என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை கறம்பக்குடியில் சாலை மறியல்
    X

    புதுக்கோட்டை கறம்பக்குடியில் சாலை மறியல்

    • கறம்பக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவர்களை போலீசார் கைது செய்தனர்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சேசுராஸ் தலைமையில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

    முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து, கறம்பக்குடி தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் காஸ் சிலிண்டர் விலையை இரு மடங்காக உயர்த்திய மத்தியஅரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட குழு உறுப்பினர் திருஞானம் மற்றும் 19 பெண்கள் உள்ளிட்ட 56 பேரை கறம்பக்குடி போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×