என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்தார்.
    • பூசாரியாக பணியாற்றி வந்தார்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே மணவிடுதி ஊராட்சி குப்புடையான் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 64). கோவில் பூசாரி. இவர் முனியன் கோவிலில் கிடா வெட்டு பூஜை செய்வதற்காக முக்கியஸ்தர்களிடம் ஆலோசித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரை கடித்ததில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை அந்தவழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், செம்பட்டிவிடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • மத்திய அரசு தாக்கல் செய்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு

    புதுக்கோட்டை:

    இந்திய தண்டனைச்சட்டம் 3 சட்ட பிரிவுகளை மாற்றி அமைத்து வடமொழி தலைப்புகள் பெயரில் மத்திய அரசு தாக்கல் செய்த மசோதாக்களுக்கு ஆலங்குடி வக்கீல்கள் சங்கத்தினர் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதற்கு வக்கீல்கள் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். அப்போது 3 சட்டங்களையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து உடனடியாக நீக்க வலியுறுத்தியும், சட்டங்களை மத்திய அரசு மீண்டும் நிறைவேற்றினால் வக்கீல்கள் நாடு முழு வதும் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும், வக்கீல்கள் தினந்தோறும் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றும் கூறினர்.

    • டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராட்சத ட்ரெய்லர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
    • டிரைவர் உள்ளிட்ட 2 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விராலிமலை:

    தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று கோட்டை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டனர். அதன் படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் சென்னைக்கு புறப்பட்டனர். அதன்படி விருதுநகர் மாவட்டம் சிவகாசி சங்கமம் நாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி (வயது 52) விருதுநகர் கிருஷ்ணகிரி ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்யு (52) விருதுநகர் நடுவப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் (52), விருதுநகர் நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரம் (55) ஆகியோர் ஒரு காரில் நேற்று இரவு சிவகாசியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர். காரை விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஈஸ்வர தேவர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (53) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த கார் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வான திரையான் பட்டி பிரிவு ரோடு அருகே இன்று அதிகாலை 1.30 மணி அளவில் வந்தபோது விபத்தில் சிக்கியது. டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராட்சத ட்ரெய்லர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி இடிபாடுகளுக்குள் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பலியானார்.

    பின்னர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த இன்னொரு ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்யு, கார் டிரைவர் பாஸ்கர் மற்றும் சங்கர், சமுத்திரம் ஆகிய 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    மருத்துவமனை செல்லும் வழியிலேயே அபிமன்யு பரிதாபமாக இறந்துவிட்டார்.

    அதைத்தொடர்ந்து டிரைவர் உள்ளிட்ட 2 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்த இரண்டு ஊராட்சி சம்பந்த தலைவர்களின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    கோட்டையை நோக்கி நடைபெறும் பேரணிக்கு புறப்பட்டுச் சென்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் 2 பேர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • வலங்கொண்டான் விடுதி, வெள்ளாள விடுதியில் எம்எல்ஏ டாக்டர்.முத்துராஜா பொதுமக்களை சந்தித்து மனு பெற்றுக்கொண்டார்
    • அதிகாரிகளை உடன் அழைத்து சென்று மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உட்பட்ட வலங்கொண்டான் விடுதி ஊராட்சி மற்றும் வெள்ளாள விடுதி ஊராட்சியில் உள்ள அனைத்து கிளைகளிலும் புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ டாக்டர்.முத்துராஜா அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் சென்று பொதுமக்களை சந்தித்து அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை எம்எல்ஏவிடம் கோரிக்கை மனுவாக அளித்தனர். கோரிக்கையை ஏற்று உடன் வருகை புரிந்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ வலியுறுத்தினார்.நிகழ்ச்சியில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவபாஞ்சாலன் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்மணி, சிவகாமி, ரெங்கசாமி, பழனிதுரை, சந்திரசேகர், பவுல்ராஜ், மதியழகன், சீனிவாசன், வெள்ளாள விடுதி செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் புதுக்கோட்டையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
    • புத்தாம்பூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் வழிகாட்டுதலின்படி டீம் மருத்துவமனை சார்பாக புதுக்கோட்டை மாவட்டம், புத்தாம்பூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.இம்மருத்துவ முகாமில் சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய், ஆஸ்துமா நோய் மற்றும் பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்புணர்வும், நோய் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்பட்டன.கொரோனா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது. டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் அறிவரசு அனைவருக்கும் மருத்துவ பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார். இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப், செவிலியர் கண்காணிப்பாளர் பத்மாவதி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • கள்ளத் தொடர்பை மனைவி கண்டித்ததால் விபரீத முடிவு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை புதிய பேரூந்து நிலையத்தில் துப்புரவு பணி மேற்கொண்டு வருபவர் மணிகண்டன்(வயது 28). இவருக்கும் திருமயம் தாலுகா கடையக்குடி நரி குறவர் காலனியை சேர்ந்த சங்கீதா(வயது 28) என்பவருக்கும் 9 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்து இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டனுக்கும் சங்கீதா சகோதரி துர்காவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை மனைவி கண்டித்ததால் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை மணிகண்டன் குடித்து மயஙகி உள்ளார். அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றார்.

    • கலப்பு திருமணம் செய்து 3 மாதத்திலேயே இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்
    • தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரியில் ரேடியோலாஜி பிரிவில் தற்காலிகமாக பணியாற்றி வருபவர்கள் தேனி மாவட்டம், உத்தம பாளையம் , கம்பத்தை சேர்ந்தவர் சங்கீதா(வயது 45) இவரது மகள் லமிகா(வயது 23). இவரும், மணப்பாறையை சேர்ந்த வடிவேல் என்பவரும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக கலப்பு திருமணம் செய்து கொண்டனர் . புதுக்கோட்டையில் மேல நான்காம் வீதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டின் அறையில் சீலிங் பேன் ஊக்கில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடக்கிறார். இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின் போpல் கணேஷ்நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்கு பதிவு செய்து திருமணம் ஆகி மூன்றே மாதம் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார். லமிகா அத்தை சில மாதங்களுக்கு முன்னர் இறந்துள்ளார். அதிலிருந்து மனஉளச்சலில் இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏரோமாடலின் பயிற்சி பட்டறை நடைபெற்றது
    • நிறைவு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன் மாதிரி விமானங்கள் பறப்பதை பார்வையிட்டார்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் திருச்சி பயிற்சி நிறுவனமும் இணைந்து நடத்திய ஏரோமாடலின் மூன்று நாட்கள் பயிற்சி பட்டறை நிறைவு மற்றும் மாதிரி விமானம் பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று மாதிரி விமானங்களை பறக்கவிட்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், துணை தலைவர் ராஜேஸ்வரி, திமுக நகர செயலாளர் பழனிகுமார், துணை செயலாளர் செங்கோல், கவுன்சிலர்கள் சஷ்டி முருகன், கிருஷ்ணமூர்த்தி, சையது இப்ராகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரெத்தினக்கோட்டை நரியங்குடியை சேர்ந்த கபடி வீரர் ரயில் மோதி பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த ரெத்தினக்கோட்டை நரியங்குடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 25). கபடி வீரரான இவர், கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு அறந்தாங்கி வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் ரெயில் மோதி காளிமுத்து தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் காளிமுத்துவின் உறவினர்களுக்கும் தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

    • புதுக்கோட்டை லேணா விளக்கு மௌண்ட் சீயோன் சர்வதேசப்பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது
    • ஆசிரியர்கள் பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்

    புதுக்கோட்டை,

    லேணா விளக்கு மௌண்ட் சீயோன் சர்வதேசப்பள்ளியில் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பள்ளியில் பணியாற்றும் கேரளா மற்றும் நமது மாநில ஆசிரியர்கள் பாரம்பரிய உடையணிந்து, அத்தப்பூ கோலமிட்டு, நாட்டில் அமைதி நிலவவும்,சுபிட்சம் பெருகவும், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிராத்தனை செய்தனர். பிறகு ஆசிரியர்கள் பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    இந்நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளி ஒருங்கிணைப்பாளர் போனிமேஸ் மேரி, சரண்குமார் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனார் .

    • கலைஞர் மகளிர் உரிமை திட்ட கள ஆய்வுக்கு கூடுதல் அலுவலர்கள் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது
    • கிராம நிர்வாக அலுவலர் சங்கம் ேவண்டுகோள் விடுத்துள்ளது

    புதுக்கோட்டை ,

    தமிழ் நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் அரங்க . வீரபாண்டியன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது.

    கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தமிழ் நாடு முழுவதும் முழு வேகத்தோடு செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் மனுக்கள் பெறும் முகாம் களில் முகாம் அலுவலர்களாகவும் தற்பொழுது களத்தில் ஆய்வு அலுவலராகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.

    இந்நிலையில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் கணினியில் தனித்தனியாக சரிபார்க்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுபவர்கள் எனவும்,

    சொற்ப எண்ணிக்கையிலான மனுக்கள் மட்டுமே கள ஆய்வு அனுப்பப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் அதிகப்படியான மனுக்கள் கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதனால் கடினமான கள ஆய்வுப் பணியில் அன்றாட பணிகளுக்கு இடையில் ஒரு கள ஆய்வு அலுவலர் ஒரு நாளைக்கு 25 மனுக்கள் மட்டுமே கள ஆய்வு செய்ய இயலும்.

    ஆனால் தற்போது 200க்கும் அதிகமான மனுக்கள் கள ஆய்வு செய்ய வேண்டி இருந்தால் கூடுதலாக ஒரு கள ஆய்வு அலுவலர் நியமிக்க வேண்டும்.

    கிராமங்களில் இணையவசதி இல்லாத போது ஜிபிஎஸ் வழியாக கண்காணித்து நெருக்கடி கொடுக்கப்படுவதோடு பயனாளிகள் எதிரிலேயே தகுதியானவரா, , தகுதியற்றவரா என நிர்ணயம் செய்வது இயலாத காரியமாகவும் உள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுபோன்று ஒரு தாக்குதல் சம்பவம் கிராம நிருவாக அலுவலர் மீது நடந்துள்ளது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுக்கோட்டை கே.புதுப்பட்டியில் கார் மோதிய விபத்தில் மளிகைக்கடைக்காரர் பலியானார்
    • பேராவூரணி அருகே பூக்கொல்லை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த டிரைவர் கருப்பையா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அரிமளம் அருகே வம்பரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர் வம்பரம்பட்டி கிராமத்தில் மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை தனது மளிகை கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வம்பரம்பட்டியிலிருந்து கே.புதுப்பட்டி கடைவீதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கே.புதுப்பட்டி செங்கல் சூளை அருகே வந்தபோது, அந்த வழியாக கே.புதுப்பட்டியில் இருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த காரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் கார் டிரைவர் பேராவூரணி அருகே பூக்கொல்லை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கருப்பையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×