என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலகாரக்குடம்"

    • பாரத பிரதமர் மோடியின் பிறந்தநாள் நாளை முன்னிட்டு புதுமண தம்பதிகளுக்கு ‘பலகாரக்குடம் சீர்வரிசை’ வழங்கப்பட்டது
    • ஏவிசிசி கல்வி குழுமங்களின் நிறுவனரும், ஆதி இந்தியா அறக்கட்டளையின் தலைவருமான ஏவிசிசி கணேசன் வழங்கினார்

    புதுக்கோட்டை 

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாள் விழா, புதுக்கோட்டை திருவப்பூர்முத்துமாரியம்மன் கோவில், திலகர் திடலில், ஏவிசிசி கல்வி குழுமங்களின் நிறுவனரும், ஆதி இந்தியா அறக்கட்டளையின் தலைவருமான ஏவிசிசி கணேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் அபிஷேக ஆராதனையுடன் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.முகூர்த்த நாளை முன்னிட்டு, திருவப்பூர் கோயிலில் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் அனைவருக்கும் 'மோடி வீட்டு சீதனம்' என்ற பெயரில் முறுக்கு, அதிரசம், லட்டு நிரம்பிய 'பலகாரகுடம்' சீர்வரிசை பாத்திரங்களை பிரதமரின் பிறந்தநாள் பரிசாக ஏவிசிசி கணேசன் வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

    புதுமையான இந்த அணுகுமுறையால் மணவீட்டார்களும்,பொதுமக்களும் பெரிதும் மகிழ்ந்தனர்.பாரத பிரதமர் மோடியின் சாதனைகள் மற்றும்பெருமைகளை விளக்கி, டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்ட பத்திரிக்கை செய்தி மலரும், இனிப்புகளும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

    நிகழ்வுகளில் புதுக்கோட்டை மாவட்ட பாஜக உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் கைக்குறிச்சி சுப்பிரமணியன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் பார்சல் ரவி,மாவட்ட அலுவலக செயலாளர் சந்துரு,நகர தலைவர் லெட்சுமணன்,நகர பொது செயலாளர் மதன்குமார், நகர செயலாளர்கள் ரங்கநாதன், சுரேஷ்குமார், ஏசிகண்ணன் மற்றும் கிளைத்தலைவர்கள்கலந்து கொண்டனர். ஆதி இந்தியா அறக்கட்டளை மேலாளர் கைலாஷ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ×