என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறந்தாங்கியில் பா.ஜ.க.வினர் கைது
    X

    அறந்தாங்கியில் பா.ஜ.க.வினர் கைது

    • அறந்தாங்கியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்
    • அமைச்சர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சனாதனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அறந்தாங்கி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். அப்போது சனாதனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரை கண்டித்தும் அவர்கள் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் முரளிதரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் யோகிதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரை அறந்தாங்கி காவல் துறையினர் கைது செய்தனர்.

    Next Story
    ×