என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டத்தில் 704 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- 75 இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது
புதுக்கோட்டை,
விநாயகர் சதுர்த்தியையெட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் முறையாக அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதுடன், சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்து உள்ளது.
இந்தாண்டு புதுக்கோட்டை மாவடடத்தில் 704 இடங்களில் விநாயகர் சிலைகளை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதில் 79 இடங்களில் அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. மேலும் கடந்த காலங்களில் விநாயகர் சிலை ஊர்வலத்ன் போது சட்டம் ஒழங்கு பிரச்சினை ஏற்பட்ட இடங்களில் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கறம்பக்குடி உள்ளிட்ட இடங்களில் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் சென்று விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களை ஆய்வு செய்தார். புதுக்கோட்டையில் திருவப்பூர், கலெக்டர் அலுவலகம் அருகில், அரசு மகளிர் கலைக்கல்லூரி சாலை, பழைய பேருந்து நிலையம், கிழக்கு ராஜவீதி, திலகர் திடல், பழனியப்பா கார்னர், மச்சுவாடி, பியு சின்னப்பா பூங்கா உள்பட 75 இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிலைகள் அனைத்தும் விநாயகர் சதுர்த்தியில் இருந்து ஒரு வாரத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- கறம்பக்குடியில் மரத்தில் வேன் மோதி டிரைவர் படுகாயம் அடைந்தார்
- போலீசார் டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
கறம்பக்குடி,
தஞ்சாவூர் மாவட்டம் ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவர் பட்டுக்கோட்டையில் வாடகை வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி அருகே புதுவளசலில் உள்ள மாமனார் வீட்டிற்கு வேனை ஓட்டிச் சென்றார். கறம்பக்குடி பெரிய அக்னி ஆற்றுப் பாலம் அருகே சென்ற போது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.
இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேனில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவர் சுதாகரை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் இந்த விபத்து குறித்து கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
- ஆலங்குடி ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி பெஞ்ச், டெஸ்க் வழங்கும் விழா நடைபெற்றது
- சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை,
ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளிக்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் மதிப்பில் பெஞ்ச் , டெஸ்க் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம. சுப்புராம் தலைமை வகித்து டெஸ்க் பெஞ்ச்களை வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பன்னீர்செல்வம் , தனராஜ் , செல்வராஜ், ஆலங்குடி நகர தலைவர் அரங்குளவன் மற்றும் காங்கிரஸ் கட்சி நண்பர்கள் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டையில் 100 கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவரணி சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அண்ணா பிறந்த நாளில் திருவரங்குளம் அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
- புதுக்கோட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- திருக்கோகர்ணம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கவிநாடு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 30). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நேசிகா. இந்த நிலையில் வீரமணி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
- கந்தர்வகோட்டை தலைமை மருத்துவமனையை விரிவு படுத்த வேண்டும்உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற வலியுறுத்தல்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
ஆணையர்கள் திலகவதி, பால் பிரான்சிஸ், துணைத் தலைவர் செந்தாமரை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே உயர் கோபுர விளக்கு அமைக்க வேண்டும், கந்தர்வகோட்டை தலைமை மருத்துவமனையை விரிவு படுத்த வேண்டும்உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் உறுப்பினர்களின் கோரிக்கை நிதி நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றித் தரப்படும் என்று கூறினார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாண்டியன், பாரதி பிரியா, கலியபெருமாள், கோவிந்தராஜ், மலர், முருகேசன், திருப்பதி, நதியா, சுதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வாகன விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்
- இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்
புதுக்கோட்டை
திருச்சி சின்ன சூரியூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 35). இவர் புதுக்கோட்டை வடக்கு 2-ம் வீதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பழனியப்பா கார்னர் அருகே வந்தபோது மதுரையில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்ற அரசு பஸ் இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அங்கன்வாடி மையங்களை மூடுவதை கைவிட வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பல ஆண்டுகளாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குழந்தைகளின் ஊட்டச்சத்து, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் நலன் கருதி அங்கன்வாடி மையங்களை மூடுவதைக் கைவிட வேண்டும். தேர்தல் பணிகளான வாக்குச்சாவடி பணிகளை பார்க்கச் சொல்லி அங்கன்வாடி ஊழியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அங்கன்வாடி மையங்களில் கேமரா பொருத்துவதை கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை உயர் அதிகாரிகள் வீடுகளில் வேலைகளில் ஈடுபடுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சவரியம்மாள் நன்றி கூறினார்.
- 5 துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது
புதுக்கோட்டை
திருமயம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரைக்குடி, ஊனையூர், சவேரியார் புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைகுடிபட்டி, மாவூர், கோனாபட்டு, துளையானூர், தேத்தாம்பட்டி, ஆதனூர், வாரியப்பட்டி, கொள்ள காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, லட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பெல் நிறுவனம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
குளத்தூர், குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கீரனூர் பேரூராட்சி பகுதிகள் பரந்தாமன் நகர், கீழகாந்திநகர், மேல காந்தி நகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.சி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமைநகர், அழகு நகர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உலகத்தான்பட்டி, உடையாளிப்பட்டி, ராக்கதாம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழமங்களம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கீரனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
- இரு சக்கர வாகனம் மோதி பெண் இறந்தார்.
- சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை விராலிமலை தாலுகா பகவான் பெட்டியை சேர்ந்தவர் குழந்தை மனைவி அழகம்மாள் (வயது 55). இவர், பகவான்பட்டி அருகே புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வா கனம் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அழகம்மாளை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கறம்பக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவர்களை போலீசார் கைது செய்தனர்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சேசுராஸ் தலைமையில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து, கறம்பக்குடி தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் காஸ் சிலிண்டர் விலையை இரு மடங்காக உயர்த்திய மத்தியஅரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட குழு உறுப்பினர் திருஞானம் மற்றும் 19 பெண்கள் உள்ளிட்ட 56 பேரை கறம்பக்குடி போலீசார் கைது செய்தனர்.
- புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்திற்கு மாவட்டத் துணைச் செயலாளர் கே ஆர் தர்மராஜன் தலைமையேற்றார் மாவட்ட குழு உறுப்பினர் அரசப்பன் ஒன்றிய செயலாளர் டி சாமி கண்ணு கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி நாகராஜ், விவசாயிகள் சங்க நிர்வாகி அம்பலராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஆர் கலியமூர்த்தி, மாதர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் விமலா, நிர்வாக குழு உறுப்பினர் பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர் மாரிமுத்து, விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் முத்துச்சாமி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராசு, கௌரவத் தலைவர் காளிமுத்து வீராசாமி, மாதர் சங்க ஒன்றிய தலைவர் ஆர் பானுமதி தங்கையன், கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கண்ணையன், வெங்கடாஜலம், மாரிமுத்து, மஞ்சம்பட்டி ரங்கசாமி,காட்டு நாவல் பழனிச்சாமி. வேலாடிபட்டி வெள்ளைச்சாமி, மங்களா கோயில் முனியாண்டி, ஒத்த வீடு செல்லப்பன், குருசுப்பட்டி முத்தையா, கந்தர்வகோட்டை கருப்பையன் கல்லுப்பட்டி மற்றும் 13 பெண்கள் உட்பட 70 பேர் பேர் பங்கேற்றனர். முன்னதாக கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டம் செய்தனர்.






