என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். People’s Grievance Day meeting."

    • புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது
    • முதியோர் உதவித்தொகை வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா உத்தரவிட்டார்கள். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில்பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர் களுக்கு எலக்ட்ராணிக் முறையில் பிரெய்லி எழுத்துக்களில் படிப்பதற்காக பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட பிரெய்லி ரீடர் கருவியினை 4 நபர்களுக்கு தலா ரூ.35 ஆயிரம் வீதம்ரூ.1.40 இலட்சம் மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா வழங்கினார். இக்கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செய்யது முகம்மது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்அமீர் பாஷா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும்அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


    • உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
    • திருச்சி மாவட்டத்தில் வருகிற நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கீழ்க்கண்ட வட்டங்களில் நியாய விலைக்கடைகளில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது.

    திருச்சி,

    திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், பொதுமக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி திருச்சி மாவட்டத்தில் வருகிற 10.9.2022 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கீழ்க்கண்ட வட்டங்களில் நியாய விலைக்கடைகளில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது.

    திருச்சி கிழக்கு வட்டத்திற்கு மேலகல்கண்டார்கோட்டை நியாய விலைக்கடை வளாகத்தில் கண்காணிப்பு அலுவலரான திருச்சி துணைப்பதிவாளர் தலைமையிலும், திருச்சி மேற்கு வட்டத்திற்கு உறையூர் நியாய விலைக்கடை வளாகத்தில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், திருவெறும்பூர் வட்டத்திற்கு நவல்பட்டு பர்மா காலனி நியாய விலைக்கடை வளாகத்தில் திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

    ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு குழுமணி நியாய விலைக்கடை வளாகத்தில் திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், மணப்பாறை வட்டத்திற்கு வளையப்பட்டி நியாய விலைக்கடை வளாகத்தில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், மருங்காபுரி வட்டத்திற்கு ராஜாப்பட்டி நியாய விலைக்கடை வளாகத்தில் திருச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தலைமையிலும், லால்குடி வட்டத்திற்கு கோவண்டாக்குறிச்சி நியாய விலைக்கடை வளாகத்தில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், மண்ணச்சநல்லூர் வட்டத்திற்கு அய்யம்பாளையம் நியாய விலைக்கடை வளாகத்தில் திருச்சி மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தலைமையிலும் கூட்டம் நடைபெறும்.

    இதேபோல் முசிறி வட்டத்திற்கு புலாஞ்சேரி நியாய விலைக்கடை வளாகத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், துறையூர் வட்டத்திற்கு பெருமாள்மலை அடிவாரம் நியாய விலைக்கடை வளாகத்தில் திருச்சி கலால் உதவி ஆணையர் தலைமையிலும், தொட்டியம் வட்டத்திற்கு சேர்வைக்காரன்பட்டி நியாய விலைக்கடை வளாகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையிலும் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படும்.

    எனவே பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான கோரிக்கைகளாக குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர கோரிக்கைகளை மேற்காணும் கூட்டங்களில் கலந்துகொண்டு தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×