என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • எதிர்க்கட்சிகள் கூட்டணி I.N.D.I.A. என சுருக்கி இந்தியா என எழுதுவதால் கோபம் வந்துள்ளது
    • பாரத் பெயர் மாற்றம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப. சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா என்ற பாரத் என இருக்கிறது. இந்தியாவும் இருக்கிறது. பாரத்தும் இருக்கிறது. நாம் இந்தியாவையும் பயன்படுத்துகிறோம். பாரத்தையும் பயன்படுத்துகிறோம். திடீரென இந்தியா மீது என்ன கோபம்?.

    எதிர்க்கட்சிகள் கூட்டணி I.N.D.I.A. என சுருக்கி இந்தியா என எழுதுவதால் கோபம் வந்துள்ளது. நாங்கள் Bharat என பெயரை சுருக்கி வைத்தால், பிரதமர் மோடி பாரத் பெயரையும் மாற்றி விடுவாரா?. இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள். இந்தியா என்பதும் ஒன்றுதான். பாரத் என்பதும் என்றுதான்.

    இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்தார்.

    • உத்தரபிரதேச சாமியார் மீது கறம்பக்குடி போலீசில் புகார் அளித்தார்.
    • அமைச்சரின் உயிருக்கு அச்சுறுத்தல்

    புதுக்கோட்டை

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பரமஹம்ச சாமியார் என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி விலை வைத்து கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், தி.மு.க.வினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கறம்பக்குடி ஒன்றியம், சொக்கம்பேட்டை தி.மு.க. கிளை செயலாளர் இளங்கோவன் கறம்பக்குடி போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் வன்முறையை தூண்டும் வகையிலும், அமைச்சரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் பேசிய உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    • போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
    • பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே கீரமங்கலம் தர்மர் கோவிலை சேர்ந்தவர் சரவணன் மகன் மணிகண்டன் (வயது 23). சிவகங்கை மாவட்டம், புதுவயல் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கணேசன் மகள் பிரதீபா (20). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர்.

    இந்நிலையில் பிரதீபாவை காணவில்லை என்று அவரது தாய் உமா சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மணிகண்டன்-பிரதீபா இருவரும் பழனி கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து ஆலங்குடி போலீசார் சாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் காதல் ஜோடி இருவரையும் சாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    • வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    • புகையிலை, கஞ்சா கடத்திய சம்பவத்தில்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகம்மை தலைமையில் போலீசார் மூக்கம்பட்டி கடைவீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக காரில் புகையிலை, கஞ்சா கடத்தி வந்த ஆலங்குடி கே.வி.எஸ். தெருவை சேர்ந்த பாலு என்கிற பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 28 கிலோ புகையிலை மற்றும் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து ேபாலீசார் பாலகிருஷ்ணனை (வயது 36) ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்ேபரில், பாலகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். தொடர்ந்து பாலகிருஷ்ணனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை காண்பித்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • இரட்டிப்பு பணம் தருவதாகக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த மாணவர் கைது
    • ஆன்லைன் டிரேடிங்’ மூலம்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி. அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மகன் சஞ்சய் (வயது 23). இவர், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பார்மசி கல்லூரியில் மருந்தாளுனர் படிப்பு படித்து வந்தார்.

    இதே கல்லூரியில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த வைரமுத்து பாலாஜி (23) என்பவரும் மருந்தாளுனராக படித்து வருகிறார். இதற்கிடையில் சஞ்சய், தான் 'ஆன்லைன் டிரேடிங்' தொழில் செய்து வருவதாகவும், தன்னிடம் முதலீடு செய்தால் 40 நாட்களுக்குள் கொடுக்கும் பணத்துக்கு இரட்டிப்பு பணம் கொடுப்பதாகவும் சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.

    இதை உண்மை என நம்பி வைரமுத்து பாலாஜி, பெற்றோரிடமும், தனக்கு தெரிந்தவர்களிடம் பணத்தை வாங்கி மொத்தம் ரூ.49 லட்சத்து 10 ஆயிரத்தை சஞ்சயிடம் கடந்த ஆண்டு வழங்கி உள்ளார். 40 நாட்களுக்கு பின்னர் வைரமுத்து பாலாஜி தான் கொடுத்த பணத்தை இரட்டிப்பாக கொடுக்கும்படி சஞ்சயிடம் கேட்டுள்ளார்.

    ஆனால் அவர், வைரமுத்து பாலாஜியிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் பல மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வைரமுத்து பாலாஜி, கடந்த மாதம் 28-ந் தேதி இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் சஞ்சயை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வைரமுத்து பாலாஜியை போல் 25-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் பல கோடி ரூபாய் பெற்று சஞ்சய் மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சஞ்சயை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவர் ஒருவர், சக மாணவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்திருக்கும் சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கார் மோதி முதியவர் பலியானார்
    • சாலையை கடக்க முயன்ற போது சம்பவம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஆதனக்கோட்டை அருகே கருப்புடையான்பட்டியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 63). இவர், ஆதனக்கோட்டையில் உள்ள குப்பையன்பட்டி விளக்குசாலையில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சாலையை கடக்க முயன்ற போது, மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தோப்புவளைவு தெருவை சேர்ந்த தவமணி என்பவர் ஓட்டிவந்த கார், எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வீரப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சுங்கச்சாவடியின் அதிகாரிகளை கண்டித்து

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை பஸ் நிலையம் முன்பு புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பழைய கந்தர்வகோட்டை அருகில் உள்ள சுங்கச்சாவடியின் அதிகாரிகளை கண்டித்து பா.ம.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் ெஜய்சங்கர் தலைமை தாங்கினார். இதில் பல மாதங்களாக இரவு நேரங்களில் கடைவீதியில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளது. பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதை சரி செய்ய சாலையின் இரு புறமும் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. சாலைகளில் போக்குவரத்திற்கு பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரிகின்ற மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் இந்த மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுங்கச்சாவடி அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    • 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
    • புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நமணசமுத்திரம் அருகே லெம்பலக்குடி, லேணா விளக்கு ஆகிய இடங்களில் பள்ளி வளாகத்தின் 100 மீட்டர் தூரத்தில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் நேற்று போலீசாருடன் சென்று சம்பந்தப்பட்ட 3 கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினார். இதில் 3½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 3 கடைகளுக்கு 'சீல்' வைத்து உணவு பாதுகாப்பு துறையினர் அபராதம் விதித்தனர்.

    • 15 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றப்பட்டனர்.
    • சூப்பிரண்டு வந்திதா பாண்டே அதிரடி

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்- இன்ஸ்பெக்டர்களில் 15 பேரை பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதில் பொது மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிட மாற்றம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவ,மாணவிகள் செல்போனை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
    • விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் மற்றும் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கோடியே 54 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

    தொடர்ந்து அமைச்சர் கூறும் ேபாது,

    படித்து கற்றுத்தேர்ந்த மாணவர்கள் நடிகர், நடிகைகள், ஜாதி, மதம் பின்பு செல்வதை தவிர்க்க வேண்டும். படிக்கும் போது பகுத்தறிவோடு படிக்க வேண்டும்.

    பெற்றோர்கள் உழைத்துக்கொ ண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெற்றோர்களின் கனவை நினைவாக்குவதற்கு நாம் படித்து முன்னேற வேண்டும்.

    விழுப்புரத்திலிருந்து அரசுப்பள்ளியில் படித்த வீரமுத்துவேல், விஞ்ஞானியாகி சந்திராயன் 3 என்ற செயற்கைகோளினுடைய திட்ட இயக்குனராக பணியாற்றியவர்.

    விஞ்ஞானத்திலும் மற்ற தொழில்நுட்பத்திலும் வல்லரசு நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில் நாம் உயர்ந்திருக்கிறோம் என்பதை ஒரு தமிழர் மீட்டுத்தந்திருக்கிறார்

    அதேபோல, ஒவ்வொருவருக்கும் ஒரு தளம் காத்துக்கிடக்கிறது.மாணவ மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது உடல் நலத்திற்கு தீங்கானது.

    எங்கிருந்தாலும் நல்லவர்கள் வாழ்வார்கள் வாழ்ந்து பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். துன்பப்பட்டு தடைகளை தாண்டி முன்னேறி செல்லும் போது அந்த முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது உறுதியுடன் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சிகளில், டிஆர்ஓ செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, ஆர்டிஓ முருகேசன், அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி, அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர்

    ராஜேஸ்வரி, ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், பிடிஓக்கள்

    ஆயிஷாராணி, கோகுலகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவர்கள் துணைத் தலைவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சரின் காலை உணவுகளின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • விவேகானந்தபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், 9ஏ-நத்தம் பண்ணை ஊராட்சி, விவேகானந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் தயார்செய்யப்பட்டுள்ள காலை உணவுகளின் தரம் குறித்து, மாவட்ட கலெக்டர்ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உயர்தரத்துடன் தயார்செய்வதற்கு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர்மாவட்ட கலெக்டர்தெரிவித்ததாவது

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 1,048 துவக்கப்பள்ளிகள், 276 நடுநிலைப்பள்ளிகள், 2 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,326 பள்ளிகளில் 71,006 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, அனைவருக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    மாணவ, மாணவிகள் காலை உணவுகளை சத்தான முறையில் உண்பதன் மூலம் சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமல்லாமல், நல்ல முறையில் கல்வி கற்கவும் முடிகிறது என கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) (பொ) எம்.ஜெயராமன், ஊராட்சிமன்றத் தலைவர்ஏ.வி.எம்.பாபு, வட்டாட்சியர், ஊராட்சிமன்ற துணைத் தலைவர்நந்தகுமார், சமுதாய கள பயிற்றுநர்காளீஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர்கலந்துகொண்டனர்

    • விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலக ரவுண்டானா அருகே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தை சேர்ந்த நிர்வாகி பாலு தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். கூலி ரூ.600 வழங்கிட வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தப்படி நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர்.

    ×