search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு தொழிநுட்ப கல்லூரியில்  ஸ்மாட் கிளாஸ் திறப்பு
    X

    அரசு தொழிநுட்ப கல்லூரியில் ஸ்மாட் கிளாஸ் திறப்பு

    • அறந்தாங்கி விக்னேஷ்புரம் அரசு தொழிநுட்ப கல்லூரியில் ரூ.12 லட்சம் செலவில் ஸ்மாட் கிளாஸ் திறக்கப்பட்டது
    • முன்னாள் மாணவர்கள் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்டது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விக்னேஷ்வரபுரத்தில் அரசு பல வகை தொழில்நுட்பக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். மின்னணுவியல், தொடர்பியல், அமைப்பியல், மெக்கானிக்கல், கம்யூட்டர் டெக்னாலஜி உள்ளிட்ட துறைகள் உள்ளன. இந்நிலையில் கல்லூரியில் 1997-2020 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவ மாணவியர்கள் சார்பில் கல்லூரியில் வகுப்பறைகளை திறன்மிகு வகுப்பறைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஒரு வகுப்பறைக்கு குளிரூட்டி, ஆர்ஒ வாட்டர், இன்வெர்டர் என சுமார் ரூ.3 லட்சம் வீதம் 4 வகுப்பறைகளுக்கு ரூ.12 லட்சம் நிதி திரட்டி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் குமார், தலைமை ஆசிரியர் ஜோதிமணி, ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன் ஆகியோர் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதே போன்று மற்ற வகுப்பறைகளும் ஸமார்ட் வகுப்பறைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது.முன்னதாக முன்னாள் மாணவ மாணவியர்கள் தங்களது கல்லூரி காலஅனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.

    Next Story
    ×