என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டை மணல்குவாரி ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை 3-ம் நாளாக நடைபெற்றது
    • புதுக்கோட்டை மணல்குவாரி ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை 3-ம் நாளாக நடைபெற்றது

    புதுக்கோட்டை 

    மணல் குவாரிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்பாடு புகார் தொட ர்பா க மணல் குவாரி ஒப்ப ந்ததாரர்கள் வீடு அலுவ லகங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் புதுக்கோட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்க த்துறை அதிகா ரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொ ண்டனர்.

    புதுக்கோட்டையில் பிரபல தொழிலதிபரும் மணல் குவாரி ஒப்பந்ததா ரருமான முத்துப்பட்டி னத்தை சேர்ந்த ராமச்சந்தி ரன் வீடு, நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் அவரது தொடர்பு டையவர்களின் இடங்களில் மொத்தம் 10 இடங்களில் சோதனை நடந்தது.

    இதில் கந்தர்வ கோட்டை அருகே புனல் குளம் பகுதி யில் சண்முகம் என்ப வரது குவாரி, புதுக்கோட்டை தனியார் கட்டுமான நிறுவ னம் ஆகிய இடங்களில் அமலா க்கத்துறை சோதனை நேற்று முன்தினம் நிறைவ டைந்தது.

    பின்னர் 2-வது நாளாக நேற்று நிஜாம் காலனி ராமச்சந்திரன் அலுவலகம், முத்துப்பட்டினத்தில் உள்ள அவரது வீடு, ஆடிட்டர் முருகேசன் அலுவலகம், ராமச்சந்திரனின் தொழில் கூட்டாளியான தொ ழிலதிபர் மணிவண்ணன் வீடு, வம்பன் அருகே மழவரா யன்பட்டியில் உள்ள ராமச்சந்திரனின் உறவினர் வீரப்பன் வீடு, கறம்பக்குடியில் குவாரி அதிபர் கரிகாலன் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    இதில் நேற்று மதியம் மணிவண்ணன் வீட்டில் நடந்த சோதனை நிறைவடை ந்தது. ராமச்சந்தி ரனின் அலு வலகம் தவிர்த்து கரிகாலன் உள்ளிட்ட மற்ற வர்களின் வீடுகளில் நடந்த சோதனையும் நேற்று மாலை மற்றும் இரவில் நிறைவு பெற்றது.

    இன்று(வியாழக்கிழமை) 3-வது நாளாக ராமச்ச ந்திரனின் அலுவலகத்தில் அமலா க்கத்துறை அதிகாரி கள் முகாமிட்டு ள்ளனர்.

    புதுக்கோட்டையில் ராமச்சந்திரன் இல்லை. ஆகவே ஏற்கனவே சோத னையில் கிடைத்த ஆவ ணங்கள் அடிப்ப டையில் அவரிடம் விசாரணை நடத்த அமலா க்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்து காத்திருப்பதாக கூறப்படு கிறது.

    அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்ய ப்பட்டு ள்ளது. ஆகவே அவரை அதிகாரிகள் தொ டர்பு கொள்ள இயலாமல் தவி ர்த்து வருகின்றனர்.

    இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவ ணங்கள் குறித்து எந்த தகவ ல்களையும் அமலா க்கத்து றை அதிகாரிகள் அதிகா ரப்பூர்வமாக தெரிவிக்கவி ல்லை.

    • புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதிகளில்மேலும் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
    • டெங்கு அறிகுறி இருப்பவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் சற்று அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் மாவட்டம் முழுவதும் 35 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியில் ஒருவருக்கும், அறந்தாங்கி பகுதியில் மேற்பனைக்காடு குளமங்கலம் வடக்கு தெரு,எழில் நகர், பூவை உள்ளிட்ட நகர பகுதிகளில் மேலும் 4 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றியங்கள் தோறும் 20 டெங்கு களப்பணியாளர்களும், டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 10 களப்பணியாளர்களும், நகராட்சி பகுதிகளில் 30 களப்பணியாளர்களும் டெங்கு ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சலை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    டெங்கு அறிகுறி இருப்பவர்கள் அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு மாவட்ட சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • குளவாய்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி நலத்திட்ட உதவிகள்
    • கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார்

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை மாவ ட்டம் எஸ்.குளவாய்ப ட்டி யில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பல்வே று அரசு நலத்திட்ட உதவி களை மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கி னார்.

    பின்னர் அவர் கூறும் போது,

    தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாத ந்தோறும் ஒரு குக்கி ராமத்தை தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்திட அறிவுறுத்தியு ள்ளார்கள்.

    அதன்படி தமிழக அரசி ன் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொ ள்ளப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்ட ங்களை விளக்கும் வகையில் கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

    பொதுமக்கள் அனை வரும் அளிக்கும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன.

    அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்ட ங்களின்கீழ் பயன்பெறு வதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பய ன்பெறலாம்.

    இம்மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்க ளால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்டக்ஷ ஆட்சியரகத்தில் கண்கா ணிப்பு அலுவலர் நியமிக்க ப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுவின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகி றது.

    எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்கள் மூலமாக அரசின்

    திட்டங்களை அறிந்து கொள்வ துடன், அவற்றின் மூலம் பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

    இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டா ட்சியர் (பொ) க.ஸ்ரீதர், தனித்துணை ஆட்சியர் செய்யது முகம்மது, திருவ ரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டாட்சியர் விஸ்வநாதன்இ உள்பட பலர் கலந்து ெ காண்டனர்.

    • நேற்று மதியம் மணிவண்ணன் வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்தது.
    • 3-வது நாளாக ராமச்சந்திரனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    மணல் குவாரிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்பாடு புகார் தொடர்பாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் புதுக்கோட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    புதுக்கோட்டையில் பிரபல தொழிலதிபரும் மணல் குவாரி ஒப்பந்ததாரருமான முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் வீடு, நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் இடங்களில் மொத்தம் 10 இடங்களில் சோதனை நடந்தது.

    இதில் கந்தர்வகோட்டை அருகே புனல்குளம் பகுதியில் சண்முகம் என்பவரது குவாரி, புதுக்கோட்டை தனியார் கட்டுமான நிறுவனம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

    பின்னர் 2-வது நாளாக நேற்று நிஜாம் காலனி ராமச்சந்திரன் அலுவலகம், முத்துப்பட்டினத்தில் உள்ள அவரது வீடு, ஆடிட்டர் முருகேசன் அலுவலகம், ராமச்சந்திரனின் தொழில் கூட்டாளியான தொழிலதிபர் மணிவண்ணன் வீடு, வம்பன் அருகே மழவராயன்பட்டியில் உள்ள ராமச்சந்திரனின் உறவினர் வீரப்பன் வீடு, கறம்பக்குடியில் குவாரி அதிபர் கரிகாலன் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    இதில் நேற்று மதியம் மணிவண்ணன் வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்தது. ராமச்சந்திரனின் அலுவலகம் தவிர்த்து கரிகாலன் உள்ளிட்ட மற்றவர்களின் வீடுகளில் நடந்த சோதனையும் நேற்று மாலை மற்றும் இரவில் நிறைவு பெற்றது.

    இன்று (வியாழக்கிழமை) 3-வது நாளாக ராமச்சந்திரனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

    புதுக்கோட்டையில் ராமச்சந்திரன் இல்லை. ஆகவே ஏற்கனவே சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.

    அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு ள்ளது. ஆகவே அவரை அதிகாரிகள் தொ டர்பு கொள்ள இயலாமல் தவிர்த்து வருகின்றனர்.

    இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்த தகவல்களையும் அமலாக்கத்து றை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

    • மண்டபம் பூட்டி கிடந்ததை அடுத்து கறம்பக்குடி குழந்திரான்பட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.
    • கரிகாலன் வீட்டில் அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கறம்பக்குடி:

    திண்டுக்கல் ரத்தினத்தின் மருமகனும், ராமச்சந்திரனின் தொழில் பங்குதாரருமான கறம்பக்குடி குழந்திரான்பட்டு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் கரிகாலன் இன்று புதிதாக அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கியுள்ளார்.

    முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 கார்களில் கரிகாலனுக்கு சொந்தமான பன்னீர்தேவர் திருமண மண்டபத்திற்கு இன்று காலை சென்றனர்.

    மண்டபம் பூட்டி கிடந்ததை அடுத்து கறம்பக்குடி குழந்திரான்பட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டில் கரிகாலனின் தாயார் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் உள்ளனர். கரிகாலன் சென்னையில் இருப்பதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் கரிகாலன் வீட்டில் அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் கரிகாலன் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது.

    • கறம்பக்குடியில் அமைச்சர் உதயநிதி-ஒன்றிய பெருந்தலைவரை அவதூறாக பேசியவர் கைது செய்யப்பட்டார்
    • தி.மு.க. மகளிர் அணியினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது நடவடிக்கை

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் குழந்தி ரான் பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் மாலா ராஜேந்திர துரை இவர் கறம்பக்குடி ஒன்றியத்தின் பெருந்தலைவராக உள்ளார். அதே ஊரில் வசித்து வரும் சுப்பையா மகன் பாஸ்கர் என்பவர் உதயநிதி ஸ்டாலின்யை விமர்சித்து தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியும், ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரையையும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஒன்றிய பெருந்தலைவர் மாவட்ட மகளிர் அணிக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.வி.சித்ரா தலைமையில் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் சட்டம், ஒழுங்கு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாலோசிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, போலீஸ் எஸ்.பி. வந்திதா பாண்டே, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல் மற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குடியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது
    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கூலியை உயர்த்திட கோரிக்கை

    புதுக்கோட்டை,  

    புதுக்கோட்டை ஆலங்குடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    ஒன்றிய தலைவர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மாநில தலைவர் வாலண்டினா, மாவட்ட செயலாளர் சுசிலா, மாவட்ட தலைவர் பாண்டிச்செல்வி, ஒன்றிய செயலாளர் சோபனா, பொருளாளர் நதியா, துணைச்செயலாளர் கோமதி, துணை தலைவர் லதா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    குடும்ப அட்டையில் என்.பி.எச்.எம். என்ற குறியீடு உள்ள அட்டையை பி.எச்.எச். ஆக மாற்றிட வேண்டும். முதியோர் மற்றும் விதவை உதவி தொகையை வழங்கிட வேண்டும். அனைத்து ஊராட்சியிலும் பாரபட்சமின்றி குடிநீர் வழங்கிட வேண்டும். அனைத்து ஊராட்சியிலும் சாலை மற்றும் தெருவிளக்கை சரிபார்த்து சீர்படுத்திட வேண்டும்.

    100 நாள் வேலை கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனே வேலை அட்டையை வழங்கிட வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், தினக்கூலி ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் ஆலங்குடி சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் (பொறுப்பு) ராஜேஸ்வரியிடம் மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்று க்கொண்டு தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். அதன்பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்க புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • தேர்வு செய்யப்படும் தமிழ் ஆர்வலருககு ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்

    புதுக்கோட்டை 

    தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டினை பெருமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரை தேர்வு செய்து அவர்களுக்கு "தமிழ் செம்மல்" விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. "தமிழ் செம்மல்" விருதாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசுத்தொகையும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பெற்று வருகின்றன. இவ்வகையில் 2023-ம் ஆண்டிற்கான "தமிழ் செம்மல்" விருதுக்கான விண்ணப்பங்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

    விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள், விருதுக்கான விண்ணப்பத்தினை இருபடிகளில் உரியவாறு நிறைவு செய்து, தன்விவரக்குறிப்பு, நூல்கள், கட்டுரைகள் ஏதேனும் வெளியிடப்பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள் (பட்டியலோடு ஒவ்வொன்றிலும் இரு படிகள் இணைக்கப்பட வேண்டும்), தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம், விருதுக்குத் தகுதியாக குறிப்பிடத்தக்க பணிகள் தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக்கடிதம், மாவட்டத்தில் செயல்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரை கடிதம் மற்றும் 2 கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்களுடன், ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கான சான்றுகளையும் இணைத்து புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதிக்குள் கிடைக்கப்பெறும் வகையில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும்.

    மேலும் விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு 04322-228840 என்ற தொலைபேசி எண்ணிலோ, 914322 228840 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலோ அல்லது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரையோ தொடர்பு கொள்ளலாம்.

    • புதுக்கோட்டை தெற்கு பொன்னம்பட்டியை சேர்ந்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • திருமணம் நடந்து 3 மாதங்களே ஆன நிலையில் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதால் மனம் உடைந்து தற்கொலை

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே தெற்கு பொன்னம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் சரவணன் (வயது 29).

    இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

    இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்த சரவணன் மது போதையில் அரளி விதையை (விஷம்) தின்று மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதைப்பார்த்த அவரது உறவினர்கள் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், அரிமளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய் அழுது கொண்டிருப்பதை கண்ட பிரேம்குமாருக்கு தந்தை மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது.
    • மணல்மேல்குடி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணல்மேல் குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்( வயது 46) மீன்பிடி தொழிலாளி.

    இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரேம்குமார் (23) சிவகங்கை மாவட்டத்தில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளான வேல்முருகன் அவ்வப்போது குடிபோதையில் அவரது மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனை அவரது மகன்கள் கண்டித்தனர்.

    இருந்த போதிலும் வேல்முருகன் குடிபோதையில் மனைவியிடம் ரகளை செய்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம் போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த வேல்முருகன் மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் அவரை தாக்கினார். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் கதறி அழுதார். தாய் அழுது கொண்டிருப்பதை கண்ட பிரேம்குமாருக்கு தந்தை மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து தந்தையின் வயிற்றுப் பகுதியில் ஓங்கி குத்தினார். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    பின்னர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு வேல்முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த மணல்மேல்குடி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தாயை தாக்கியதால் தந்தையை மகன் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது
    • அறிவார்ந்த புத்தகங்களை படித்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம் என அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

      ஆலங்குடி 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,

    பல தடைகளை கடந்து சோதனைகளை தாண்டி சென்றால்தான் சாதனையை அடைய முடியும். மாணவ மாணவிகள் கல்வி, விளையாட்டு, நல்ல பழக்க வழக்கங்கள் என அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்க வேண்டும். கொத்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சிலர் சிலம்பம் பயிற்சியை வெளிப்படுத்தினர். அடுத்த ஆண்டு இங்குள்ள அனைத்து மாணவிகளும் சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும். மாணவ மாணவிகள் அறிவார்ந்த புத்தகங்களை படித்து பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் கவுரவப்படுத்தும் வகையில் முன்னேற வேண்டும். உங்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்க வீட்டில் பெற்றோரும் பள்ளிகளில் ஆசிரியர்களும் உழைத்து வருகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக படித்து அனைவரும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஆலங்குடி தாசில்தார் பாலசுப்ரமணியன், திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, கே.வி.சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×