என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளியம்மன் கோவிலில் நகைகள்  திருடிய வாலிபர்களுக்கு போலீஸ் வலை
    X

    காளியம்மன் கோவிலில் நகைகள் திருடிய வாலிபர்களுக்கு போலீஸ் வலை

    • அறந்தாங்கி அருகே காளியம்மன் கோவிலில் நகைகள் திருடிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
    • 7 பவுன் நகைகளை திருடிவிட்டு இருசக்கர வாகனத்தில் மாயமாகினர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே நெம்மேலிக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகத்தில் காளியம்மன் கோவில் அமை ந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக பழனிவேல் உள்ளார்.இந்த கோவிலுக்கு தின ந்தோறும் சுற்றுவட்டா ரங்களிலில் பக்தர்கள் வருகை தந்து சாமியை வழிபட்டு செல்வார்கள். இதனால் இக்கோவிலில் இரு நேரங்களிலும் பூஜைகள் நடைபெறும்.சம்பவத்தன்று அம்மனு க்கு தங்க நகைகளை அணி வித்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் கோவில் பூசாரி அய்யனார் கோவிலில் பூஜை நடத்த சென்றார்.அப்போது அங்கு 2 வாலிபர்கள் சாமி தரிசனம் ெசய்தனர். திடீரென அவர்கள் அம்மன் கழு த்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 7 பவுன் தங்க நகை களை திருடினர்.இதனை கண்டு அதிர்ச்சி யடைந்த பூசாரி சத்தம் போட்டார். இதையடுத்து அந்த வாலிபர்கள் அங்கி ருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி ஞானவேல் அளி த்த புகாரின் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×