ரயில் மோதி கபடி வீரர் பலி ?

ரெத்தினக்கோட்டை நரியங்குடியை சேர்ந்த கபடி வீரர் ரயில் மோதி பலியானார்உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ரயில் மோதி கபடி வீரர் பலி ?
Published on

புதுக்கோட்டை 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த ரெத்தினக்கோட்டை நரியங்குடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 25). கபடி வீரரான இவர், கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு அறந்தாங்கி வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் ரெயில் மோதி காளிமுத்து தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் காளிமுத்துவின் உறவினர்களுக்கும் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com