search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொய் விருந்து"

    • மொய் விருந்து பத்திரிகை எண்ணிக்கை பார்த்து புலம்பிய நபரின் ஆடியோ வைரல்- பரபரப்பு
    • 80 மொய் பத்திரிக்கை வந்திருப்பதாக கூறினார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவ ட்டம் ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், நெடுவாசல், கறம்பக்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சி ற்றம்பலம், பேராவூரணி, களத்தூர், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, ஆவணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்டு தோறும் ஆடி மற்றும் ஆவணி மாத த்தில் மொய் விருந்து விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த மொய் விருந்தில் டன் கணக்கிலான ஆட்டு க்கறி விருந்து நடத்தப்பட்டு பல கோடி ரூபாய் மொய் பணம் வசூலிக்கப்படும்.

    இந்த மொய் பணத்திற்கு வரி பிடித்தம் இல்லை. மேலும் மொய் விருந்து நடத்தி வசூல் செய்த பண த்தை 5 ஆண்டுகள் வரை சிறுக சிறுக திருப்பி செலுத்த லாம் என்பது நடைமுறையில் உள்ளது.

    இதனால் அதிக அளவில் இப்பகுதி மக்கள் மொய் விருந்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மொய் பண த்தை வைத்து விவசா யம், வியாபாரம் தொழில் போன்றவற்றை செய்து வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றனர்.

    ஆனால் காலப்போக்கில் இந்த மொய் விருந்து எந்த அளவிற்கு மொய்த்தொகை அதிகமாக கிடைக்கிறதோ அதை வைத்து மொய் விருந்தாளர்களின் கௌர வம் எடை போட்டு பார்க்க ப்பட்டதால் சிறிய அளவில் நடந்து வந்த மொய் விரு ந்தில் பெரிய அளவிலான தொகை புரளத் தொடங்கி யது.

    ஆயிரக்கணக்கு லட்ச க்கணக்காக மாறி கோடிக்க ணக்காக வளர்ந்தது. இத னால் சரியான நேரத்திற்கு மீண்டும் மொய் பணத்தை செலுத்த முடியாமல் ஏரா ளமானோர் தங்களது நிலங்களையும் வீட்டில் உள்ள நகை பொருட்க ளையும் விற்கும் அவலம் ஏற்பட்டது.

    அதன் காரணமாக மொய் விருந்து ஆர்வம் குறைந்து தற்போது பெரு ம்பாலான பகுதிகளில் மொய் கணக்கு முடிக்க ப்பட்டு வருகிறது.

    கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் மொய் விருந்து எண்ணிக்கை சற்று குறை வாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக மொய் விருந்து நடத்தப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது.

    கொரோனா காலத்தில் இன்று மாலை எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள பதற்றத்தோடு காத்திருந்தது போல இன்று மாலைக்குள் எத்தனை மொய் பத்திரிக்கை வந்து சேரும் என்று பதட்டம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் மொய் விருந்து பத்திரிக்கை எண்ணிக்கையை பார்த்து மனம் வெறுத்த நபர் ஒருவர் தனது உறவினருக்கு வாட்ஸ் அப் மூலம் தனக்கு 80 மொய் பத்திரிக்கை வந்திருப்ப தாகவும் இதோடு உலகம் அழிந்துவிட போவது போல் மொய் விருந்து நடத்தப்ப டுவதாகவும் புலம்பியு ள்ளார்.

    இந்த ஆடியோ தற்போது வெளியாகி இப்பகுதி மக்க ளிடம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 19 பேர் சேர்ந்து நடத்திய மொய்விருந்து நடைபெற்றது
    • ரூ.1 கோடி வசூல் ஆனது

    புதுக்கோட்டை:

    தமிழர்களின் வீட்டில் நடக்கும் திருமணம், காதணி விழாக்களில் கலந்து கொள்ளும் உறவினர்கள் விழா செலவிற்காக மொய் செய்துள்ளனர். இந்த கலாசார நிகழ்வு கடந்த 30 வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், மாங்காடு, வடகாடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் மொய்க்காக மட்டுமே ஆட்டுக்கறி விருந்து கொடுத்து மொய் வசூல் செய்யும் பழக்கமாக மாறியது. "மொய் விருந்து" என்று அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள் நண்பர்களுக்கு கொடுத்து தொடக்கத்தில் ஆயிரக்கணக்கில் மொய் வாங்கியவர்கள் பிறகு லட்சங்களில் மொய் வாங்கினார்கள். பலர் கோடிக்கணக்கிலும் மொய் வசூல் செய்தனர்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு கஜா புயல் தாக்கத்திற்கு பிறகு விவசாயம் பாதிக்கப்பட்டதால் குறைந்த மொய் விருந்து கொரோனா காலத்திற்கு பிறகு மேலும் குறைய தொடங்கினாலும் கூட ஒவ்வொரு ஆண்டும் மொய் விருந்துகள் நடத்துவோர் எண்ணிக்கை குறையவில்லை. ஆடி மாதத்தில் மட்டும் மொய் விருந்துகள் நடத்துவதால் மொய் செய்வோர் சிரமப்படுவார்கள் என்பதால் இந்த ஆண்டு ஆனி மாதம் முதல் நாளிலேயே கீரமங்கலம் பகுதியில் மொய் விருந்துகள் தொடங்கி நடந்து வருகிறது. வாரத்திற்கு 150 முதல் 200 பேர் வரை மொய் விருந்துகள் நடத்தி வருகின்றனர். இதையடுத்து கொத்தமங்கலத்தில் 19 பேர் சேர்ந்து மொய் விருந்து நடத்தினர். இதில் ரூ.1 கோடி வசூல் ஆனது. அடுத்ததாக மாங்காடு, மேற்பனைக்காடு என பரவலாக மொய் விருந்துகள் நடத்தப்பட உள்ளது.

    • தனி நபர் நடத்திய மொய் விருந்தில் இதுவே அதிகபட்ச வசூலாகும்.
    • மொய் விருந்தில் 15 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தஞ்சாவூர்

    தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனைச்சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அண்டை மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடந்த பல ஆண்டுகளாக மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது. மொய் விருந்து நடத்தியவர்கள் வசூலான பணத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வார்கள்.

    இந்தநிலையில், பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காதணி விழா மொய் விருந்து என்ற பெயரில் மொய் விருந்து நடத்தினார்.

    விழாவில் 100 ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டு 1,300 கிலோ கறியுடன் பெரிய அண்டாவில் மட்டன் குழம்பு, குடல் கூட்டு மற்றும் சோறு சமைக்கப்பட்டு இருந்தது. விழாவில் கலந்து கொண்டோருக்கு இலை நிறைய சோறு, கரண்டி நிறைய கமகமக்கும் கறி விருந்து வைக்கப்பட்டது. இந்த மொய் விருந்தில் 15 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    விருந்து சாப்பிட்டவர்கள் மொய் எழுதினார்கள். இதற்காக பணம் எண்ணும் எந்திரத்துடன் 40 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மொய் எழுதும் இடத்தில் துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    விருந்தில் பங்கேற்றவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஆயிரம் ரூபாய் தொடங்கி ரூ.5 லட்சம் வரை தங்கள் வசதிக்கேற்ப மொய் எழுதி சென்றனர். மாலையில் வங்கி அதிகாரிகள் விழா நடந்த இடத்திற்கு வந்து மொய் விருந்தில் வசூலான பணத்தை எண்ண தொடங்கினர். இதில் ரூ.11 கோடி மொய் வசூல் ஆகி இருந்தது. தனி நபர் நடத்திய மொய் விருந்தில் வசூலான தொகையில் இதுவே அதிகபட்சம் என்று தெரிவித்தனர்.

    • நெடுவாசல் கிழக்கு கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ரூ.2.50 கோடி மொய் வசூல் ஆகியுள்ளது
    • நாடே டிஜிட்டல் மயமாக மாறிவரும் சூழ்நிலையில் இந்த விருந்தில் கலந்துகொண்ட கிராமத்தார் முதல் நகரத்தார் வரை ஆன்லைன் மூலமாக பண பரிமாற்றம் செய்தனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்ட எல்லை கிராமங்களில் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரையில் பாரம்பரிய நிகழ்வான மொய்விருந்து விழாக்கள் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

    கஜா புயல் மற்றும் அதனைத்தொடர்ந்து கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மொய் விருந்து விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

    ஆனாலும் பிறந்தநாள் விழா, காதணி விழா என்ற பெயர்களில் மொய் விருந்து நிகழ்ச்சிகள் ஒருபுறம் நடத்தப்பட்ட போதிலும் வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது.

    களை இழந்து காணப்பட்ட பாரம்பரிய நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஆனி மாதம் இறுதி முதல் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் வெகு விமரிசையாக தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான மொய் விருந்து விழாக்கள் நிறைவடையும் நிலையில் நேற்று முன் தினம் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து ஒரே இடத்தில் மொய் விருந்து விழா நடத்தினர். இதற்காக முன்கூட்டியே அழைப்பிதழ் வழங்கப்பட்டது. தடபுடல் ஏற்பாடுகளுடன் மொய் விருந்து தொடங்கியது.

    இந்த விருந்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அசைவ விருந்தை ருசித்தனர். இதன் மூலம் அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.15 கோடி மொய் வசூல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெடுவாசல் கிழக்கு கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ரூ.2.50 கோடி மொய் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் அந்த விழா நடத்தியவர்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு தனிப்பட்ட முறையில் தலா ரூ.50 லட்சம் வரை மொய் தொகை வசூல் ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த மொய் விருந்து விழாவை நடத்தியவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    நாடே டிஜிட்டல் மயமாக மாறிவரும் சூழ்நிலையில் இந்த விருந்தில் கலந்துகொண்ட கிராமத்தார் முதல் நகரத்தார் வரை ஆன்லைன் மூலமாக பண பரிமாற்றம் செய்தனர். இதற்காக வங்கி ஊழியர்கள் தயார் நிலையில் அங்கு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.

    மேலும் பணம் எண்ணுவதற்கான எந்திரங்களும் அங்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

    ×