மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

மழையூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது எம்.எல்.ஏ. முத்துராஜா மாணவர்களுக்கு வழங்கினார்
மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
Published on: 

ஆலங்குடி, 

ஆலங்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேல்நி லைபள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர். முத்துராஜா இரண்டு நாள் பயிற்சி பெற்ற ஜூனியர் ரெட்கிராஸ் சங்க மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மேலும் பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி கள் வழங்கினார்.நிகழ்ச்சியில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவ.பாஞ்சாலன் , ராஜேந்திரன், சந்திரசேகர், பிரபுகாந்தி, சேகர், கணேசன், மணிகண்டன், மதி, ரெங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com