என் மலர்
புதுக்கோட்டை
- மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
- காந்தி ஜெயந்தி விழாவில் பரிசு வழங்கப்பட உள்ளது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் காந்திப் பேரவை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கவிதை, கட்டுரை போட்டி, ஓவியம், குழு நடனம், குழு நாடகம் ஆகிய போட்டிகளுக்கான இறுதி சுற்று போட்டி ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி விழாவில் பரிசு வழங்கப்பட உள்ளது.
- உதயநிதி மகனுக்கு போஸ்டர் ஒட்டிய தி.மு.க.நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.
- பொது செயலாளர் துரைமுருகன் அறிக்கை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க. செ. மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி போட்டோவுடன்
எங்களின்
எதிர்காலமே
இன்பநிதி பாசறை செப்டம்பர் -24 மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் என புதுக்கோட்டை நகரில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டி இருந்தனர். இது தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போஸ்டர் ஒட்டிய மணிமாறன், திருமுருகன் ஆகிய இருவரையும் பொது செயலாளர் துரைமுருகன். கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக மணிமாறன், திருமுருகன் ஆகிய இருவரையும் நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
- வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் தொப்பா ஊரணி சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, பரிசல்கல்பாறை பகுதியில், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் ரூ.2.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணியினையும், மேலும் கவிநாடு கிழக்கு ஊராட்சியில், திருமயம் சாலையிலிருந்து கணக்கன்பட்டி வரை செல்லும் 2 கி.மீ. நீளமுள்ள சாலை, முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.83.94 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியினையும் பார்வையிட்டார்.
இதேபோல திருக்கோகர்ணம் யானையம்மாள் வீதி மற்றும் 9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சி பள்ளத்திவயல் மற்றும் கவிநாடுகிழக்கு குமரன்நகர் ஆகிய பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று, விண்ணப்பத்தின் உண்மைத்தன்மை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது உள்ளாட்சி அமைப்பினர், அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- இன்பநிதி போட்டோவுடன் இன்பநிதி பாசறை செப்டம்பர்-24 மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் என புதுக்கோட்டை நகரில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டி இருந்தனர்.
- போஸ்டர் ஒட்டிய மணிமாறன், திருமுருகன் ஆகிய இருவரையும் பொது செயலாளர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க. செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க. திருமுருகன் ஆகியோர் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி போட்டோவுடன் இன்பநிதி பாசறை செப்டம்பர்-24 மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் என புதுக்கோட்டை நகரில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டி இருந்தனர். இது தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போஸ்டர் ஒட்டிய மணிமாறன், திருமுருகன் ஆகிய இருவரையும் பொது செயலாளர் துரைமுருகன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக மணிமாறன், திருமுருகன் ஆகிய இருவரையும் நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
- மணக்கோலத்தில் காவல் நிலையத்தல் காதல் ஜோடி தஞ்சமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது
- இருவரும் திருமண வயதை எட்டி விட்டதால் அவர்களின் பெற்றோ ர்களை அழைத்த போலீசார் சமரசம் செய்தனர்
புதுக்கோட்டை,
ஆலங்குடியில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தலைமறைவான காதல் ஜோ டி,மணக்கோ லத்தில் வந்து காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த நிலை யில் போலீசார் அவர்களின் பெற்றோர்க ளிடம் சமரசம் செய்து மண மக்களை அனுப்பி வை த்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த தேவகி என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், படித்த பட்டதாரிகள் என்ற போதிலும் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தலைமறைவாகினர்.இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் ஆலங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவான காதல் ஜோடிகளை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் பெங்க ளூரில் தலைம றைவாக இருந்த காதல் ஜோடி திடீரென மண க்கோலத்தில் நேற்று ஆலங்குடி காவல் நிலையத்தில் பாதுகாப்பு தேடி தஞ்சம் அடைந்தனர்.இருவரும் திருமண வயதை எட்டி விட்டதால் அவர்களின் பெற்றோ ர்களை அழைத்த போலீசார் சமரசம் செய்தனர். இதனை தொடர்ந்து பெ ற்றோர்களால் இருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட க்கூடாது என்று எழுத்து ப்பூர்வமாக உத்தரவாதத்தை வாங்கிக் கொண்டு மணம க்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
- அறந்தாங்கி விக்னேஷ்புரம் அரசு தொழிநுட்ப கல்லூரியில் ரூ.12 லட்சம் செலவில் ஸ்மாட் கிளாஸ் திறக்கப்பட்டது
- முன்னாள் மாணவர்கள் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்டது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விக்னேஷ்வரபுரத்தில் அரசு பல வகை தொழில்நுட்பக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். மின்னணுவியல், தொடர்பியல், அமைப்பியல், மெக்கானிக்கல், கம்யூட்டர் டெக்னாலஜி உள்ளிட்ட துறைகள் உள்ளன. இந்நிலையில் கல்லூரியில் 1997-2020 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவ மாணவியர்கள் சார்பில் கல்லூரியில் வகுப்பறைகளை திறன்மிகு வகுப்பறைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஒரு வகுப்பறைக்கு குளிரூட்டி, ஆர்ஒ வாட்டர், இன்வெர்டர் என சுமார் ரூ.3 லட்சம் வீதம் 4 வகுப்பறைகளுக்கு ரூ.12 லட்சம் நிதி திரட்டி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் குமார், தலைமை ஆசிரியர் ஜோதிமணி, ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன் ஆகியோர் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதே போன்று மற்ற வகுப்பறைகளும் ஸமார்ட் வகுப்பறைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது.முன்னதாக முன்னாள் மாணவ மாணவியர்கள் தங்களது கல்லூரி காலஅனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
- புதுக்கோட்டை தி.மு.க. எம்.எல்.ஏ., பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி 8 ஆயிரம் ரூபாய் கடன் கேட்ட மர்ம நபர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராஜா. இவரது பெயரில் மர்ம நபர் ஒருவர் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கினார். பின்னர் அவசர தேவைக்காக ரூ. 8000 பணம் உடனடியாக தேவைப்படுவதால் அனுப்பி வைக்கும்படி பதிவிட்டு இருந்தார்.இதைப் பார்த்து எம்.எல்.ஏ.வின் நண்பர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு கேட்டார்.உடனே சுதாகரித்து கொண்ட எம்.எல்.ஏ. முத்துராஜா தனது சமூக வலைதள கணக்குகளை சரி பார்த்தார். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் போலிக் கணக்கு தொடங்கி பணம் வசூலிக்க முயன்றது தெரியவந்தது. இதை யடுத்து உடனடியாக புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கந்தர்வகோட்டையில் 732 பள்ளி மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
- ரூ.36 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை சின்னத்துரை எம்.எல்.ஏ. வழங்கினார்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கும் விழா மாவட்ட கல்வி அதிகாரி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, தச்சங்குறிச்சி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 732 மாணவ ,மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை வழங்கி, பேசினார்.விழாவில் தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் கே.கே. செல்ல பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, சிவரஞ்சனி சசிகுமார், கவிதா மணிகண்டன், துணைத் தலைவர் வெங்கடேசன், தாமரை பழனிவேலு, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அமிர்தம் மாலதி, பழனிவேல், செல்வராசு, ராணி புஷ்பம், இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக பள்ளியின் முகப்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளியின் நுழைவு வாயிலை எம்எல்ஏ சின்னத்துரை திறந்து வைத்தார்.
- சாலை வசதி கேட்டு கூழடைக்கண்தோப்பு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கூழடைக்கண் தோப்பு கிராமத்தில் சுமார் 70-க்கும்மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.இந்தப் பகுதிக்கு குளத்தூர் ஊராட்சியை இணைக்கும் கிராம சாலை சுமார் 350 மீட்டர் நீளத்திற்கு மண் சாலையாக உள்ளது. மழைக்காலங்களிலும் மற்ற நாட்களிலும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் சாலை வசதி கேட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிய வருகிறது. இந்த நிலையில் திருவோணம் தஞ்சாவூர் சாலையில் குளத்தூர் ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர் இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.
- அபூர்வ வகை கூரல் மீன் சிக்கியது.
- ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திற்கு வாங்கி சென்றனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்துக் கொண்டு நேற்று கரை திரும்பினர். அப்போது மீனவர் ஒருவர் வலையில் சுமார் 20 கிலோ எடை கொண்ட கூரல் மீன் சிக்கியது. இதையடுத்து கரையில் காத்திருந்த வியாபாரிகள் அந்த மீனை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திற்கு வாங்கி சென்றனர். இந்த மீன் ஒரு கிலோ ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விலை போகும். இந்த மீன் உணவுக்காக இவ்வளவு விலை போவதில்லை. மாறாக இந்த மீனின் வயிற்றில் உள்ள நெட்டிக்காக விலை அதிகமாக உள்ளது. இந்த நெட்டியானது மருத்துவத்துறையில் முக்கிய பங்கு வகிப்பதால் அதிக விலைக்கு போகிறது. இந்த வகையான கூரல் மீன் அதிகமாக சிக்குவதில்லை. தற்போது மீனவர் ஒருவர் வலையில் இந்த மீன் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் மீனவர்கள் வலையில் அதிகளவு திருக்கை மீன்கள் சிக்கியது. இதையடுத்து அந்த மீன்களை மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து மீனவர்கள் விற்பனை செய்தனர். இந்த திருக்கை மீன்கள் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
- புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்றது
புதுக்கோட்டை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் ஆலங்குடி கோர்ட்டு வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில துணை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். அசோகன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை முற்றிலும் அகற்றிவிட்டு வக்கீல்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நலன்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவரும் புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பரிசுத்தநாதன், ராஜசேகர், அழகன், சிவா, மகாலிங்கம், ரத்தினம் மற்றும் புதுக்கோட்டை, கீரனூர், அறந்தாங்கி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
- கீரமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது
புதுக்கோட்டை:
கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கீரமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், செரியலூர், பனங்குளம், நகரம், ஆவணத்தான்கோட்டை, ராஜேந்திரபுரம், பெரியாளூர், குளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.






