என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் முருகேசன் கோரிக்கைகள் குறித்து பேசினார். பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பி.எட் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்து அவமதிப்பதை கண்டித்தும், பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.
Next Story






