என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒன்றிய பெருந்தலைவரை அவதூறாக பேசியவர் கைது
- கறம்பக்குடியில் அமைச்சர் உதயநிதி-ஒன்றிய பெருந்தலைவரை அவதூறாக பேசியவர் கைது செய்யப்பட்டார்
- தி.மு.க. மகளிர் அணியினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது நடவடிக்கை
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் குழந்தி ரான் பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் மாலா ராஜேந்திர துரை இவர் கறம்பக்குடி ஒன்றியத்தின் பெருந்தலைவராக உள்ளார். அதே ஊரில் வசித்து வரும் சுப்பையா மகன் பாஸ்கர் என்பவர் உதயநிதி ஸ்டாலின்யை விமர்சித்து தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியும், ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரையையும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஒன்றிய பெருந்தலைவர் மாவட்ட மகளிர் அணிக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.வி.சித்ரா தலைமையில் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Next Story






