என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் தார்ச்சாலை
    X

    விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் தார்ச்சாலை

    • பாதிரக்குடி முதல் சேமங்கோட்டை வரை 4 கி.மீ. பழுதடைந்துள்ள சாலை
    • பள்ளி மாணவர்கள் செல்லும் இந்த சாலையை உடனடியாக செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா தீயத்தூரிலிருந்து சேமங்கோட்டை வரை 7 கிலோ மீட்டர் தார்ச்சாைலை போடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையை இணைக்கும் இச்சாலையில் நாள்தோறும் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயணிக்கின்றனர். மேலும் பாதிரக்குடியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலுகின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இதே சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையில் பாதிரக்குடி முதல் சேமங்கோட்டை வரை சுமார் 4 கிலோ மீட்டர் அளவிற்கு தார்ச்சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் இச்சாலையால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு இதுவரை 10 ற்கும் மேற்பட்டோருக்கு எழும்பு முறிவு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பள்ளி மாணவ மாணவியர்கள் பயணிக்கின்ற இச்சாலையில் அசம்பாவிதங்கள் நிகழாவண்ணம், உடனடியாக போர்க்கால அடிப்படையில்

    Next Story
    ×