என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • குன்னக்குரும்பி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
    • பல்வேறு மாவட்டங்களிலிருந்து 60 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன

    அறந்தாங்கி, 

    அறந்தாங்கி அருகே குன்னக்குரும்பி கிராமத்தில் ராதா சமேத கிருஷ்ணர் பரமாத்மா ஆலயத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 60 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரிய மாடு பிரிவில் 15 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 45 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர்.

    • இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்த்திட வேண்டும் என்ற புதுக்கோட்டை தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது
    • புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள்கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள்கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை தனியார்பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் ஏ.அசரப் அன்சாரி தலைமை வகித்தார். சென்னை தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த மனோகரன் ஜெயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார். பி.எஸ்.கே. கல்வி குழுமங்களின் தலைவர் பி.எஸ்.கருப்பையா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளின் முதல் ஒப்புதல் ஆணை, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி புதுப்பித்தல் ஆணை, டி.டீ.சி.பி.பெற ஆலோசனை வழங்குவது உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட நர்சரி பள்ளிகளுக்கு புதுப்பித்தல்ஆணையினை காலதாமதமின்றி வழங்க வேண்டும், கட்டாய கலவி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும், டி.டீ.சி.பி. நர்சரி பள்ளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும், மாவட்ட கல்வி அலுவலகத்தில் அவசியம் தபால் பெட்டி வைக்கப்பட வேண்டும், பள்ளிகளின் அலுவல் சார்ந்த கூட்டங்களை தனியார் பள்ளிகளில் நடத்தாமல் முதன்மை கல்வி அலுவலர் தேர்வு கூடத்திலேயே நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கௌரத்தலைவர் ஜெய்சிங், செயலாளர் முத்துக்கருப்பன், ஒருங்கிணைப்பாளர் கே.ரமணன், பொருளாளர் மேசியா சந்தோசம், லண்டன் லுக் பள்ளி டாக்டர் கே.கிருஷ்ணமூர்த்தி, மெட்ரிக் ஓசை ஆசிரியர் கே.டீ.கந்தசாமி, ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் பள்ளி எஸ்.முருகன், டைமண்ட் பள்ளி டைமண்ட் பஷீர், தாய்தமிழ் பள்ளி மாதவன், மீனாட்சி பள்ளி எம்.ராஜ், கலைமகள் பள்ளி கே.பாண்டித்துரை, ஸ்ரீமுருகேஸ்வரா பள்ளி எம்.சின்னையா, ஜுசஸ் கிங்டம் பள்ளி ஏ.ஜெ.இக்னேசியஸ், சுவாமி விவேகானந்தா பள்ளி பி.கருணாகரன், ஸ்ரீ அம்பாள் பள்ளி ஆலோசகர் ஏ.சரவணன், மருதம் பள்ளி சுப.தமிழ்மாறன், பெருங்களுர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா பள்ளி வெங்கடேஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். விழாவில் லால் கிதாப் வெங்கடேஷ் எழுதிய டைம் டிராவலர் டான் கிளைவுட் 8023 என்ற புத்தகத்தை தலைவர் அசரப் அன்சாரி வெளியிட சிறப்பு அழைப்பாளார் மனோகரன் ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார்.

    • வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    புதுக்கோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்த 2 பேர் ஒரு காரில் திருச்சி-காரைக்குடி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்துள்ள லெனா விலக்கு சுங்கச்சாவடி பகுதியில் சென்ற போது எதிரே சென்ற டிப்பர் லாரியை முந்தி செல்ல கார் முயன்றது. அப்போது எதிரே ஒரு மினி லாரி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    மேலும், காரின் மீது மோதாமல் இருக்க மினி லாரி டிரைவர் திருப்பிய போது எதிரே வந்த அரசு பஸ் மீது லாரி மோதியது.

    இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதேபோல் அரசு பஸ்சின் பின்பகுதி, மினி லாரியின் முன்பகுதி லேசாக சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 2 பேரும், பஸ் பயணிகள், லாரி டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ரூ.3 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது
    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்

    புதுக்கோட்டை

    அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் ராஜேந்திரபுரம் தென்னை வணிக வளாகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 16 விவசாயிகள் 4,016 கிலோ கொப்பரை தேங்காயை கொண்டு வந்தனர். இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.78-ம், குறைந்தபட்சம் ரூ.76-க்கும் கொப்பரை தேங்காய் ஏலம் போனது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் போட்டி போட்டு கொப்பரைகளை ஏலம் எடுத்தனர். இதனால் ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்து 258-க்கு கொப்பரை ஏலம் போனதாக அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் குணசேகரன் தெரிவித்தார்.

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் முருகேசன் கோரிக்கைகள் குறித்து பேசினார். பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பி.எட் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்து அவமதிப்பதை கண்டித்தும், பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

    • பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்
    • ஆவணி மாதம் திருவிழா

    புதுக்கோட்டை

    கோட்டைப்பட்டினம் ராம் நகரில் பிரசித்தி பெற்ற சோனை கருப்பன் மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அந்த முளைப்பாரியை கடலில் கரைத்தனர்.

    • காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    • போக்குவரத்து துறையில்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மின்சார பஸ்கள் புதுக்கோட்டையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- சென்னையில் முதற்கட்டமாக மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக 100 பஸ்கள் வாங்க டெண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பஸ்கள் வாங்கப்படும். சென்னையை தொடர்ந்து படிப்படியாக மற்ற நகரங்களில் மின்சார பஸ்கள் இயக்கப்படும். போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 பேரை பணிக்கு எடுக்க ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவதற்காக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்பிறகு மற்ற போக்குவரத்து கழகங்களில் காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. அரசு பஸ்களில் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கி செல்லக்கூடிய நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகமானதால் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. 3 அல்லது 4 மாதத்திற்குள் புதிய பஸ்கள் வந்துவிடும். அரசு போக்குவரத்து கழகத்தில் பணி ஓய்வுபெற்றவர்கள் மற்றும் பணிக்காலத்தில் இறந்தவர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படாமல் இருந்த பிரச்சினை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏற்பட்டது.

    தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு இதனை தீர்ப்பதற்கு ரூ.1,500 கோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கடந்த காலம் போல காத்திருக்காமல் ஓய்வு பெற்றால் பணப்பலன்கள் பெறும் வகையில் சூழல் விரைவில் அமைய உள்ளது.

    பழைய பஸ்களில் அடித்தள சட்டம் சிறப்பாக இருந்த 1,500 பஸ்களில் மட்டும் புதிதாக கூண்டு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நகர பஸ்களில் பயணிகள் வசதியுடன் பயணிக்கும் வகையில் 5 இருக்கைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. புறநகர் பஸ்கள் மஞ்சள் நிறத்தில் வர்ணம் மாற்றப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

    • மொய் விருந்து பத்திரிகை எண்ணிக்கை பார்த்து புலம்பிய நபரின் ஆடியோ வைரல்- பரபரப்பு
    • 80 மொய் பத்திரிக்கை வந்திருப்பதாக கூறினார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவ ட்டம் ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், நெடுவாசல், கறம்பக்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சி ற்றம்பலம், பேராவூரணி, களத்தூர், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, ஆவணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்டு தோறும் ஆடி மற்றும் ஆவணி மாத த்தில் மொய் விருந்து விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த மொய் விருந்தில் டன் கணக்கிலான ஆட்டு க்கறி விருந்து நடத்தப்பட்டு பல கோடி ரூபாய் மொய் பணம் வசூலிக்கப்படும்.

    இந்த மொய் பணத்திற்கு வரி பிடித்தம் இல்லை. மேலும் மொய் விருந்து நடத்தி வசூல் செய்த பண த்தை 5 ஆண்டுகள் வரை சிறுக சிறுக திருப்பி செலுத்த லாம் என்பது நடைமுறையில் உள்ளது.

    இதனால் அதிக அளவில் இப்பகுதி மக்கள் மொய் விருந்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மொய் பண த்தை வைத்து விவசா யம், வியாபாரம் தொழில் போன்றவற்றை செய்து வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றனர்.

    ஆனால் காலப்போக்கில் இந்த மொய் விருந்து எந்த அளவிற்கு மொய்த்தொகை அதிகமாக கிடைக்கிறதோ அதை வைத்து மொய் விருந்தாளர்களின் கௌர வம் எடை போட்டு பார்க்க ப்பட்டதால் சிறிய அளவில் நடந்து வந்த மொய் விரு ந்தில் பெரிய அளவிலான தொகை புரளத் தொடங்கி யது.

    ஆயிரக்கணக்கு லட்ச க்கணக்காக மாறி கோடிக்க ணக்காக வளர்ந்தது. இத னால் சரியான நேரத்திற்கு மீண்டும் மொய் பணத்தை செலுத்த முடியாமல் ஏரா ளமானோர் தங்களது நிலங்களையும் வீட்டில் உள்ள நகை பொருட்க ளையும் விற்கும் அவலம் ஏற்பட்டது.

    அதன் காரணமாக மொய் விருந்து ஆர்வம் குறைந்து தற்போது பெரு ம்பாலான பகுதிகளில் மொய் கணக்கு முடிக்க ப்பட்டு வருகிறது.

    கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் மொய் விருந்து எண்ணிக்கை சற்று குறை வாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக மொய் விருந்து நடத்தப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது.

    கொரோனா காலத்தில் இன்று மாலை எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள பதற்றத்தோடு காத்திருந்தது போல இன்று மாலைக்குள் எத்தனை மொய் பத்திரிக்கை வந்து சேரும் என்று பதட்டம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் மொய் விருந்து பத்திரிக்கை எண்ணிக்கையை பார்த்து மனம் வெறுத்த நபர் ஒருவர் தனது உறவினருக்கு வாட்ஸ் அப் மூலம் தனக்கு 80 மொய் பத்திரிக்கை வந்திருப்ப தாகவும் இதோடு உலகம் அழிந்துவிட போவது போல் மொய் விருந்து நடத்தப்ப டுவதாகவும் புலம்பியு ள்ளார்.

    இந்த ஆடியோ தற்போது வெளியாகி இப்பகுதி மக்க ளிடம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மழையால் சேதமடைந்த

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா குறுவை நெல் சாகுபடி பணிகளில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நெல் அறுவடை பணிகளும் ஒரு சில இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    தெற்குப்பட்டி பகுதியில் கடந்த வாரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
    • அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு

    புதுக்கோட்டை

    அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தாலுகாக்களில் பணிபுரியும் 33 கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை பயிற்சி, நில அளவைப்பயிற்சி, சிறப்பு தேர்வுகள் அடங்கிய தகுதிக்கான பருவம் விளம்பல் ஆணைக்கான தேதியை இரண்டாண்டு பணி நிறைவு செய்த தேதியில் நிர்ணயம் செய்து திருத்தி அமைக்கக்கோரி அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநில செயலாளர் அரங்க வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மேலும் கோரிக்கையை பரிந்துரை செய்யாத கோட்டாட்சியரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களுடன் கோட்டாட்சியர் ஜஸ்டின் ஜெயபால் பேச்சுவார்தை நடத்தினார். அப்போது தங்களுடைய கோரிக்கையை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

    • இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடியில் இந்து முன்னணி சார்பில் சீனி கடைமுக்கம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் கருப்பையா, நகர தலைவர் குழந்தை உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 30 பன்றிகள் மாயமானது
    • மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆடலை கால வைரவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 40). இவர் பல ஆண்டுகளாக பன்றி வளர்த்து வரும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர், 30 பன்றிகளை மேய்த்து விட்டு ஆடலை கண்மாய் உள்வாயிலில் அடைத்து வைத்து இருந்தார். மறுநாள் வந்து பார்க்கும் போது 30 பன்றிகளையும் மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள இடங்களில் தேடி பார்த்தும் பன்றிகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து குமார் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்றிகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 30 பன்றிகளின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    ×