என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
    X

    9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

    • செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • அறந்தாங்கி காவல்த்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் பெரியையா, இவரது மகன் சரவணன் (வயது 14). இவர் பெருங்காடு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.சரவணன் பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் செல்போனில் கேம் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிரு்துள்ளார்.இதனை அவ்வப்போது பெற்றோர்கள் கண்டித்து வந்துள்ளனர். சம்பவத்தின்போது சரவணன் வழக்கம்போல் செல்போனில் விளையாடியுள்ளான்.இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதில் விரக்தியடைந்த மாணவன் உடனடியாக வீட்டிற்குள் சென்று வீட்டின் கூரையில் தூக்குமாட்டி தொங்கியுள்ளார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தினர் மாணவனை தூக்கிலிருந்து இறக்கி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற் கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    அதனை தொடர்ந்து இறந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்த்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் விளையாடிய மாணவனை பெற்றோர்கள் கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×