என் மலர்
உள்ளூர் செய்திகள்

4 பெண்களின் தந்தை பரிதாப பலி
- பழுதாகி நின்ற லாரியின் மீது மோதி 4 பெண்களின் தந்தை பரிதாப பலியானார்
- கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் குருமூர்த்தி(வயது 55). பெட்ரோல் பங்கில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு செல்லும்போது தஞ்சை சாலையில் புதுநகர் சுங்கச்சாவடி அருகே பழுதாகி நின்ற லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் பலியான குருமூர்த்திக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. விபத்து தொடர்பாக குருமூர்த்தி மகள் பிரவீனா கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.
Next Story






