என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கீரனூரில் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மலர்தூவி வரவேற்பு
    • என்ஜின் டிரைவர் மற்றும் ஊழியர்கள், ஸ்டேசன் மாஸ்டர் ஆகியோருக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    திருச்சியில் இருந்து ராமேசுவரம் சென்று வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கீரனூரில் நின்று சென்று வந்தது. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் பயனடைந்து வந்தனர். கொரோனா காலகட்டத்தில் இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரெயில் இயக்கப்பட்ட அட்டவணையில் கீரனூரில் நிறுத்தம் இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அனைத்து கட்சிகளும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முதல் கீரனூர் ரெயில்வே நிலையத்தில் ஒரு நிமிடம் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும் என அறிவிப்பை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டது. இதையடுத்து மகிழ்ச்சிடைந்த பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் ரெயில் நிலையத்தில் திரண்டனர். இதையடுத்து அந்த ரெயில் கீரனூர் நிலையம் வந்ததும் மலர் தூவி வரவேற்றனர். மேலும் என்ஜின் டிரைவர் மற்றும் ஊழியர்கள், ஸ்டேசன் மாஸ்டர் ஆகியோருக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். பின்னர் புதுக்கோட்டை வரை டிக்கெட் எடுத்து அவர்கள் ரெயிலில் பயணம் செய்தனர்.

    • வேங்கைவயல் வழக்கில் மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு
    • ஏற்கனவே இறையூர் பகுதிகளை சேர்ந்த 25 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காக அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த வழக்கு தொடர்பாக வேங்கைவயல், இறையூர் பகுதிகளை சேர்ந்த 25 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதற்காக புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த மனு மீதான விசாரணையின் போது அடுத்தக்கட்ட நடவடிக்கை தெரியவரும். இதற்கிடையில் ஏற்கனவே டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவுகள் படிப்படியாக வந்திருப்பதாகவும், அதனை வைத்தும் ஒரு புறம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

    • புதுக்கோட்டை அருகே கார் மோதி சாலையோரம் நின்றுகொண்டிருந்த தம்பதி பலியானார்கள்
    • ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது சோக சம்பவம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள இளையாவயல் கிரா மத்தை சேர்ந்தவர் அருணா சலம் (வயது 65). விவசாயி. இவருக்கு சொந்மான வயல் குளத்தூர் புறவழிச்சாலை யோரம் உள்ளது.இந்தநிலையில் வயலுக்கு வந்த அருணாச்சலம், அவ ரது மனைவி இளஞ்சியம் இருவரும் ஆடுகளை மேய்ச லுக்கு விட்டுவிட்டு சாலை யோரம் மரத்தின் நிழலில் நின்று பேசிக்கொ ண்டிருந்த னர்.அப்போது புதுக்கோ ட்டை யில் இருந்து வேகமாக திருச்சி நோக்கி வந்த கார் இவர்கள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அருணா ச்சலம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ள த்தில் பரிதாபமாக உயிரிழ ந்தார்.மனைவி இளஞ்சியம் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் போலீசார் படுகா யமடைந்த இளஞ்சியத்தை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்னர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளஞ்சியமும் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். இதில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது பரமக்குடியை ேசர்ந்த அடைக்கலம் என்பவர் என்பது தெரியவந்ததை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விராலிமலையில் விஜய் பயிலகம் தொடக்கம்
    • மாவட்ட தலைவர் ஜாபர் பர்வேஸ் திறந்துவைத்தார்

    விராலிமலை, 

    விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விராலிமலையில் தளபதி விஜய் பயிலகம் தொடங்கப்பட்டது. இதில் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி நலத்திட்ட உதவிகள் நடிகர் விஜய் வழங்கினார். இதையடுத்து, நிர்வாகிக ளுடன் 3 நாட்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது, ஏற்கனவே கடலூரில் ஓராண்டாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செயல்படுத்த ப்பட்டு வரும் பாடசாலையில் படித்த பல மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று ள்ளனர் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைக் கேட்ட விஜய், இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செய ல்படுத்த முடிவெடுத்தார்.

    அந்த வகையில், காமராஜர் பிறந்த நாளில் இரவு நேர பாடசாலை தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தொடங்க வேண்டும் என நிர்வாகிக ளுக்கு அறிவுறுத்தினார்.இந்நிலையில், காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி முதற்கட்டமாக தமிழகத்தில் 14 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் இரவு நேர பாடசாலை தொடங்கப்பட்டது.அந்த வகையில் விராலி மலை சட்டப்பே ரவைத் தொகுதிக்குட்பட்ட விராலி மலை தேரடி வீதியில் விஜய் பயிலகம் தொடங்கப்பட்டது. இதை புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜாபர் பர்வேஸ் திறந்துவைத்து 20 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி பைகள், நோட், புத்தகங்கள், ஸ்டேஷனரி பொருட்களை வழங்கினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் தங்கம் பழனி,சரவணன்,வ ரதராஜன்,தர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    திருமயம் பெருமாள் கோவிலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது

    புதுக்கோட்டை,

    திருமயத்தில் பெருமாள் கோவில் உள்ளது. நேற்று காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவிலில் பாம்பு ஒன்று வந்ததை பார்த்த கோவில் அர்ச்சகர் மற்றும் பொதுமக்கள் திருமயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பெருமாள் கோவிலில் இருந்த 8 அடி நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.கறம்பக்குடி வள்ளுவர் திடல் பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவர் வீட்டில் விஷப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து அவர் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 5 அடி நீள விஷப்பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

    • குடுமியான்மலையில் அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்தது
    • இரவு நேரம் என்பதால் குழந்தைகள் தப்பித்தனர்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள குடுமியா ன்மலையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகி றது. இங்கு மேல பாறை க்களம், கீழ பாறைகளம், ஓச்சப்பட்டி, குடுமியா ன்மலை உள்ளிட்ட பகுதி களில் இருந்து 25 குழந்தை கள் விளையாட்டுடன் கல்வி கற்று வருகின்றனர். மணிமே கலை என்பவர் பணியா ளராக பணியாற்றி வருகி றார்.இந்த நிலையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக ஆட்சியின் போது மராமத்து பணி நடந்தது.தற்போது பெய்து வரும் பருவ மழையின் காரணமாக கட்டிடத்தின் மேற்புறம் காரை இடிந்து விழுந்தது. . இரவு நேரத்தில் இந்த சம்பவம் நேரிட்டதால் விபத்தில் இருந்து குழந்தை கள் காப்பாற்றப்பட்டுள்ள து. குழந்தை களுக்கான அங்கன்வாடி மையத்தின் கட்டிடத்தை கூட தரமில்லா மல் கட்டித்தந்த ஒப்பந்ததா ரர் யார் என்பதை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமில்லாத கட்டிடம் கட்டினால் நடவடிக்கை பாயும் என்ற அச்சம் ஒவ்வொரு ஒப்பந்தகாரர்கள் மனதில் தோன்ற வேண்டும். அப்போது தான் தரமான கட்டிடங்கள் அமைக்கப்படும் என்பதே பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது

    • ஆலங்குடி அருகே வம்பன் கிராமத்தை சேர்ந்தவர் போலீஸ் ஏட்டு மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்
    • ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை,

    ஆலங்குடி அருகே வம்பன் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (வயது 45). இவர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில், ஆலங்குடிக்கு வந்த வைத்தீஸ்வரன் ஆம்பு ஆறு பாலம் அருகே கீழே விழுந்து கிடந்தார். இதை அந்தவழியாக சென்றவர்கள் பார்த்து வைத்தீஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வைத்தீஸ்வரன் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • அறந்தாங்கி காவல்த்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் பெரியையா, இவரது மகன் சரவணன் (வயது 14). இவர் பெருங்காடு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.சரவணன் பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் செல்போனில் கேம் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிரு்துள்ளார்.இதனை அவ்வப்போது பெற்றோர்கள் கண்டித்து வந்துள்ளனர். சம்பவத்தின்போது சரவணன் வழக்கம்போல் செல்போனில் விளையாடியுள்ளான்.இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதில் விரக்தியடைந்த மாணவன் உடனடியாக வீட்டிற்குள் சென்று வீட்டின் கூரையில் தூக்குமாட்டி தொங்கியுள்ளார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தினர் மாணவனை தூக்கிலிருந்து இறக்கி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற் கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    அதனை தொடர்ந்து இறந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்த்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் விளையாடிய மாணவனை பெற்றோர்கள் கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுக்கோட்டையில் வேம்பு, அரசமரத்திற்கு திருக்கல்யாணம் நடைபெற்றது
    • சீர்வரிசை பொருட்களை பெண்கள் தலையில் சுமந்து கொண்டு வந்தனர்

    புதுக்கோட்டை,

    அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் தெற்கு கிராமத்தில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே அரசு, வேம்பு பின்னி இணைந்து தானாக மரமாக தோன்றி உள்ளது. இதை பார்த்த கிராமமக்கள் அரசமரத்தை சிவபெருமானாகவும், வேப்பமரத்தை அன்னை பார்வதி தேவியாகவும் நினைத்து திருக்கல்யாணம் நடத்தினர். இன்று பெண்கள் மேளதாளங்கள் முழங்க தேங்காய், பழங்கள், பட்டு துணிகள் உள்ளிட்டவற்றை தட்டுகளில் வைத்து அதனை சீர்வரிசை பொருட்களாக தலையில் சுமந்து கொண்டு வந்தனர். பின்னர் வேப்பமரத்திற்கும், அரசமரத்திற்கும் திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது

     புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 704 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த போலீசார் அனுமதி அளித்திருந்தனர். அதன்படி அந்தந்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, அலங்காரம் செய்து நேற்று காலை முதல் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். மேலும் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் அகற்றினர். இதில் புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம் அருகே ஆஞ்சநேயர் கோவில் பக்கம் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.

    இந்த சிலை வைப்பதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் உடனடியாக வந்தனர். மேலும் அந்த சிலையை உடனடியாக அகற்றினர். சரக்கு வேனில் கொண்டு சென்று அருகில் உள்ள புதுக்குளத்தில் கரைத்தனர்.

    • கந்தர்வகோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது
    • விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள், சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் அமைந்துள்ள விநாயகர் ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகருக்கு அருகம்புல் மாலை தொடுத்தும், கொழுக்கட்டை, சுண்டல் படைத்தும் வழிபட்டுச் சென்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் கரைக்கும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கந்தர்வகோட்டை பெரிய கடை வீதியில் உள்ள ராஜகணபதிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    • 24 மணி நேரம் அவசர சிகிச்சை பிரிவு கோரி கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
    • 3-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு பின்னர் 2014-ம் ஆண்டு மீண்டும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

    இந்த மருத்துவமனையில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லையில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவ வசதி பெற்ற ஒரு நிலையில் இங்கு போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததாலும், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளதாலும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்ப டுவதி ல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.மேலும் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் அவசர சிகிச்சை பெற முடியாமல் அப்பகுதி மக்கள் பாதிப்பு க்கு உள்ளாகி வரும் சூழல் உருவாகியுள்ளதால் இந்த மருத்துவமனையில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதோடு 24 மணி நேரம் செயல்படக்கூடிய அவசர சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டுமானால் அந்தப் பகுதியை சேர்ந்த பொது மக்களும் வர்த்தகங்களும் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

    ஆனால் சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறையினரும் மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கறம்பக்குடி வள்ளுவர் திடலில் இன்று பொதுமக்கள், வர்த்தகர்கள், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட கறம்பக்குடி அரசு மருத்துவமனை மீட்புக் குழுவினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் காலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கூறுகையில்:புதுக்கோட்டை தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நாள் ஒன்றுக்கு 500 பேர் வரை இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூடிய நிலையில், 24 மணி நேரம் செயல்படக்கூடிய அவசர சிகிச்சை பிரிவை உடனடியாக தொடங்க வேண்டுமென்றும், அதேபோல் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் இந்த பகுதி மக்கள் பலகட்ட போராட்டத்தை நடத்தியும் அதிகாரிகளும் அரசும் அலட்சியமாக இருப்பதாகவும் இனியும் அதிகாரிகள் மெத்தனம் காட்டினால் அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    ×