என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டையில் குத்துச்சண்டை பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
    • மாணவ மாணவி களுக்கு கையுறை , மற்றும் தலைக்கவசத்தை வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    அப்துல் காதர் பயிற்சிகள் அளித்து வருகிறார். இங்கு பயிற்சி பெறும் குத்துச்ச ண்டை வீரர்கள் மாவட்ட மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்துள்ளனர்.மேலும் குத்துச்சண்டை பயிற்சி பெறுபவர்களுக்கு கையுறை மற்றும் தலைக்க வசம் ரூ. 3000, 4000 விலை உள்ளதால் வீரர்கள் வா ங்குவதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வந்த நிலையில்,இவர்களுக்கு உதவி செய்வதற்காக புதுக்கோ ட்டை ரோட்டரி சங்க தலை வர் ராஜா முஹம்மது ஏற்பா ட்டில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் குத்து ச்சண்டை வீராங்க னைக ளுக்கு கையுறை மற்றும் தலைக்கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் புது க்கோட்டை குத்துச்சண்டை கழக தலைவர் எஸ் வி எஸ் ஜெயக்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி துணை ஆளுநர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் வேலு கார்த்திக் புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ராஜா முஹம்மது பொருளாளர் அருண் செயலாளர் ராம்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவ மாணவி களுக்கு கையுறை , மற்றும் தலைக்கவசத்தை வழங்கி சிறப்பித்தனர்.குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு உதவி செய்த சங்க நிர்வாகிகளுக்கு குத்துச்சண்டை வீராங்க னைகள் மிகுந்த மகிழ்ச்சி யுடன் நன்றி தெரிவித்தனர்.

    • பாரத பிரதமர் மோடியின் பிறந்தநாள் நாளை முன்னிட்டு புதுமண தம்பதிகளுக்கு ‘பலகாரக்குடம் சீர்வரிசை’ வழங்கப்பட்டது
    • ஏவிசிசி கல்வி குழுமங்களின் நிறுவனரும், ஆதி இந்தியா அறக்கட்டளையின் தலைவருமான ஏவிசிசி கணேசன் வழங்கினார்

    புதுக்கோட்டை 

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாள் விழா, புதுக்கோட்டை திருவப்பூர்முத்துமாரியம்மன் கோவில், திலகர் திடலில், ஏவிசிசி கல்வி குழுமங்களின் நிறுவனரும், ஆதி இந்தியா அறக்கட்டளையின் தலைவருமான ஏவிசிசி கணேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் அபிஷேக ஆராதனையுடன் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.முகூர்த்த நாளை முன்னிட்டு, திருவப்பூர் கோயிலில் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் அனைவருக்கும் 'மோடி வீட்டு சீதனம்' என்ற பெயரில் முறுக்கு, அதிரசம், லட்டு நிரம்பிய 'பலகாரகுடம்' சீர்வரிசை பாத்திரங்களை பிரதமரின் பிறந்தநாள் பரிசாக ஏவிசிசி கணேசன் வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

    புதுமையான இந்த அணுகுமுறையால் மணவீட்டார்களும்,பொதுமக்களும் பெரிதும் மகிழ்ந்தனர்.பாரத பிரதமர் மோடியின் சாதனைகள் மற்றும்பெருமைகளை விளக்கி, டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்ட பத்திரிக்கை செய்தி மலரும், இனிப்புகளும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

    நிகழ்வுகளில் புதுக்கோட்டை மாவட்ட பாஜக உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் கைக்குறிச்சி சுப்பிரமணியன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் பார்சல் ரவி,மாவட்ட அலுவலக செயலாளர் சந்துரு,நகர தலைவர் லெட்சுமணன்,நகர பொது செயலாளர் மதன்குமார், நகர செயலாளர்கள் ரங்கநாதன், சுரேஷ்குமார், ஏசிகண்ணன் மற்றும் கிளைத்தலைவர்கள்கலந்து கொண்டனர். ஆதி இந்தியா அறக்கட்டளை மேலாளர் கைலாஷ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • பாராளுமன்றத்தில் வ.உ.சி. சிலை வைக்க வேண்டும் என்று புதுக்கோட்டையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது
    • புதுக்கோட்டையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

     புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை லேணா திருமண மகாலில் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் துரை.மதிவாணன் எழுதிய செம்மாப்புத் தமிழா சிதம்பரச் செம்மல் என்ற நூல் வெளியிடப்பட்டது. முன்னதாக வ.உ.சி. உருவபடத்தை அகில இந்திய வ.உ.சி.பேரவை மாநில தலைவர் லேணா.மு.லெட்சுமணன்பிள்ளை திறந்து வைத்தார். மாவட்ட கவுரவ தலைவர் ராமராஸ், பேராசிரியர் தா.மணி மாவட்ட தலைவர் நிலா மணியன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். வ.உ.சி.மகன் வழி பேரன் வ.உ.சி.வா.சிதம்பரம் நூலை வெளியிட கவிஞர் தங்கம்மூர்த்தி பெற்றுக் கொண்டார் .வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட வ.உ.சி. என்ற தலைப்பில் சென்னை ஆய்வாளர் ரெங்கையா முருகன், வ.உ.சி.யின் வழி என்ற தலைப்பில் தமிழ்நாடு வ.உ.சி.ஆய்வு வட்டம் செயலாளர் குருசாமி மயில்வாகனன் தமிழ்தேச அரசியலில் வ .உ.சி.யின் பங்கு என்ற தலைப்பில் சிவகங்கை பொறியாள்ர் கதிர் நம்பி பேசினார். தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் பெ .மணியரசன் பேசினார். வ.உ.சி. கப்பலோட்டினார் என நிறுத்தி கொள்ளாமல் அவருடை பன்முக தன்மையை மக்கள் அறிந்து கொள்ள அவருடைய செயல்களை வெளிகொணரவேண்டும். அதற்காகதான் அவரை பற்றி தெரிந்துக் கொள்ள ஆராய்ச்சி நூலகம் அமைக்க வேண்டும். வேண்டும். இந்தியா பல சேதங்களாக பிரிந்து கிடந்தாலும் ஒற்றை தேசமாக விளங்கவேண்டும் என்றார். விழாவில் உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைகழகம் வ.உ.சி. பெயரில் மாற்றம் செய்ய தீர்மானம் போட வேண்டும். பராளுமன்ற வளாகத்தில் வ.உ.சி. சிலை வைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் வ.உ.சி பெயரில் பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட வேண்டும். வ.உ.சி. எழுதிய மெய்யறம் பள்ளிக் குழந்தைகளுக்கு பாடமாக வைக்கப்பட வேண்டும். சென்னை எழும்பூர் ரெயில்நிலையத்திற்கு வ.உ.சி பெயர் வைக்க வேண்டும். தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் ஆய்வாளர்களுக்கு வ.உ.சி. விருது வழங்கப்பட வேண்டும் . ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழாவில் பொன்.வாசிநாதன் வரவேற்று பேசினார். சிவ.சண்முகராஜா நன்றி கூறினார். தனபதி சேவியர், பேராசிரியர் விஸ்வநாதன், ராமு கண்ணு, வைர.ந.தினரகன், விடுதலைகுமரன், பீர் முகமது, சிறு தொழிலதிபர்கள் சங்க தலைவர்கள் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை வார சந்தையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு முகாம் நடத்தினர்
    • மஞ்சப் பை  வழங்கி  நெகிழிப் பை  விழிப்புணர்வு  பற்றி  வலியுறு த்தினார்கள்

     புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் க லைக்கல்லூரி வரலாற்று துறை 3-ம் ஆண்டு மாணவியர்கள் கல்லூரி முதல்வர்  ஜெ.சுகந்தி ஆலோசனையின்படி,   இயற்கையை  காப்போம் மீண்டும் மஞ்சப் பையை பய ன்படுத்துவோம் என்பதை வலியுறுத்தி  விழிப்புணர்வு முகாமை  புதுக்கோட்டை வாரசந்தைபகுதியில் நடத்தினர்.இந்த விழிப்புணர்வு  முகாமில் வரலாற்று துறை ஆங்கில வழியை சேர்ந்த சுமார் 75 மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்த விழிப்புணர்வு முகாமில்  இதில் நெகிழிப் பைகளை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்று வாரசந்தையில் காய்கறி வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு மாணவியர் மஞ்சப் பை  வழங்கி  நெகிழிப் பை  விழிப்புணர்வு  பற்றி  வலியுறு த்தினார்கள்.  இதில் துறை பேராசிரியர்கள் எம். ஜோதி மற்றும் ஆர். தனலட்சுமி மற்றும் வரலாற்று துறை தலைவர்        மு . காயத்ரி தேவி மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொ ண்டனர்.

    • விராலிமலை அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
    • மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

    விராலிமலை,  

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்கு டிபட்டி- தென்னலூர் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது.

    இங்கு அந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள் மது குடித்து வருகின்றனர். தினமும் பல லட்சம் ரூபாய்க்கு வியா பாரம் நடைபெறும். நேற்று விடுமுறை தினம் என்பதால் கூடுதலாக மது விற்பனை நடைபெற்றது.

    இந்த கடையில் மேற்பா ர்வை யாளராக துரைராஜ் என்பவரும், விற்பனை யாளர்களாக செந்தில்குமார், பாண்டியன், சோலை ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.

    வழக்கம் போல் வியாபா ரத்தை முடித்துவிட்டு நேற்று இரவு 10.30 மணிய ளவில் ஊழியர்கள் கடை யில் வியாபாரமான தொகை யை கடைக்கு உள்ளே இருக்கும் லாக்கரில் ரூ.4, 83,390 பணத்தை வைத்து விட்டு வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

    இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற சிலர் கடையின் பூட்டு உடைக்கப்ப ட்டு கிடப்பதை கண்டு போலீசாருக்கு தெரிவித்து ள்ளனர். இதையடுத்து நிகழ்விடம் வந்த இலுப்பூர் போலீசார் கடையின் உள்ளே சென்று பார்த்த போது உள்ளே லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது.

    அதில் வைத்திருந்த ரூ. 4, 83,390 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதற்கிடையே தகவல் அறிந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வசுந்தரதேவி சம்பவ இடத்தை பார்வை யிட்டு ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

    டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது.

    • விராலிமலை வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
    • கைரேகைகளை பதிந்து போலீசார் தீவிர விசாரணை

    விராலிமலை,  

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெரியார் நகரை சேர்ந்தவர் ஜோஸ் விக்டர். இவர் வெல்டிங் பட்டறை தொழில் செய்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வேளா ங்கண்ணி கோவிலுக்கு சென்றார்.

    பின்னர் இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிட ந்ததை கண்டு அதிர்ச்சியானர்.

    அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீடு முழுவதும் பொருட்கள் நாலாபுறமும் சிதறிகிடந்தது. வீட்டின் அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவ ந்தது.

    இதனை தொடர்ந்து ஜோஸ் விக்டர் விராலிமலை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்கள் வந்து மர்ம நபர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர்.

    பின்னர் அக்கம் பக்க த்தில் உள்ள வீடுகளில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளையும் ஆராய்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜோஸ் விக்டர் விராலிமலை போலீசில் புகார் செய்தார்.
    • புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெரியார் நகரை சேர்ந்தவர் ஜோஸ் விக்டர். இவர் வெல்டிங் பட்டறை தொழில் செய்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றார்.

    பின்னர் இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியானர்.

    அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீடு முழுவதும் பொருட்கள் நாலாபுறமும் சிதறிகிடந்தது. வீட்டின் அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து ஜோஸ் விக்டர் விராலிமலை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்கள் வந்து மர்ம நபர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர்.

    பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளையும் ஆராய்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் கடையின் உள்ளே சென்று பார்த்த போது உள்ளே லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது.
    • டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி-தென்னலூர் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது.

    இங்கு அந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள் மது குடித்து வருகின்றனர். தினமும் பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும். நேற்று விடுமுறை தினம் என்பதால் கூடுதலாக மது விற்பனை நடைபெற்றது.

    இந்த கடையில் மேற்பார்வையாளராக துரைராஜ் என்பவரும், விற்பனையாளர்களாக செந்தில்குமார், பாண்டியன், சோலை ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.

    வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று இரவு 10.30 மணியளவில் ஊழியர்கள் கடையில் வியாபாரமான தொகையை கடைக்கு உள்ளே இருக்கும் லாக்கரில் ரூ.4,83,390 பணத்தை வைத்து விட்டு வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

    இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற சிலர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து நிகழ்விடம் வந்த இலுப்பூர் போலீசார் கடையின் உள்ளே சென்று பார்த்த போது உள்ளே லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது.

    அதில் வைத்திருந்த ரூ. 4,83,390 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதற்கிடையே தகவல் அறிந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வசுந்தரதேவி சம்பவ இடத்தை பார்வையிட்டு ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

    டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மழையூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. முத்துராஜா மாணவர்களுக்கு வழங்கினார்

    ஆலங்குடி, 

    ஆலங்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேல்நி லைபள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர். முத்துராஜா இரண்டு நாள் பயிற்சி பெற்ற ஜூனியர் ரெட்கிராஸ் சங்க மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மேலும் பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி கள் வழங்கினார்.நிகழ்ச்சியில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவ.பாஞ்சாலன் , ராஜேந்திரன், சந்திரசேகர், பிரபுகாந்தி, சேகர், கணேசன், மணிகண்டன், மதி, ரெங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அறந்தாங்கி அருகே 6-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்
    • விநாயகர் சிலைக்கு சீரியல் பல்பு மாட்டியபோது பரிதாபம்

      அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மா வட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் மேல்பாதி பகு தியை சேர்ந்தவர் சக்திவேல்.இ வரது மகன் சின்னக்கருப்பன் (11), இவர் அதே பகுதியில் உள்ள அரசுமேல்நி லைப்பள்ளியில் 6-ம் வ குப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வருகின்ற விநா யகர் சதுர்த்தி விழா வை முன்னிட்டு, 2 1|2 அடி உயர விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபாடு செய்துள்ளார். மேலும் விநாயகர் சிலையை அலங்காரம் செய்வதற்காக அதற்கு சீரியல் பல்பு போ ட்டுள்ளார். அப்போது எதி ர்பாராத விதமாக சிறுவன் சின்னக்கருப்பன் மீது மின்சாரம் பாய்ந்து துடி த்துள்ளார். இதனை அறிந்த வீட்டிலிருந்தோர் சிறுவ னை மீட்டு அறந்தாங்கி அ ரசு மருத்துமனைக்கு கொ ண்டு சென்றுள்ளனர். அ ங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறு வன் பரிதாபமாக உயிரி ழந்துள்ளார். அதனை தொ டர்ந்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.சம்ப வம் குறித்து நாகுடி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநா யகர் சிலைக்கு சீரியல் லைட் மாட்டிய பள்ளிச் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 2 ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுவிற்கு சுழல் நிதியாக 25,000 கோடி வழங்கப்பட்டுள்ளது
    • அமைச்சர் மெய்யநாதன் தகவல்

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே வடகாட்டில் உள்ள ஆதி திராவிடர் காலனிக்கு திரு வள்ளுவர் நகர் என பெ யரிடப்பட்டு பெயர் பல கையை சுற்றுச்சூழல் அ மைச்சர் மெய்ய நாதன் தி றந்து வைத்தார். இதனை தொடர்ந்து அவர் பேசு கையில்,

    பெண்களுக்கு இலவச பஸ் பயணத்திற்கு அனுமதி அளித்து திட்டத்தை நிறைவேற்றி வைத்த நமது முதல்வர் தற்போது மாதந்த றும் ரூ.ஆயிரம் வழங்கி அவர்களின் துயர் துடை த்துள்ளார். தமிழ்நாட்டில் 31,000 பள்ளிகளில் 17 லட்சம் மாணவ மாணவி களுக்கு காலை உணவு வழங்கி மாணவ மாணவி களின் பசியை தீர்த்துள்ளார். அதேபோல் இளைஞர்கள் தொழில் தொடங்க டிக் மூலம் மானியத்துடன் கூடி ய கடன் வழங்கி வருகிறார். பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி வழங்கியுள்ளார். இந்த ஆண்டு ரூ. 30 ஆயிரம் கோடி வழங்க இளை ஞர்நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி நேரடி கண்காணிப்பில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க உள்ளார் . இதுபோல் தமிழக மக்கள் அனைத்து தரப்பி னரும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் வகையில் இரவு பகலாக சிந்தித்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். எ னவே தமிழக மக்கள் அனை த்து துறைகளிலும் மேலும் முன்னேற்றம் அடைய முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை
    • இரு மீன் பிடி இறங்கு தளங்களிலும் 550 விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன

    புதுக்கோட்டை,

    வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், கனமழையுடன் 65 கிலோ மீட்டருக்கும் மேல் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் ஆகிய 2 விசைப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை, இதனால் இரு மீன் பிடி இறங்கு தளங்களிலும் 550 விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.  

    ×