search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moi Virunthu"

    • தனி நபர் நடத்திய மொய் விருந்தில் இதுவே அதிகபட்ச வசூலாகும்.
    • மொய் விருந்தில் 15 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தஞ்சாவூர்

    தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனைச்சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அண்டை மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடந்த பல ஆண்டுகளாக மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது. மொய் விருந்து நடத்தியவர்கள் வசூலான பணத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வார்கள்.

    இந்தநிலையில், பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காதணி விழா மொய் விருந்து என்ற பெயரில் மொய் விருந்து நடத்தினார்.

    விழாவில் 100 ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டு 1,300 கிலோ கறியுடன் பெரிய அண்டாவில் மட்டன் குழம்பு, குடல் கூட்டு மற்றும் சோறு சமைக்கப்பட்டு இருந்தது. விழாவில் கலந்து கொண்டோருக்கு இலை நிறைய சோறு, கரண்டி நிறைய கமகமக்கும் கறி விருந்து வைக்கப்பட்டது. இந்த மொய் விருந்தில் 15 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    விருந்து சாப்பிட்டவர்கள் மொய் எழுதினார்கள். இதற்காக பணம் எண்ணும் எந்திரத்துடன் 40 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மொய் எழுதும் இடத்தில் துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    விருந்தில் பங்கேற்றவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஆயிரம் ரூபாய் தொடங்கி ரூ.5 லட்சம் வரை தங்கள் வசதிக்கேற்ப மொய் எழுதி சென்றனர். மாலையில் வங்கி அதிகாரிகள் விழா நடந்த இடத்திற்கு வந்து மொய் விருந்தில் வசூலான பணத்தை எண்ண தொடங்கினர். இதில் ரூ.11 கோடி மொய் வசூல் ஆகி இருந்தது. தனி நபர் நடத்திய மொய் விருந்தில் வசூலான தொகையில் இதுவே அதிகபட்சம் என்று தெரிவித்தனர்.

    ×