என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
- நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மழையால் சேதமடைந்த
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா குறுவை நெல் சாகுபடி பணிகளில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நெல் அறுவடை பணிகளும் ஒரு சில இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தெற்குப்பட்டி பகுதியில் கடந்த வாரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






