டேபிளுக்கு அடியில் புகுந்து யார் காலையும் பிடித்து அவர் முதலமைச்சராகவில்லை. உழைத்து முதலமைச்சராக வந்துள்ளார். சமீபத்தில் ஒரு மாநாடு நடைபெற்றது. மாநாடு எப்படியெல்லாம் நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணமாக நடந்தது. மாநாடு நடத்தியவர்களுக்கு ஏன் அந்த மாநாடு நடைபெற்றது என்றே தெரியவில்லை, பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுகவை விரட்ட வேண்டும், சட்டமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை விரட்டினீர்களோ அதேபோல் 2024ல் அதிமுக எஜமானர்களையும் விரட்ட வேண்டும்.மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் அவரது நெருங்கிய நண்பர் அதானி மட்டும்தான் வாழ்ந்துள்ளார். மக்களுக்கு எதையும் செய்ய வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- நீதிமன்றத்தில் இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது மனைவியுடன் ஆஜராகி இருந்தார்.
புதுக்கோட்டை:
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் அவரது மனைவி ரம்யாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல் குவாரிகள், நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது மொத்தம் 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது மனைவியுடன் ஆஜராகி இருந்தார்.
அடுத்த மாதம் 26-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணேசன் (வயது 55). நிலக்கிலாரான இவர் புதுக்கோட்டை பனையப்பட்டி மற்றும் மதுரையில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த 2019 வரை செல்வ கணேசன் தனது குடும்பத்தினருடன் பனையப்பட்டியில் உள்ள தனது பெருமாள் இல்லத்தில் வசித்தார். பின்னர் மதுரைக்கு குடி பெயர்ந்தனர். அதைத்தொடர்ந்து கடந்த நான்கு வருடமாக பெருமாள் இல்லம் பூட்டப்பட்டு கிடந்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு பனையப்பட்டி இல்லத்துக்கு செல்வகணேசன் வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை. மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர். இதுகுறித்து செல்வகணேசன் பனையப்பட்டி போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடம் குறைந்து வந்து விசாரணை நடத்தினார். நிலக்கிழார் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கண்டியன் தெருவை சேர்ந்தவர் டயானா இவருக்கு சொந்தமான வெள்ளாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் 50 அடி ஆழமுள்ள வயல் கிணற்றில் தவறி விழுந்து விட்டது. ஆடு கத்தும் சத்தம் கேட்டு அருகில் இருந்தோர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் உடனே தீயணைப்பு நிலை அலுவலர் பொறுப்பு மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி தவித்துக் கொண்டிருந்த ஆட்டை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை யினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது
- முதியோர் உதவித்தொகை வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா உத்தரவிட்டார்கள். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில்பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர் களுக்கு எலக்ட்ராணிக் முறையில் பிரெய்லி எழுத்துக்களில் படிப்பதற்காக பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட பிரெய்லி ரீடர் கருவியினை 4 நபர்களுக்கு தலா ரூ.35 ஆயிரம் வீதம்ரூ.1.40 இலட்சம் மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா வழங்கினார். இக்கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செய்யது முகம்மது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்அமீர் பாஷா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும்அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் ரயில் சேவையை மீண்டும் தொடங்க ஒத்துழைப்பு செய்த ரயில் கோட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
- 15 ஆண்டுகளுக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் ரயில் சேவையை மீண்டும் தொடங்க ஒத்துழைப்பு செய்த ரயில் கோட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.அறந்தாங்கியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற பணிகள் நடைபெற்று வந்தது. அதன் காரணமாக அறந்தாங்கி மார்கமாக செல்லக் கூடிய ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அகல ரயில் பாதை பணிகள் முடிவுற்றும் சில ஆண்டுகள் ரயில் சேவைகள் தொடங்கப்படாத நிலையில் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின்பு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கு காரணமாக செயல்பட்ட ரயில் கோட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வர்த்தக சங்க தலைவர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி ரயில் கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் ஹரிகுமார், திருச்சி ரயில் கோட்ட வணிக மேலாளர் மோகனப்பிரியா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேலும் அறந்தாங்கி மார்க்கமாக சென்னைக்கு செல்ல வாரத்தில் 3 நாட்கள் ரயில்கள் இயக்கப்படுகிறது, இதனை பழைய முறைப்படி வாரத்தில் அனைத்து நாட்களும் ரயில் சேவை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் ஏற்று கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்தனர். நிகழ்ச்சியில் வர்த்தக சங்க செயலாளர் தவசுமணி, கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் குமார் உள்ளிட்ட வர்த்தக சங்கம் மற்றும் ரயில் கோட்ட உபயோகிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பொன்னமராவதி அருகே கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்ப்பட்டு குடிநீர் விணாகி வருகிறது
- உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொன்னமராவதி,
பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனை அருகே வளைவு சாலை பொன்னமராவதியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையோரமாக உள்ள காவிரி கூட்டு குடிநீர் குழாய், திருச்சியில் இருந்து பொன்னமராவதி வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்லும் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு எற்ப்பட்டு குடிநீர் வினாகி வருகிறது.இதனை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கந்தர்வகோட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
- மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அதிகரித்துள்ளது தெரிவிக்கப்பட்டது
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வட்டார கல்வி அலுவலர் நரசிம்மன் தலைமையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் வரவேற்றார்.இக்கூட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் நடைபெற உள்ள மருத்துவ முகாமில் கலந்து கொள்ள உள்ள மாணவர்களின் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் ,வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு வங்கி கணக்கு பெற்று கல்வி மேலாண்மை இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகளுக்கு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த அடையாள அட்டையை பெற்று பதிவு செய்ய வேண்டும். சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள் வீட்டிலே தங்கிப் பயிலும் மாற்று திறன் மாணவர்களின் பார்வையை அதிகப்படுத்த வேண்டும். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அதிகரித்துள்ளதை பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கலந்தலோசனை செய்யப்பட்டது . இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுனர் பாரதிதாசன், ராஜேஸ்வரி இயன்முறை மருத்துவர் சரண்யா,சிறப்பு பயிற்றுநர்கள் ரம்யா, ராணி, பிரியா, ராதா லீலா, இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக சிறப்பாசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கந்தர்வகோட்டை பெயிண்டர் பலியானார்
- கந்தர்வகோட்டை போலீசார் உடலை கைப்பற்றி மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுவாமிநாதன் மகன் ரவிச்சந்திரன் (வயது 40). பெயிண்டிங் தொழிலாளி யான இவருக்கு திருமணம் ஆகவில்லை.இந்த நிலையில் கந்தர்வகோட்டை தஞ்சை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகன மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழப்புக்கு காரணமான வாகனத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- அண்டனூர் ஊராட்சியில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது
- முகாமை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம் சின்னத்துரை தொடங்கி வைத்தார்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஒன்றியம் அண்டனூர் ஊராட்சி வேலாடிப்பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் நடைபெற்றது. முகாமை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம் சின்னத்துரை தொடங்கி வைத்தார். முகாமில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. வெள்ளாள விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சத்துணவு பெட்டகங்களும் மங்களப் பொருட்களும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், திமுக ஒன்றிய செயலாளர் பரமசிவம், அண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், ஆத்மா சேர்மன் ராஜேந்திரன் மாவட்ட குழு உறுப்பினர் இ.எஸ்.ராஜேந்திரன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரஞ்சித் குமார் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






