search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விராலிமலையில் பயிலகம் தொடக்கம்
    X

    விராலிமலையில் பயிலகம் தொடக்கம்

    • விராலிமலையில் விஜய் பயிலகம் தொடக்கம்
    • மாவட்ட தலைவர் ஜாபர் பர்வேஸ் திறந்துவைத்தார்

    விராலிமலை,

    விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விராலிமலையில் தளபதி விஜய் பயிலகம் தொடங்கப்பட்டது. இதில் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி நலத்திட்ட உதவிகள் நடிகர் விஜய் வழங்கினார். இதையடுத்து, நிர்வாகிக ளுடன் 3 நாட்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது, ஏற்கனவே கடலூரில் ஓராண்டாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செயல்படுத்த ப்பட்டு வரும் பாடசாலையில் படித்த பல மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று ள்ளனர் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைக் கேட்ட விஜய், இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செய ல்படுத்த முடிவெடுத்தார்.

    அந்த வகையில், காமராஜர் பிறந்த நாளில் இரவு நேர பாடசாலை தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தொடங்க வேண்டும் என நிர்வாகிக ளுக்கு அறிவுறுத்தினார்.இந்நிலையில், காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி முதற்கட்டமாக தமிழகத்தில் 14 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் இரவு நேர பாடசாலை தொடங்கப்பட்டது.அந்த வகையில் விராலி மலை சட்டப்பே ரவைத் தொகுதிக்குட்பட்ட விராலி மலை தேரடி வீதியில் விஜய் பயிலகம் தொடங்கப்பட்டது. இதை புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜாபர் பர்வேஸ் திறந்துவைத்து 20 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி பைகள், நோட், புத்தகங்கள், ஸ்டேஷனரி பொருட்களை வழங்கினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் தங்கம் பழனி,சரவணன்,வ ரதராஜன்,தர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×