என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    இந்த நிலையில் நார்த்தாமலை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 49) மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். அவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளே கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை கலெக்டரிடம் மனு கொடுக்க வைத்தனர்.

    கடந்த 2006-ம் ஆண்டு தனக்கு கொடுக்கப்பட்ட இலவச வீட்டு மனைப்பட்டாவை தாலுகா அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை எனவும், இது தொடர்பாக பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், புதியதாக பட்டா பதிவு செய்து தருவதாக கூறி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஆறுமுகம் கூறினார்.

    இதையடுத்து தாசில்தாரை அழைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார். அதன்பின் அதிகாரிகள் அவரிடம் விசாரித்து கோரிக்கையை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    • கோர்ட்டில் வாலிபர் சரணடைந்தார்.
    • தொழிலாளி கொலை வழக்கில்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேனூர் ஊராட்சி கருகப்பூலாம்பட்டியை சேர்ந்தவர் ரங்கையா (வயது 55). தொழிலாளி.

    இவரை அதே பகுதியை சேர்ந்த வடிவேலு (35) என்பவர் முன்விரோதம் காரணமாக கழுத்தில் கத்தியால் வெட்டினார். இதில் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரங்கையா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது தொடர்பாக பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தப்பியோடிய வடிவேலுவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தேடப்பட்டு வந்த வடிவேலு புதுக்கோட்டை கோர்ட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 ல் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    • வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • ரூ.2½ லட்சம் மோசடி ெசய்து

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கீரனூர் அருகே முதுகுளத்தூரை சேர்ந்தவர் அன்பரசு (வயது 35). இவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இவர், மூளிப்பட்டி கிராமத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை மேய்த்து வருவதற்கு கீரனூர் அருகே உள்ள வாலியம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான செல்லையா என்பவரை அணுகினார்.

    அப்போது அவரிடம் குடும்பத்தோடு ஆடு மேய்ப்பதற்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை அன்பரசு கொடுத்துள்ளார். ஆனால் 3 மாதம் மட்டுமே வேலைக்கு சென்று விட்டு பின்னர் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் கொடுத்த பணத்தை செல்லையாவிடம் திருப்பி கேட்ட போது அவர் தகாத வார்த்தையால் அன்பரசுவை திட்டியுள்ளார். இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் அன்பரசு புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன விபத்தில் முதியவர் பலியானார்.
    • இரு சக்கர வ ாகனங்கள் நேருக்குநேர் மோதியது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், பழைய ஆதனக்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவர் பெருங்களூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக தளிகை விடுதியை சேர்ந்த சின்னதுரை மகன் பசுபதி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ஆறுமுகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர்.

    இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஆறுமுகம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். பசுபதி மட்டும் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலை உணவு திட்டத்தை விமர்சித்து முகநூலில் பதிவு செய்த பா.ஜனதா பிரமுகர் கைது
    • பா.ஜனதாவில் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக வலைத்தள அணியில் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 27). இவர் பா.ஜனதாவில் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக வலைத்தள அணியில் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் கமலக்கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. மாணவர் அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை (29) நாகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் கமலக்கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. மாணவர் அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை (29) நாகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதேபோல வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் தி.மு.க. வடக்கு மாவட்ட வக்கீல் அணி ஒருங்கிணைப்பாளர் வீரய்யா புகார் அளித்தார். இதையடுத்து இரு போலீஸ் நிலையங்களிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கமலக்கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

    • பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி கிராமத்தில் வீரனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழாைவை முன்னிட்டு கோவிலின் முன்புறம் யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்று புனித நீர் கொண்ட கடம் புறப்பாடு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்து. கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் சுந்தம் பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கைளைச் சேர்ந்த பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • முன்விரோதத்தில் நடந்தது
    • தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேனூர் ஊராட்சி கருகப்பூலாம்பட்டியை சேர்ந்தவர் ரங்கையா (வயது 55). தொழிலாளி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பையா மகன் வடிவேலு (35) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 1-ந் தேதி கருகப்பூலாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மஞ்சுவிரட்டு திடலில் ரங்கையா நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வடிவேலு, ரங்கையாவின் கழுத்தில் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரங்கையா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பொன்னமராவதி போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, தப்பியோடிய வடிவேலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • நாட்டுப்படகு மீனவர்களுக்கும் தடை செய்யப்பட்டது
    • கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விசைப்படகு, மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை தென் தமிழக கடற்கரை பகுதியில் 45 முதல் 55 வரையிலும், அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதியில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • 1,001 பனை விதைகளை நட்டனர்
    • பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி குரும்பர் குளக்கரைகளில் மரமும் மனிதனும் அமைப்பின் சார்பில் 1,001 பனை விதைகள் நடப்பட்டன. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் விதமாக பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் மரமும், மனிதனும் அமைப்பை சேர்ந்த, மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் முகம்மது ஆஸிம், ஊர் பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டு 1,001 பனை விதைகளை நட்டனர்.

    • பெற்றோர்களின் வற்புறுத்தலால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர்.
    • கொலை செய்யப்பட்ட நித்திய காமாட்சியின் தாயார் இளஞ்சியம் அன்னவாசல் போலீசில் புகார் செய்தார்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அன்னவாசல் மேட்டு தெரு ஜெ.ஜெ,காலனி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 35). இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த அடைக்கலம் மகள் நித்திய காமாட்சி (24) என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.

    இந்த தம்பதியருக்கு அஸ்வந்த் என்ற மகனும் நிவாஸ்ரீபுவிஅட்சரா என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சமீபகாலமாக மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் மனைவியுடன் அடிக்கடி சண்டைபோட்டு வந்தார்.

    பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது.

    இருந்த போதிலும் மனைவி மீதான கோபம் அடங்காத பால்ராஜ் கடந்த டிசம்பர் மாதம் நித்தியகாமாட்சி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அடுப்பில் இருந்த நெருப்பு கனல்களை அள்ளி அவரது முதுகில் போட்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர்.

    பின்னர் பெற்றோர்களின் வற்புறுத்தலால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே மீண்டும் அவர்களுக்கிடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பால்ராஜ் இன்று அதிகாலை மனைவி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது அவரது தலையில் குழவிக்கல்லை போட்டார். இதில் அவரது தலை நொறுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே நித்திய காமாட்சி துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் போலீசுக்கு பயந்து பால்ராஜ் தன்தை தானே கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கொலை செய்யப்பட்ட நித்திய காமாட்சியின் தாயார் இளஞ்சியம் அன்னவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் குழவிக்கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு கணவன் முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இரு சக்கர வாகன விபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர்.
    • மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அருகே செம்பட்டிவிடுதியை சேர்ந்தவர் விவேக் (வயது 27). அதேபகுதியை சேர்ந்தவர்கள் சதீஸ்வரன் (28), விக்னேஷ் (24). தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் முள்ளூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை விவேக் ஓட்டினார். மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

    இந்த நிலையில் முள்ளூர் ரவுண்டானா அருகே வந்த போது தடுப்பு சுவரில் மோதியது. இதில் 3 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனில்லாமல் விவேக் அன்றைய தினம் இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சதீஸ்வரனும் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார். விக்னேசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் புகார் கொடுத்தனர்.
    • சீமானின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மாநில பொறுப்பாளர் ராஜாராம் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தன் பெயரில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பொய் குற்றச்சாட்டுகள், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், மத நல்லிணக்கத்தை சீர்கெடுக்கும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும், சீமானின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்படும் நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருடன் உள்ள வீரலட்சுமி ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், என தெரிவித்திருந்தனர். மனுவை போலீஸ் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

    ×