கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விசைப்படகு, மீனவர்களுக்கு தடை

நாட்டுப்படகு மீனவர்களுக்கும் தடை செய்யப்பட்டது கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விசைப்படகு, மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விசைப்படகு, மீனவர்களுக்கு தடை
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை தென் தமிழக கடற்கரை பகுதியில் 45 முதல் 55 வரையிலும், அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதியில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com