என் மலர்
புதுக்கோட்டை
- ஆலங்குடி பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்கள் தஞ்சையில் போலீசாரிடம் சிக்கினர்
- மோப்பநாய் உதவியுடன் போலீசார் துரித நடவடிக்கை எடுத்து கைது செய்தனர்
புதுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 73) ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். இவர் தனது குடும்பத்துடன் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். நடுவிக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு அவ்வப்போது மகேஸ்வரன் சென்று வருவது வழக்கம்.
இந்தநிலையில் சந்திரனின் வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சந்திரனுக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து ெசன்ற அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் ரூ.30, ஆயிரம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சந்திரன் வாட்டாத்தி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே தஞ்சையிலிருந்து சோழர் என்ற மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள் மர்ம நபர்கள் விட்டுச்சென்ற த டயங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது வீட்டை நோட்டமிட்ட மோப்பநாய் அங்கிருந்து சில அடி தூரத்தில் உள்ள அய்யப்பன் என்பவரது வீட்டின் முன்பு போய் நின்றது.
இதையடுத்து அய்யப்பன் (29), அவரது கூட்டாளி சிவராஜா(22) ஆகியோரை ஒரத்தநாடு டி.எஸ்.பி. பிரசன்னா உத்தரவின் பேரில் பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் ஆகியோர் கைது செயது விசாரணை நடத்தினர்.
திருட்டு நடந்த வீட்டில் பதிவான விரல்ரேகை பிடிப்பட்ட 2 பேரிடம் ஒத்துப்போனது தெரியவந்தது. கைதான இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கைவரிசை காட்டியது தொடர்பான வழக்குகள் அப்பகுதி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
- அறந்தாங்கியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்
- அமைச்சர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சனாதனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். அப்போது சனாதனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரை கண்டித்தும் அவர்கள் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் முரளிதரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் யோகிதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரை அறந்தாங்கி காவல் துறையினர் கைது செய்தனர்.
- 422 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்
- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 422 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள்மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர்செய்யது முகம்மது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- தொழிலதிபர் ராமச்சந்திரன் அலுவலகத்திற்குள் சென்ற அவர்கள் காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சோதனை நடைபெறும் இடங்களில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை தொழிலதிபரும், மணல் குவாரி நடத்தி வருபவருமான ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான அலுவலகத்தில் அமலாக்கப்பிரிவினர் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நிஜாம் காலனி பகுதியில் உள்ள அவரது வேதாந்தா அலுவலகத்திற்கு காலை 9.30 மணிக்கு 2 கார்களில் 4 அமலாக்க பிரிவு அதிகாரிகள் வந்தனர்.
ஒரு கார் கேரள பதிவு எண்ணும், மற்றொரு கார் சென்னை பதிவு எண்ணும் கொண்டதாக இருந்தது. தொழிலதிபர் ராமச்சந்திரன் அலுவலகத்திற்குள் சென்ற அவர்கள் காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடைபெற்றபோது, மணல் தொழிலில் இவர் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினர் 20 இடங்களில் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனை நடைபெறும் இடங்களில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆலங்குடியில் இலக்கிய மன்ற கூட்டம் நடைபெற்றது
- தமிழ் மொழியின் பழமை பெருமை குறித்தும் இலக்கியம் சார்ந்த சொற்பொழிவுகள் நடைபெற்றது
ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இலக்கிய மன்ற கூட்டம் நடைபெற்றது. இலக்கிய மன்ற தலைவர் முத்து தலைமை வகித்தார். செயலாளர் பாபுஜான், பொருளாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் தமிழ் மொழியின் பழமை பெருமை குறித்தும் இலக்கியம் சார்ந்த சொற்பொழிவுகளையும் பாபுஜான், கவிஞர் ரமா.ராமநாதன் ஆகியோர் பேசினர். திருமுருகன் பாடல்கள் பாடினார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் கருப்பையா, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ராஜசேகரன், ஆசிரியர் வின்சென்ட், மணிராஜ், கிருஷ்ணன், முருகேசன், செல்லத்துரை, சுப்பிரமணியன், சசிகுமார், நெடுஞ்செழியன், குமார், ஆறுமுகம், ரமேஷ், விஜயபாரதி, வாசன், திருச்செல்வம், ஜெயராஜ், மற்றும் இலக்கியமன்ற ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
- கந்தர்வகோட்டையில்விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- கொடிக்கம்பம் மற்றும் விளம்பர பதாகைகளை திருடி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் வெள்ளையன், விடுதலைவளவன் ஆகியோர் தலைமை தாங்கினார். கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் விசிக கொடிக்கம்பம் மற்றும் விளம்பர பதாகைகளை திருடி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வழிபாட்டுத் தலங்களில் விழாவில் பங்கு கொள்ளவும், தொடர்ந்து நிர்வாகிகள் தாக்கப்படுவதை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன்,வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி அசோகன், தொகுதி செயலாளர் மருத பார்வேந்தன், மாநிலத் துணைச் செயலாளர் விடுதலை வேந்தன், கரு காமராஜ், நகரச் செயலாளர் சுர்ஜித் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் புதுக்கோட்டைக்கு விற்பனைக்காக விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன
- மரக்கூழ், மரவள்ளிக்கிழங்கினால் செய்யப்பட்டது என்பதால் சுற்றுசூழல் மாசு ஏற்படாது
புதுக்கோட்டை
விநாயகப் பெருமானின் அவதார தினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. விநாயகர் சதுர்த்தி நாளில் வீடுகளில் பல வண்ணங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்து, விநாயகருக்கு விருப்பமான அருகம்புல், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கடலை, பழங்கள் படைத்து வழிபடுவார்கள். விநாயகர் பூஜை முடிந்ததும் 3,5,7 அல்லது 10 வது நாளில் வீடுகளில் வைத்து வழிபடப்பட்ட விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து பூஜை செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
வழக்கமாக விநாயகர் சதுர்த்தியானது ஆவணி மாதத்தில் தான் வரும். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் வருகிறது. பெருமாளுக்குரிய புரட்டாசி மாதம் துவங்கும் நாளிலேயே, முழு முதற்கடவுளான விநாயகருக்கு உரிய விநாயகர் சதுர்த்தியும் இணைந்து வருவதால் இது கூடுதல் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் தொழிலாளிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போதே விநாயகர் சிலை விற்பனை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் ஆங்காங்கு விநாயகர் சிலை விற்பனை நடைபெற்று வருகிறது.
இதற்காக ஆந்திரா, ராஜஸ்தான், கொல்கொத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரை அடி முதல் 10 அடி உயரம் வரையிலான பல வண்ண சிலைகள் புதுக்கோட்டைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலமாக புதுக்கோட்டை திலகர் திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விநாயகர் சிலைகள் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் பேப்பர் கூல், மரவள்ளி கிழங்கு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனால் நீர் நிலைகள் மாசு படாமல் பாதுகாக்கப்படும். இந்த சிலைகள் அனைத்தும் 50 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனைக்காக காட்சி படுத்தப்பட்டு உள்ளன.
இந்து முன்னணி சார்பில் ஆந்திராவில் இருந்து 67 விநாயகர் சிலைகள் வருவிக்கப்பட்டு உள்ளது. இதில் 48 விநாயகர் சிலைகள் புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதை தொடர்ந்து தற்போதே விநாயகர் சிலை விற்பனையானது புதுக்கோட்டையில் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
- அறந்தாங்கி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 10 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
- நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏகணிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுமத் நிஷா (40). இவர் மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.
கணவர் முகம்மதுமீராஷா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் ரகுமத் நிஷா மைவயல் கிராமத்தில் உள்ள உறவினர் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது பின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ளே அறைகள் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 1கவர்னர் செயின் 9 பவுன், மோதிரம் 1 பவுன்
சுமார் 10 பவுன் நகைகள் மற்றும் லேப்டாப், செலவுக்கு வைத்திருந்த ரூ.2 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு சம்பவத்தை குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .
- புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பயணிகளை ஏற்றுவதில் தனியார் பஸ் ஓட்டுனர்களிடையே மோதல் ஏற்பட்டது
- போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அவ்வப்போது தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்க ளுக்கு இடையே நேரம் பின்பற்றி பயணிகளை ஏற்றி செல்வதில் வாக்கு வாதம் ஏற்படுவது வாடி க்கை யாக நடந்து வருகிறது.
இந்தநிலையில் இன்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இரண்டு தனியார் பேருந்து களின் நடத்துனர்கள் போட்டி ப்போட்டு பயணி களை ஏற்றினர்.
அதில் ஒரு பஸ் அரிமளம் தேனிப்பட்டி நோக்கியும், மற்றொரு பஸ் ராங்கியம் மெட்டு பகுதிக்கும் இயக்கப்பட்டது.
பின்னர் அந்த பஸ்கள் ஒரே நேரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 2-வது நிறுத்தமான பழைய பேருந்து நிலைய பகுதியில் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி பயணிகளை ஏற்றினர்.
அப்போது இரு பேருந்து களின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் இரண்டு பேருந்துகளையும் சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அவ்வழியாகச் சென்ற மற்ற பேருந்துகள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர்.
ஆனால் அதைப்பற்றி கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தகராறு செய்தனர்.
அப்போது பொறுமை இழந்த இருசக்கர வாகன ஓட்டிகள் தகராறு செய்த 2 பேருந்துகளின் நடத்துன ர்கள் மற்றும் ஓட்டுனர்களை தட்டி கேட்டனர்.
அதனை தொடர்ந்து அந்த பேருந்துகளின் டிரைவர்கள், பேருந்துகளை இயக்கி சென்றனர்.
இந்த தகராறு காரணமாக சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது போல் பயணிகளை ஏற்றி செல்வதில் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இது போன்று வாக்குவாதத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் ே காரிக்கை விடுத்துள்ளனர்.
- புதுக்கோட்டை காரையூர்,சீமானூர் பகுதிகளில் இரண்டு மலைப்பாம்புகள் பிடிபட்டன
- இரண்டு மலைப்பாம்புகளும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை காரையூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி செட்டிகளத்தை சேர்ந்த அடைக்கன் என்பவருக்கு சொந்தமான வீடு அருகே கோழியே விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அடைக்கன், மறவாமதுரை கிராம நிர்வாக அலுவலர் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் பொன்னமராவதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் திருமயம் அருகே உள்ள சீமானூர் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது வீட்டின் அருகே ஊராட்சியை சேர்ந்த 100 நாள் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
- அறந்தாங்கி அருகே காளியம்மன் கோவிலில் நகைகள் திருடிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
- 7 பவுன் நகைகளை திருடிவிட்டு இருசக்கர வாகனத்தில் மாயமாகினர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே நெம்மேலிக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகத்தில் காளியம்மன் கோவில் அமை ந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக பழனிவேல் உள்ளார்.இந்த கோவிலுக்கு தின ந்தோறும் சுற்றுவட்டா ரங்களிலில் பக்தர்கள் வருகை தந்து சாமியை வழிபட்டு செல்வார்கள். இதனால் இக்கோவிலில் இரு நேரங்களிலும் பூஜைகள் நடைபெறும்.சம்பவத்தன்று அம்மனு க்கு தங்க நகைகளை அணி வித்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் கோவில் பூசாரி அய்யனார் கோவிலில் பூஜை நடத்த சென்றார்.அப்போது அங்கு 2 வாலிபர்கள் சாமி தரிசனம் ெசய்தனர். திடீரென அவர்கள் அம்மன் கழு த்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 7 பவுன் தங்க நகை களை திருடினர்.இதனை கண்டு அதிர்ச்சி யடைந்த பூசாரி சத்தம் போட்டார். இதையடுத்து அந்த வாலிபர்கள் அங்கி ருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி ஞானவேல் அளி த்த புகாரின் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணமேல்குடி சந்தைப்பேட்டையில் நடந்த தீ விபத்தி 6 கடைகள் எரிந்து நாசமாகின
- விபத்து குறித்து மணமேல்குடி போலீசார், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மணமேல்குடி சந்தைப்பேட்டையில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான சிறு கடைகள் உள்ளன. இந்த கடைகளை மீன் மார்க்கெட்டில் வியாபாரம் செய்பவர்கள் வாடகைக்கு எடுத்து மீன் மற்றும் கருவாடு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு கடையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே மளமளவென பக்கத்துக்கு கடைகளுக்கும் தீ பரவியது.இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.இந்த விபத்தால் 6 கடைகள் எரிந்து நாசமாயின. மேலும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள கருவாடு மற்றும் மீன்கள் மற்றும் தளவாட பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






