என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா
    X

    இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

    • இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது
    • அறிவார்ந்த புத்தகங்களை படித்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம் என அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

    ஆலங்குடி

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,

    பல தடைகளை கடந்து சோதனைகளை தாண்டி சென்றால்தான் சாதனையை அடைய முடியும். மாணவ மாணவிகள் கல்வி, விளையாட்டு, நல்ல பழக்க வழக்கங்கள் என அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்க வேண்டும். கொத்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சிலர் சிலம்பம் பயிற்சியை வெளிப்படுத்தினர். அடுத்த ஆண்டு இங்குள்ள அனைத்து மாணவிகளும் சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும். மாணவ மாணவிகள் அறிவார்ந்த புத்தகங்களை படித்து பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் கவுரவப்படுத்தும் வகையில் முன்னேற வேண்டும். உங்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்க வீட்டில் பெற்றோரும் பள்ளிகளில் ஆசிரியர்களும் உழைத்து வருகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக படித்து அனைவரும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஆலங்குடி தாசில்தார் பாலசுப்ரமணியன், திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, கே.வி.சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×