என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோடியின் நெருங்கிய நண்பர் அதானி மட்டும் தான்
- புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க இளைஞரணி செயல் வீரர் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த அ.தி.மு.க.-வை விரட்ட வேண்டும்
புதுக்கோட்டை,
சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே திருச்சி-தஞ்சை சாலையில் இடையப்பட்டி அருகே புதுக்கோட்டை மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இளைஞர் அணியில் உள்ள நிர்வாகிகளை மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். மேலும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்ல பாண்டியன் ஆகியோரும் பங்கேற்றனர். இதில் உதயநிதி ஸ்டாலின் பேசும் ே பாது கூறியதாவது,திமுகவில் உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு உதாரணம் இளைஞரணி தான், இளைஞரணியில் இருந்து படிப்படியாக முன்னேறிதான் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக உள்ளார், சிலரை போல் டேபிளுக்கு அடியில் புகுந்து யார் காலையும் பிடித்து அவர் முதலமைச்சராகவில்லை. உழைத்து முதலமைச்சராக வந்துள்ளார். சமீபத்தில் ஒரு மாநாடு நடைபெற்றது. மாநாடு எப்படியெல்லாம் நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணமாக நடந்தது. மாநாடு நடத்தியவர்களுக்கு ஏன் அந்த மாநாடு நடைபெற்றது என்றே தெரியவில்லை, பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுகவை விரட்ட வேண்டும், சட்டமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை விரட்டினீர்களோ அதேபோல் 2024ல் அதிமுக எஜமானர்களையும் விரட்ட வேண்டும்.மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் அவரது நெருங்கிய நண்பர் அதானி மட்டும்தான் வாழ்ந்துள்ளார். மக்களுக்கு எதையும் செய்ய வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.