search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்றத்தில் வ.உ.சி. சிலை வைக்க வலியுறுத்தல்
    X

    பாராளுமன்றத்தில் வ.உ.சி. சிலை வைக்க வலியுறுத்தல்

    • பாராளுமன்றத்தில் வ.உ.சி. சிலை வைக்க வேண்டும் என்று புதுக்கோட்டையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது
    • புதுக்கோட்டையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை லேணா திருமண மகாலில் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் துரை.மதிவாணன் எழுதிய செம்மாப்புத் தமிழா சிதம்பரச் செம்மல் என்ற நூல் வெளியிடப்பட்டது. முன்னதாக வ.உ.சி. உருவபடத்தை அகில இந்திய வ.உ.சி.பேரவை மாநில தலைவர் லேணா.மு.லெட்சுமணன்பிள்ளை திறந்து வைத்தார். மாவட்ட கவுரவ தலைவர் ராமராஸ், பேராசிரியர் தா.மணி மாவட்ட தலைவர் நிலா மணியன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். வ.உ.சி.மகன் வழி பேரன் வ.உ.சி.வா.சிதம்பரம் நூலை வெளியிட கவிஞர் தங்கம்மூர்த்தி பெற்றுக் கொண்டார் .வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட வ.உ.சி. என்ற தலைப்பில் சென்னை ஆய்வாளர் ரெங்கையா முருகன், வ.உ.சி.யின் வழி என்ற தலைப்பில் தமிழ்நாடு வ.உ.சி.ஆய்வு வட்டம் செயலாளர் குருசாமி மயில்வாகனன் தமிழ்தேச அரசியலில் வ .உ.சி.யின் பங்கு என்ற தலைப்பில் சிவகங்கை பொறியாள்ர் கதிர் நம்பி பேசினார். தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் பெ .மணியரசன் பேசினார். வ.உ.சி. கப்பலோட்டினார் என நிறுத்தி கொள்ளாமல் அவருடை பன்முக தன்மையை மக்கள் அறிந்து கொள்ள அவருடைய செயல்களை வெளிகொணரவேண்டும். அதற்காகதான் அவரை பற்றி தெரிந்துக் கொள்ள ஆராய்ச்சி நூலகம் அமைக்க வேண்டும். வேண்டும். இந்தியா பல சேதங்களாக பிரிந்து கிடந்தாலும் ஒற்றை தேசமாக விளங்கவேண்டும் என்றார். விழாவில் உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைகழகம் வ.உ.சி. பெயரில் மாற்றம் செய்ய தீர்மானம் போட வேண்டும். பராளுமன்ற வளாகத்தில் வ.உ.சி. சிலை வைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் வ.உ.சி பெயரில் பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட வேண்டும். வ.உ.சி. எழுதிய மெய்யறம் பள்ளிக் குழந்தைகளுக்கு பாடமாக வைக்கப்பட வேண்டும். சென்னை எழும்பூர் ரெயில்நிலையத்திற்கு வ.உ.சி பெயர் வைக்க வேண்டும். தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் ஆய்வாளர்களுக்கு வ.உ.சி. விருது வழங்கப்பட வேண்டும் . ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழாவில் பொன்.வாசிநாதன் வரவேற்று பேசினார். சிவ.சண்முகராஜா நன்றி கூறினார். தனபதி சேவியர், பேராசிரியர் விஸ்வநாதன், ராமு கண்ணு, வைர.ந.தினரகன், விடுதலைகுமரன், பீர் முகமது, சிறு தொழிலதிபர்கள் சங்க தலைவர்கள் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×